Saturday, 26 January 2013

காதலும், கல்யாணமும்

காதலும், கல்யாணமும்  
காதலும், கல்யாணமும்   காதலிப்பவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன்வராத நிலையில் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவோம் என்றும், எங்களது காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நாங்கள் இப்படியே இருந்து விடுவோம் என்று கூட சில ஜோடிகள் மிரட்டுகின்றனர். இப்படி மிக நெருக்கமாக காதலிப்பவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாமா? அவ்வாறு செய்தால் அவர்கள் நன்கு புரிந்து கொண்டு ஒத்து வாழ்வார்களா? ஜோதிடம் என்ன கூறுகிறது? காதல் என்பது பொதுவாக பருவத்திற்கு வந்த பிறகு உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் ஈர்ப்பு. ஒரே மாதிரியாக 10 பேர் இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் ஈர்ப்பு வராமல் ஒருவர் மீது மட்டும் ஈர்ப்பு வருவது ஏன்? அதுதான் கிரகங்களின் தாக்கம். காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன். காதலர்களாக இருக்கும் வரை அவர்களை சுக்கிரனே வழி நடத்திச் செல்கிறார். அவர்களே கணவன் - மனைவியாகும் போது லக்னத்திற்கு ஏழாவது வீட்டிற்கு உரிய கிரகமான (சப்தம அதிபதி) வேலை செய்யத் துவங்கிவிடும். காதல் கிரகமான சுக்கிரனுக்கு பகை கிரகமானதே ஏழாவது வீட்டிற்கு உரியதாக இருந்தாலோ அல்லது குரு தசை, அட்டமத்து சனி ராகு திசையில் சனி முக்தி, சனி திசையில் ராகு முக்தி, சூரிய-சந்திர திசையில் ராகு-கேது முக்தி நடைபெற்றாலோ காதல் முறியும். இவர்களுக்கு திருமணம் நடத்திவைத்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள். எனவே, காதலுக்குத் தூண்டும் கிரகத்துடன் திருமணத்திற்கு உதவும் கிரகம் ஒத்துழைத்தால்தான் அந்தக் காதலர்கள் கணவன்-மனைவியாக முடியும்.

1 comment:

  1. நல்ல விளக்கம் தான். நாங்கள் கலப்பு திருமணம் செய்தவர்கள் தான். ஆனால் காதல் திருமணம் அல்ல. ஆகையால் அதன் விளக்கம் புரியவில்லை. நான் முன்பே ஒரு தகவலில் கூறியிருந்தது போல், என் திருமணத்தில் அண்ணல் மட்டும் நோக்கி, என் பெற்றோர்களின் நம்பிக்கையில்லாமையால் செய்து கொண்ட திருமணம். அதன்பின் தான் நாங்கள் செய்தது கலப்பு திருமணம் என புரியவந்தது. இருந்தாலும், நான் முன் வைத்த காலை, பின் வைக்கவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்ற லட்சியம். ஒரு குறிக்கோள் என்னிடம் இருந்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!
    ஒருபடகு கடலில் செல்லும்போது, இரண்டு துடுப்புகளும், ஒருசேர இருந்தால்தான், அது முன்னேறிச் செல்லமுடியும். நாமும் அந்தத் துடுப்பு போன்றுதான் என்று என் கணவரிடம் கூறினேன். நாமும் வாழ்ந்துகாட்டலாம் என்றேன். அன்று என் கணவரும், என்னுடன் மனமொத்து வந்தார். வரலாறு காணாத வாழ்க்கை வாழ்கிறோம். எனக்கு,தாயாகவும், தந்தையாகவும், நண்பராகவும், எதிரியாகவும்,எங்கள் வீட்டு கஷ்ட நஷ்டங்களுக்கு பொறுப்பான ஒரு கணவராகவும், அனைத்துமே அவர் என்ற நிலையில் வாழ்க்கை என்னும் படகு நீந்திச் செல்கிறது. இவ்வாறு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் நடந்து கொண்டால் நலமே. பொருத்தம் பார்த்து, பெற்றவர்கள் முடிக்கும் திருமணத்தில் கூட இந்த புரிந்துகொள்ளுதல் தற்போதைய வாழ்வில் உள்ளவர்களுக்கு இல்லை. சிறு பிரச்சினைக்கும், தாய் வீட்டிற்கு சட்டி, பெட்டியை தூக்கிக்கிட்டு, போயிடுறாங்க. கணவரோடு, பொறுமையாக இருந்து, தவறுகளைச் சரிக்கட்டி, கொஞ்சம் தாழ்ந்துபோனால், அந்தக் குடும்பம் சிறக்கும். ஆகவே, கிரகங்களின் தாக்கம் என்பது, கணவன், மனைவி கைகளில், R காதலன், காதலி கைகளில் தான் இருக்கிறது.

    ReplyDelete