மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடி நன்மை, 7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி பிரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான். அவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம் ரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும் வீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்: வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம். |
No comments:
Post a Comment