Monday 14 January 2013

மனிதன் ஆயுள்


மனிதன் ஆயுள்


எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம்என்றுசிந்தித்தார் கடவுள்எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவுசெய்தார் அவர்.
தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.
அவற்றைப் பார்த்துஉங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள்தருகிறேன்இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்.குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள்தீர விசாரித்து அவர்கள் குறையைத்தீர்த்து வைக்கிறேன்என்றார் அவர்.
கழுதைகுரங்குநாய்மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர்மற்றஎல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.
முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள்உன் குறை என்ன?என்று கேட்டார்.
கடவுளேஎன் நிலையைப் பாருங்கள்நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச்சுமந்து துன்பப் படுகிறேன்ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை.எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன்முதுகில் சுமையுடன் வரும் நான்,தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன்என்னைஅடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளிமகிழ்ச்சி கொடுமைகளை இல்லைஎன்வாழ்க்கையே நரகம்இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பதுஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக்குறைத்து விடுங்கள்என்று கெஞ்சியது.
சரிபன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன்இனி உன் வாழ்நாள் பதினெட்டுஆண்டுகள் தான்என்றார் கடவுள்.
இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.
அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்னஎன்று கேட்டார்.
கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்கவேண்டும்என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும்.அப்பொழுதுதான் எனக்கு மதிப்புநான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால்எல்லோருமே என்னை வெறுக்கின்றனர்எனக்கு உணவும் கிடைப்பதில்லை,என்றது நாய்.
உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய்குறைத்துவிடுகிறேன்இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான்என்றார் கடவுள்.
மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.
குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றதுஉனக்கு என்ன குறைஎன்றுகேட்டார்கடவுள்.
பல்லைக் காட்டியக் குரங்குகடவுளேமுப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம்ஆயிற்றேஅவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்?உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம்நாட்டியம்ஆடுகிறோம்என்னென்னவோ செய்கிறோம்இருந்தாலும் எங்களுக்குக்கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான்முதுமை அடைந்து விட்டால்எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாதுஅப்பொழுது எங்கள் நிலை மிகப்பரிதாபமாக ஆகி விடும்எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாதுஆகவேஎங்கள் ஆயுளைக் குறையுங்கள்என்று வேண்டியது.
இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள்என்றார் கடவுள்.
குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டதுகடைசியாக இருந்த மனிதனைஅழைத்தார் கடவுள்.
உன் குறை என்னஉனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்என்றுகேட்டார்.
கடவுளேமுப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும்.அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக்கற்றிருப்போம்நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம்.எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத்தொடங்கும் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அதுஇந்தச்சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும்முப்பது ஆண்டு வாழ்நாள்என்பது எங்களுக்குப் போதவே போதாதுஎங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும்,என்று வேண்டினான் அவன்.
இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாதுகழுதையிடம் பெற்ற பன்னிரெண்டுஆண்டுகள்நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள்குரங்களிடம் பெற்ற இருபதுஆண்டுகள் இங்கே உள்ளனஅந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக்கொள்ளலாம்இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள்உனக்கு மகிழ்ச்சிதானே,என்று கேட்டார் கடவுள்.
மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள்கூடுதல்ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.
கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத்தொடங்கினான்முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான்.இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாகவீரனாகபயனுள்ளவனாகவாழ்ந்தான்ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இதுஅடுத்தபன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள்அதனால் அவன் இந்தக் காலத்தில்கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான்சூழ்நிலையால் அடிபட்டுப்பசியாலும் பட்டினியாலும் வாடினான்நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரைநாயின் ஆயுள் அவனுடையதுஇந்தக் காலத்தில் அவன்தான் சேர்த்தபொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான்பிறர் அதைக் கைப்பற்றவந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான்அறுபதிலிருந்து அவன் வாழ்க்கைகுரங்கு வாழ்க்கைதான்தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக்காட்ட வேண்டியதாயிற்றுகிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன்வீடுமகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்றுஅவனும்பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகுஇறந்தான்.

No comments:

Post a Comment