Wednesday, 9 January 2013

தெய்வதிரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா


அகில உலக கிருஷ்ண பக்திக்கழக ஸ்தாபக ஆச்சாரியார் 
தெய்வதிரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி  ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் 
வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள்


1896   புரட்டாதி 1, அபயசரண் டே கொல்கத்தாவில் பிறந்தார்.
           (கிருஷ்ண ஜெயந்தி தினத்திற்கு அடுத்தநாள்)
1901   முதலாவது ரத யாத்திரையை நடத்தினார்.
1916   ஸ்கொட்லாந்திய தேவாலய கல்லூரியில் கல்விபயில ஆரம்பித்தார்.
1918   திருமணம் செய்துகொண்டார்.
1920   கல்லூரியால் வழங்கப்பட்ட பட்டத்தை நிராகரித்து காந்திய வழியில் உடை உடுக்க ஆரம்பித்தார்.
1922    ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதியை (அவரின் வருங்கால ஆன்மீக குரு) முதன் முறையாக சந்தித்தார்.
1925   முதன்முதல் பிருந்தாவனத்திற்கு யாத்திரை செய்தார்.
1932   கார்த்திகை, அலகபாத்தில் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தீட்சை பெற்றுக்கொண்டார்.
1936   மார்கழி 13,  ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி அபயசரணுக்கு கடிதம் எழுதி சைதன்ய மகாபிரபுவின்
           செய்தியை ஆங்கிலத்தில் உபதேசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
1937   தை 1, ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி இறைபதம் எய்தினார்.
1938   பகவத் கீதையை மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.
1939   ஆங்கிலத்தில் பகவத்கீதைக்கு முகவுரை எழுதினார்.
1939   அபயசரணின் புலமைக்காக "பக்திவேதாந்த" எனும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
1940   எழுதி முடிக்கப்பட்ட பகவத்கீதை காணாமல் போனது.
1944   மாசி Back To God Head  என்னும் சஞ்சிகையை கொல்கதாவில் வெளியிட ஆரம்பித்தார்.
1953   ஆச்சாரியார் பிரபாகர் ஜான்சியை - தனது முதல் சீடனாக்கி தீட்சை வழங்கினார்.
1953   வைகாசி 16, ஜான்சியில் பக்தர்களின் கூட்டுறவு ஆரம்பிக்கப்பட்டது.
1954   குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார்.
1956   புரட்டாதி, பிருந்தாவனத்திற்கு குடிபெயர்ந்தார்.
1959   புரட்டாதி 17, மதுரையில் தெய்வத்திரு கேசவ மகாராஜாவிடமிருந்து சந்நியாச தீட்சையை
           ஏற்றுக்கொண்டார்.
1960    விநோதமான விண்வெளிப் பயணம் என்னும் முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
1962   ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தின் முதல் பகுதியை டெல்லியில் வெளியிட்டார்.
1964   ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தின் இரண்டாவது பகுதியை வெளியிட்டார்.
           அடுத்த 13 வருட காலத்திற்கும் மேலாக 60 பகுதிகளுக்கும் அதிகமான ஆன்மீக
           இலக்கியங்களை அவர் எழுதியுள்ளார். 
1964   ஆனி, இந்திய பிரதம மந்திரி சாஸ்திரியை சந்தித்து ஒரு பிரதி  ஸ்ரீமத் பாகவதம் முதல்
           பகுதியைக் கையளித்தார்.
1965   பகவத் கீதைக்கு குறுகிய மொழிபெயர்ப்புச் செய்தார்.
1965   ஆவணி 13, ஜலதூத என்னும் கப்பலில் கொல்கத்தாவிலிருந்து அமெரிக்கா நோக்கிய
           தனது பயணத்தை ஆரம்பித்தார்.
1965   ஆவணி 21, 70வது பிறந்த தினம் (வேத நாட்காட்டியின்படி).
1965   ஆவணி 23, கப்பலில் இரண்டு முறை மாரடைப்பால் பாதிப்படைந்தார்.
1965   புரட்டாதி 19, நியூயோர்க் சென்றடைந்தார்.
1966   சித்திரை, முதல் முறையாக ஆன்மீகத்தில் ஆவலுள்ள மேற்கு நாட்டு மக்களைச் சந்தித்தார். பிறகு
           அவர்கள் தீட்சையைப் பெற்றுக் கொண்டார்கள்.
1966   ஆனி, Bowery 26, நியூயோர்க் இரண்டாவது ஒழுங்கைக்கு இடம் மாறினார்.
1966   ஆடி, அகில உலக கிருஷ்ண பக்திக்கழகத்தை ஸ்தாபித்தார்.
1966   புரட்டாதி 8, அமெரிக்காவில் முதலாவது ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவினை நடாத்தினார்.
