Saturday, 26 January 2013

ஜெனன கால திசை இருப்பு

ஜெனன கால திசை இருப்பு
நவக்கிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரபகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் எதிலும் தைரியமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்;. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் வலு இழந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும் மனோதைரியம் குறைவாக இருக்கும். சந்திரன் பலம் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கியமாகும். ஒரு வரது உணர்ச்சி பூர்வமான செயல்களை சந்திரன் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம். வளர்பிறைச் சந்திரன் முழு சுபர் ஆவார். தேய் பிறைச் சந்திரன் பாவி கிரகம் ஆவார். அமாவாசை முதல் பவுர்ணமி வரை வளர்பிறைக் காலமாகும். இக்காலத்தில் சந்திரன் சுபகிரகமா கவும், சற்று பலம் பெற்ற கிரகமாகவும் இருக்கும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை யாகும். இக்காலத்தில் சந்திரன் சற்று பலம் இழந்து இருப்பார். ஜெனன ராசி சக்கரத்தைக் கொண்டு ஜாதகர் வளர் பிறையில் பிறந்தாரா அல்லது தேய்பிறையில் பிறந்தாரா என்று மிகத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்றால் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும். ஜென்ம ராசியைக் கொண்டே கோட்சார பலனை நிர்ணயம் செய்கிறோம். பிறக்கும் நேரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சென்ற நேரமே ஜெனன கால திசை சென்றது ஆகும். சந்திரன் சஞ்சாரத்தில் மீதி உள்ள நேரம் ஜெனன கால திசை இருப்பு, காலமாகும்.

No comments:

Post a Comment