Wednesday, 9 January 2013

நுரையீரலின் நுணுக்கங்கள்


நுரையீரலின் நுணுக்கங்கள் - அவசியம் படிக்க வேண்டிய பதிவு !!!

                ஒவ்வொரு மனிதனின் நுரையீரலுக்குள் சுமார் மூன்றாயிரம் கன சென்டிமீட்டர் காற்று நிரப்ப முடியும். மனிதன் தன நுரையீரல் முழுவதிலும் சளியை நிரப்பி விடுவதால், இன்று முந்நூறு கன சென்டிமீட்டர் காற்றைத்தான் சுவாசிக்கிறான். எனவே , மனிதனுடைய உண்மையான சக்தியில் 32 சதவிகித சக்தியில்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். 
 
             உணவு செரிமானத்தின் கடைசிக்கட்டம் நுரையீரலில்தான் நிகழ்கிறது. செரிக்கப்பட்ட உணவுக்குழம்புகள் குடலுறிஞ்சிகளினால் உறிஞ்சப்பட்டு, ரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலை வந்தடைகிறது. சுவாசிக்கின்ற காற்றில் கிடைக்கும் பிராண வாயுவைப் பெற்று, அது ஆக்சிஜன் நிரம்பிய உயிர் செல்களாக மாற்றப்படுகிறது.  ஒரு மனிதன் ஜீரணித்த உணவு இரண்டு கிலோ என்று வைத்துக் கொள்வோம், அவனுடைய நுரையீரலால் ஒரு கிலோ உணவில்தான் ஆக்சிஜனை நிரப்ப முடியும். என்றால் மீதமுள்ள உணவு தேவையின்றி கழிவுப்பொருளாகத்தான் உடலை நிரப்பிக்கொண்டிருக்கும். அதை வெளியேற்றுவதே பெரிய வேலையாகி விடுகிறது. இந்த வேலைக்கே , முதலில் ஜீரணிக்கப்பட்ட உணவில் முக்கால் பங்கு செலவாகி விடும். 
                   
                மனிதன் உணவின்றி ஐந்தாயிரம் நிமிடங்கள் வரை எளிதாக உயிர் வாழ முடியும். ஆனால், சுவாசிக்காமல் ஐந்து நிமிடங்களே அதிகமாகும். ஆகையினால், உயிர் வாழ உணவை விட, காற்றின் தேவை ஆயிரம் மடங்கு அதிகமாகும்.
        
               மனிதன் எவ்வளவு அதிகமாக சாப்பிட முடியும் என்பதில் இல்லை ஆரோக்கியம். எவ்வளவு குறைவாகச் சாப்பிட்டால் போதுமானது என்று தீர்மானிப்பதில் இருக்கிறது ஆரோக்கியம். எவ்வளவு அதிகமாகக் காற்றை சுவாசிக்க முடியுமோ , அந்தளவிற்கு அதிகமான  ஆரோக்யமாக நம்மால் வாழ முடியும்.  நாம் எவ்வளவு சுவாசிக்கிறமோ, அது நம் உடலுக்குள் எவ்வளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. உள்ளிழுக்கப்படும் ஆக்சிஜன், மூளை நரம்பு அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்லுக்கும் சக்தியளிக்கிறது. நோயாளிகள் சுத்தமான காற்றை அதிகமாகச் சுவாசிக்க வேண்டும். 
  
                நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், இவ்வனைத்தின் எடையை விட, சுவாசிக்கும் காற்றின் எடை மிக அதிகம். எனவே, உடலின் சொர்க்கம் என்று கருதப்படும் நுரையீரல், சுவாசம் எனும் எரிபொருளைப் பெற்றும் விநியோகித்தும் சக்தியை அளிக்கிறது. அவ்வாறு பிராணவாயுவின் விநியோகம் நடைபெற, சுவாசத்தின் மத்தியக்கிடங்காக நுரையீரல் பணியாற்றுகிறது. 
    
                   நம் நுரையீரலிலுள்ள 25 பில்லியன் , அதாவது 2500 கோடி காற்றுப்பைகளை விரித்தால், அதை ஒரு டென்னிஸ் கோர்ட் அளவுக்கு விஸ்தீகரிக்கலாம். நுரையீரல்தான் நம் ரத்தம் முழுவதிலும் ஆக்சிஜனை நிரப்புகிறது.  நமது உடலுக்கும், ஆகாயத்திற்கும் இடையில் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு பரிமாற்றத்திற்கும் உறுதுணை புரிந்து, நமது வாழ்வாதாரத்திற்குத் தேவையான உயிரூட்டமுள்ள சக்தியையும் அளிக்கிறது நுரையீரல்.
  
               நம் உயிரின் ஆதாரமான பிராண சக்தியை முறையாகவும், ஆழமாகவும் உள் வாங்கி, மெதுவாகவும், முழுமையாகவும் வெளியிடுவதன் மூலம், நுரையீரல் ஆற்றும் பணிக்கு நாமும் உறுதுணையாக இருக்கலாமே!!!

No comments:

Post a Comment