           முதன்முறையாக தான் மொழிபெயர்த்து பொருளுரை எழுதிய பகவத்கீதையை வாசித்தார்.
1966   புரட்டாதி 9, அமெரிக்காவில் முதலாவது தீட்சை வழங்கும் விழாவை நடத்தினார்.
1967   தை 16, பக்தி நிலையத்தை திறந்து வைக்க முதல் தடவையாக விமானத்தில் சன் பிரான்சிஸ்கோ
           பயணமானார்.
1967   பங்குனி, சன் பிரான்சிஸ்கோவில் முதலாவது ஜெகந்நாதரின் அர்ச்ச விக்கிரகத்தினை நிறுவினார்.
1967   ஆடி 7, மேற்கில் முதலாவது ரதயாத்திரையை ஆரம்பித்தார்.
1967   புரட்டாதி, மூன்றாவது தடவையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
1968   வைகாசி, மேற்கு வேர்ஜினியாவிலுள்ள புதிய பிருந்தாவனத்திற்கு முதல் தடவையாக
           பயணம் செய்தார்.
1968   ஆவணி, போதனை செய்வதற்காக 6 சிஸ்யர்களை இங்கிலாந்துக்கு அனுப்பினார்.
1969   ஆனி 23, அகில உலக கிருஷ்ண பக்திக்கழகத்தின் முதல்  ஸ்ரீ ராதா கிருஷ்ண விக்கிரகத்தை
           லோஸ் ஏஞ்சலில் பிரதிஸ்டை செய்தார்.
1969   புரட்டாதி 11, முதல் முறையாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.
1969   மார்கழி 14, முதலாவது வைஸ்ணவ ஆலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து  ஸ்ரீ  ஸ்ரீ ராதா
           லண்டன் ஈஸ்வரரை நிறுவினார்.
1970   ஆடி 28, அகில உலக கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஆளுனர் சபையை அமைத்தார்.
1970 ஆடி 29, பக்திவேதாந்த புத்தக நிறுவனத்தை நிறுவினார்.
1970   கடைசி, முதல் முறையாக அமெரிக்க சீடர்களுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்தார்.
           Mac Millan Company யுடன் பகவத் கீதை உண்மையுருவில் என்னும் நூலின் விரிவான
           பதிப்பை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1971   வைகாசி, மாயாப்பூர்  ஸ்ரீதாம் திட்டத்திற்கு 5 ஏக்கர் காணி பெற்றுக் கொண்டார்.
1971   வைகாசி 12, முதலாவது பகவத்கீதை பதிப்பு.
1971   வைகாசி, முதலாவது உலகம் முழுவதுக்குமான போதனையை ஆரம்பித்தார். அவுஸ்திரேலியா,
           சோவியத் யூனியன், ஆபிரிக்கா உள்ளிட்ட உலகம் பூராவும் பக்தர்களுக்கு தீட்சை வழங்கினார்.
1971-1972  பம்பாய், விருந்தாவனம் மற்றும் மாயாப்பூர் ஆகிய இடங்களில் முக்கியமான திட்டங்களை
            ஏற்படுத்தினார்.
1973   ஆடி 7, பிரசித்தமான ரதயாத்திரையை லண்டன் நகரில் நடத்தினார். அதில்  ஸ்ரீல பிரபுபாதா
           Hyde மைதானத்திலிருந்து Trafalgar சதுக்கம் வரையும் ஆடிக்கொண்டே வந்தார்.
1973   புரட்டாதி, பக்தி வேதாந்த MANOR  நிறுவப்பட்டது.
1974   கார்த்திகை 10, சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பையும் பொருளுரையையும்
           எழுதி முடித்தார்.
1975   சித்திரை 20, விருந்தாவனத்தில் பிரசித்தமான கிருஷ்ண பலராம் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.
1975   ஆவணி 22, இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தியை சந்தித்தார்.
1975   ஆவணி 31, சைதன்ய சரிதாம்ருதம் அச்சாகி பூர்த்தியாகியது.
1975   புரட்டாதி 13, விருந்தாவனத்தில் குருகுல கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
1977   கார்த்திகை 14, ஆன்மீக உலகை நோக்கி பயணமானார்.

 ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் மேற்குலகில் இருந்த காலத்தில் தொடர்ச்சியாக
பதின்நான்கு முறை உலகை வலம் வந்து சொற்பொழிவுகளை நிகழ்த்
-தினார். அவர் அகில உலக கிருஷ்ண பக்திக்கழகத்தின் நிர்வாகப்
பொறுப்பை ஏற்றிருந்ததோடு சமஸ்கிருத மொழியில் இருந்த
வேத நூல்களை பக்தி வேதாந்த பொருளுரைகளுடன்
ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ததுடன்
உலகம் முழுவதும் 108 ஹரே கிருஷ்ண
ஆலயங்களை நிறுவி பல ஆயிரக்
கணக்கான சீடர்களையும்
உருவாக்கி தீட்சையும்
வழங்கினார்.
 

No comments:

Post a Comment