அமாவாசையன்று பிறந்தவர்கள்அமாவாசையன்று பிறந்தவர்கள் ஒரு திரைப்படத்தில் நம்ம மணியண்ணன், செந்திலைப் பார்த்து அடிக்கடி இப்படிச் சொல்வார்: “அட, அமாவாசைக்குப் பொறந்தவனே!” அமாவாசையன்று பிறந்தால் இழிவா? இல்லை. எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான். அதை உணர்த்தத்தான் கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தார். ஸ்ரீராமபிரான் நவமித் திதியில் அவதரித்தார். சூரியனும் சந்திரனும் ஒரு ராசியின் 12 பாகைகளுக்குள் இருக்கும் தினம் அமாவாசை. அதுவும் ஒரு பாகை வித்தியாசத்தில் இருக்கும் நேரம் முழு அமாவாசை. அமாவாசையன்று சூரியனின் நெருக்கத்தால் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அமாவாசை திதியில் பிறப்பது அவயோகமாகக் கருதப்படுகிறது. அந்த தினத்தில் பிறக்கும் ஜாதகனின் வாழ்க்கை (மனப்) போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும். சந்திரன் மனதிற்கு உரிய காரகன். அதை நினைவில் வையுங்கள். ஒரு கவிஞன் சொன்னான்: ”சுற்றும்வரை பூமி எரியும்வரை நெருப்பு போராடும்வரை மனிதன்!” ஆகவே போராட்டம் இல்லாத வாழ்க்கை இரசிக்காது. அமாவாசையன்று பிறந்தவர்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் வாழ்க்கை ரசனைக்குரியதாக இருக்கும். பலவிதமான உணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அதோடு (மனப்) போராட்டங்களுக்கான ஆயுதங்களும் உங்களுக்கு வழங்கப்பெற்றிருக்கும். அதவது உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். இல்லையென்றால் உங்களுடைய ஜாதகத்தின் மதிப்பெண் எப்படி 337ஆக வரும் - சொல்லுங்கள்?
No comments:
Post a Comment