வரவேற்பறை - ஹால்
வீடு என்று ஒன்றிருந்தால் அதில் வரவேற்பறை என்பது அவசியமாகும். வந்தோரை வரவேற்று உபசரித்து பலவற்றை பேசி மகிழ்வதும், விவாதங்கள் செய்வதும் வரவேற்பறையில் தான். உற்றார் உறவினர்கள் யார் வந்தாலும் அமர்ந்து பேச வரவேற்பறையாது மிகவும் வசதியாக இருக்கும். வரவேற்பறையில் ஷோபா செட் போட்டு, தொலைகாட்சி, மற்றும் அலங்காரப் பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் உள்ள செல்ப்புகளில் அடக்கி வைப்பதில் ஒர் அலாதி பிரியம் அனைவருக்கும் உண்டு. வந்தவர்கள் அதை எல்லாம் பார்த்து இது அழகாக இருக்கிறதே எங்கே வாங்கினீர்கள்? எவ்வளவு விலை என்றெல்லாம் கேட்கும் போது ஏற்பட கூடிய இன்பம் இருக்கின்றதே அலாதி தான் போங்கள்
.
வாஸ்து சாஸ்திர ரீதியாக வரவேற்பறை எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது அதற்கும் சில விதி முறைகள் உண்டு.
ஒரு வீட்டின் மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது, வடகிழக்கு பகுதிகளில் அல்லது வடக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் கிழக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் வரவேற்பறையை அமைப்பது மிகவும் சிறப்பாகும்.
வடக்கு பார்த்த வீட்டிற்கு வீட்டின் வடகிழக்கு பகுதியில் வரவேற்பரை அமைப்பது நல்லது.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் வரவேற்வரை அமைப்பது சிறப்பு.
தெற்கு பார்த்த வீட்டிற்கு மிக சிறிய இடமாக இருந்தால் தென்கிழக்கு பகுதியிலும்,சற்று விசாலமான இடமாக இருந்தால் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய வராண்டா அமைத்து விட்டு கிழக்கு சுவற்றை ஒட்டியது போல உட்புறமாக கிழக்கு மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
மேற்கை பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் வரவேற்பறை அமைப்பதும் சற்று விசாலமான இடமாக இருந்தால் ஒரு பகுதியில் சிறிய வராண்டா அமைத்து விட்டு வடக்கு சுவற்றை ஒட்டியது போல வடக்கு மத்தியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
This comment has been removed by the author.
ReplyDelete