Thursday, 3 January 2013

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 
 சமையலறைக்குள் நுழைந்தாலே, நிறைய அழுக்குகள், கறைகள் போன்றவற்றை நன்கு காணலாம். அதிலும் சமையலறையை மூடி விட்டோ அல்லது எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்குள் நுழைந்து சமையலறைக்குள் செல்லும் போதோ, ஒருவித கெட்ட நாற்றம் வரும். இத்தகைய நாற்றம் மற்றும் அழுக்குகளை போக்க என்ன தான் கடைகளில் கெமிக்கல்கள் விற்றாலும், அவை அழுக்குகள் மற்றும் துர்நாற்றத்தை முற்றிலும் போக்குவதில்லை. ஆகவே அதனை போக்க வீட்டிலேயே பல பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக, வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை, உப்பு மற்றும் பல பொருட்கள் வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படுகின்றன. ஆனால் அவ்வாறு சுத்தப்படுத்தும் போது, அவற்றில் ஒன்று தான் மூலப்பொருள். அது என்னவென்றால் அது தான் உப்பு. உப்பு உணவிற்கு சுவையை மட்டும் தருவதோடு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் மிகவும் சிறப்பான பொருளும் கூட. இப்போது அந்த உப்பை வைத்து, எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

 சில்வர் சில்வர் ஸ்பூன் மற்றும் இதர சில்வர் பாத்திரங்களை உப்பை வைத்து தேய்த்து கழுவினால், அவை நன்கு பொலிவோடு மின்னும்.

 பாத்திரங்கள் சமையலில் பூண்டு, முட்டை, அசைவம், வெங்காயம் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், அதில் நாற்றம் எப்போதும் வரும். எனவே அதனை போக்க எலுமிச்சைப் பழத்தை, உப்பில் தொட்டு, தேய்த்தால் நாற்றத்தை தவிர்க்கலாம்.

 ஃப்ரிட்ஜ் ஃப்ரிட்ஜ் சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் இருக்க வேண்டுமெனில், துணியை வினிகர் மற்றும் உப்பு கலவையில் நனைத்து, துடைக்க வேண்டும்.

கண்ணாடி பொருட்கள் கண்ணாடிப் பொருட்கள் சில நேரங்கள் பளிச்சென்று இல்லாமல் இருக்கும். அப்போது அதனை பளிச்சென்று மாற்ற உப்புடன் வினிகரை சேர்த்து தேய்த்தால், பளிச்சென்று மாறுவதோடு, பாக்டீரியா வராமலும் இருக்கும்.
 இரும்பு பாத்திரங்கள் இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் கறைகள் இருக்கும். எனவே அத்தகையவற்றை நீக்க சூடான நீரில் உப்பு சேர்த்து தேய்த்தால், அந்த கறைகள் போய்விடும்.

 உடைகள் துவைத்த உடைகளிலிருந்து நல்ல நறுமணம் வருவதற்கு, துவைத்த பின் அதனை ஒரு முறை உப்பு நீரில் 5-10 நிமிடம் ஊற வைத்து, பிறகு நல்ல நீரில் அலசினால், உடையானது நன்கு அழகாக பொலிவோடும், நறுமணத்துடனும் இருக்கும்.

 கார்பெட்/மேட் தடையில் போடும் கார்பெட் அல்லது மேட்டில் நிறைய மாசுக்கள், அழுக்குகள் இருக்கும். ஆகவே அத்தகையவற்றை போக்க, கார்பெட் அல்லது மேட்டின் மேல் உப்பை தூவி, ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்து, நீரில் அலசினால் ஈஸியாக அழுக்குகளை நீக்கலாம்.

 சிம்னி சமையலறையில் நிறைய எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதனால் சமயலறையிலிருந்து புகையை வெளியேற்றும் சிம்னியில் அதிகப்படியான அழுக்குகள் எளிதில் படியும். அத்தகைய அழுக்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் அவற்றை எளிதில் நீக்க வழி என்னவெனில், உப்புடன் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்த்து தேய்த்தால், அதில் உள்ள அழுக்குகள் எளிதில் போய்விடும்.
 காப்பர் வீட்டில் ஷோக்கேஸில் ஏதேனும் காப்பர் பொருட்கள் இருந்தால், அதில் உள்ள அழுக்குகள் மற்றும் துருக்களை போக்க உப்பை பயன்படுத்தலாம். அதிலம் உப்புடன் சிறிது வினிகரை சேர்த்து, காப்பர் பொருட்களில் தேய்த்தால், அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, நன்கு பளிச்சென்று மின்னும்


ஜீன்ஸ் பொதுவாக ஜீன்ஸை அடிக்கடி துவைக்க மாட்டோம், அதனால் அதில் அழுக்குகள் நிறைய இருக்கும். அந்த அழுக்கை போக்க உப்பு சிறந்ததாக இருக்கும். இதனால் ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் போவதோடு, அதன் நிறம் மங்காமல் இருக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உப்பை நீரில போட்டு, அந்த நீரில் ஜீன்ஸை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் துவைத்தால், அதில் உள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும்.






No comments:

Post a Comment