Saturday, 26 January 2013

மாளவ்ய யோகம்

மாளவ்ய யோகம்
மாளவ்ய யோகம் சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன். நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான். செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான். Marriage is only a part of the life.Not the whole life Please keep that in your mind! மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன். அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்! கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Malavaya yoga: Venus in its own sign or in exaltation, and in a kendra house - wealthy, loves life, sometimes self-indulgent, good marriage, strong sense of justice.

No comments:

Post a Comment