Saturday, 26 January 2013

புத ஆதித்யா யோகம்

புத ஆதித்யா யோகம்புத ஆதித்யா யோகம் புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்! பலன்: ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். This yoga will give lots of talent, success, honour and fame in society. எல்லோருக்கும் கொடுக்குமா? கொடுக்காது. ஏன் கொடுக்காது? யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது The Sun & Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு) மேஷம் (சூரியனின் உச்ச வீடு) மிதுனம் (புதனின் ஆட்சி வீடு) கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு) ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்! மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும் புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment