Saturday, 26 January 2013

மூலத்திரிகோணம்

மூலத்திரிகோணம்
திரிகோணம் என்றால் தெரியும். அது என்ன மூலத்திரிகோணம்? மூலத்திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கு வேர்ப் பகுதி. ஒரு மரத்தின் வேர்ப்பகுதி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் நமக்குத் தெரியும். அதுபோல ஒரு கிரகத்தின் வேர்ப் பகுதி மூலத்திரிகோணம் எனப்படும்! புதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம்!சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம். மற்ற கிரகங்களுக்கான மூலத்திரிகோண வீட்டைக் கீழே உள்ளது: சூரியன் - சிம்மம் சந்திரன் - ரிஷபம் செவ்வாய் - மேஷம் புதன் - கன்னி குரு - தனுசு சுக்கிரன் - துலாம் சனி - கும்பம் ------- ராகுவிற்கு - கன்னி கேதுவிற்கு - மீனம் ராகு, கேதுவிற்கு சொந்த வீடு கிடையாதே? அவைகளுக்கு எப்படிக் கன்னியும், மீனமும் வேர்ப்பகுதிகளாக இருக்க முடியும் என்று யாரும் கேட்க வேண்டாம். பழைய ஜோதிட நூல் ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கும். மூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் இயற்கையாகவே ஜாதகனுக்கு நல்ல மனைவியைப் பிடித்துத் தருவார் (அட, இது நன்றாக இருக்கிறதே!) ராசி வரிசையில்/கிரகச்சுற்றில் இது ஏழாம் இடம். அதை மனதில் வையுங்கள். மூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான் இயற்கையாகவே ஜாதகனுக்குத் தர்மப்படி நடக்கும் சூழ்நிலையையும், உரிய காலத்தில் குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார் (அட, இதுவும் நன்றாக இருக்கிறதே!) மூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு நிகரானது. அதோடு பாதுகாப்பானது. சொந்த வீட்டில் அக்கிரகம் இருப்பதால் பாதுகாப்பானது. அக்கிரகம் வலிமையாக இருப்பதுடன், ஜாதகனுக்குப் பல நன்மைகளையும் அள்ளித்தரும்! ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தமத்தில் பலன்கள் இரட்டிப்பாகும். நல்லதும் இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமைகளும் இரட்டிப்பாகும். மூலத்திரிகோணத்தில் அந்தப் பிரச்சினை இல்லை! அதை மனதில் வையுங்கள்

No comments:

Post a Comment