Thursday, 3 January 2013

துளசி இலையை காதுக்குப்பின் வைப்பது ஏன்?


   துளசி இலையை காதுக்குப்பின் வைப்பது ஏன்?

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை "காதில் பூவைத்தவன்'' என்று ஏளனமாக கூறுவதுண்டு. ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள்.
மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குபின்புறம் உள்ள பகுதி ஆகும். இதை விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்குபின் உள்ள சருமம் வழியாக ஊடுருவிச் செல்லும்.
இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையை சூடிவந்ததும், பின் சந்ததிக்கு அதைக் கற்பித்ததும் ஆகும். பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஒர் புனிதச் செடியாக பராமரித்து வந்தனர். சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப்பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று நம் முன்னோர்கள் போதித்துள்ளனர்.
வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசித்தரை அமைக்க வேண்டும் துளசித்தரையில் நடுவதற்காக கிருஷ்ணதுளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. துளசி செடிக்குப்பக்கம் அசுத்தமாகச் செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன்பக்கம் செல்ல வேண்டும். துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது
"பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே க்ஷீ ரோதமத நோத்புதே துளசி த்வாம் நமாம்யகம்''
என்ற மந்திரம் சொல்ல வேண்டும்.
துளசிப்பூ பறிக்கும் போது
`துளஸ்வமுத சம்பூதா சதா த்வம் கேசவப்ரியே கேச வார்த்தம் லுனமி த்வாம் வரதா பவ சோபனே'
என்று சொல்ல வேண்டும்.
மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதியுண்டு. அதுபோல பூஜை செய்யாமல் துளசிப்பறிக்க கூடாது

No comments:

Post a Comment