Saturday, 12 January 2013

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழம்

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது அவோகேடோ தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் அந்த அவோகேடோவை வெறும் ஃபேஸ் பேக் என்று மட்டும் பயன்படுத்தாமல், பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் இந்த அவோகேடோ பழம் உதட்டிற்கும் மிகவும் சிறந்தது. இப்போது அற்புதமான அவோகேடோ பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவோகேடோ ஃபேஸ் பேக் இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்


அவோகேடோ ஸ்கரப் பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்


அவோகேடோ மற்றும் பப்பாளி பேக் இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

அவோகேடோ ஸ்டோன் மசாஜ் வீட்டிலேயே ஸ்பா சிகிச்சை செய்ய வேண்டுமா? அப்படியெனில் அவோகேடோ ஸ்டோன் மசாஜ் செய்து பாருங்கள். அதற்கு அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்

அவோகேடோ தேங்காய் க்ரீம் இந்த க்ரீம்மை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கலாம். மேலும் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்திருப்பதால், பழுப்பு நிற சருமம் மற்றும் சரும பிரச்சனைகளான அரிப்பு, தோல் செதில் செதிலாக வருவது போன்றவை நீங்கும்.

அவோகேடோ எண்ணெய் பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்

அவோகேடோ ஜூஸ் இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்



1 comment:

  1. அவோகேடோ பழத்தின் தோற்றம் தெரியாது எவ்வாறு இருக்குமென.

    ReplyDelete