Saturday, 26 January 2013

பத்ரா யோகம்

பத்ரா யோகம்பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான். அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்! அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்! வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான். செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான். கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house - intellectual, learned, rich.

No comments:

Post a Comment