Wednesday 9 January 2013

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?


நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?



                 ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed  என்பர்.ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1) அஸ்வினி  - கேது -  நவமுகம்
(Alpha, Beta - Aries)

2)பரணி சுக்ரன் ஷண்முகம்
(No 28,29,41 Taurus)

3)கார்த்திகை சூர்யன் ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
(Pleiades)

4)ரோஹிணி சந்திரன் த்விமுகம்
(Aldebaran Hyades, Epsilon Taurus)

5)மிருகசீரிஷம்  - செவ்வாய் த்ரிமுகம்
(Lambda, Phi 1, Phi 2, Orion)

6)திருவாதிரை ராகு அஷ்டமுகம்
(Betelgeaux - Alpha Orion)

7)புனர்பூசம் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
(Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively)

8)பூசம் சனி சப்தமுகம்
(Gama, Delta and Theta of Cancer)

9) ஆயில்யம் புதன் சதுர்முகம்
(Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra)

10) மகம் கேது நவமுகம்
(Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis)

11)பூரம் சுக்ரன் ஷண்முகம்
(Delta and Theta Leo)

12)உத்தரம் சூர்யன் ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
( Beta and 93 Leo)

13)ஹஸ்தம் சந்திரன் த்விமுகம்
(Delta, Gama, Eta, Virgo)

14)சித்திரை செவ்வாய் த்ரிமுகம்
(Spica, Alpha Virgo)

15)ஸ்வாதி ராகு அஷ்டமுகம்
(Arcturus - Alpha Bootes)

16)விசாகம் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
( Alpha, Beta etc Libra)

17)அனுஷம் சனி சப்தமுகம்
(Beta, Delta, Pi -Scorpia)

18)கேட்டை புதன் சதுர்முகம்
( Antares Alpha, Sigma Tau Scorpio)

19)மூலம் கேது நவமுகம்
(Scorpio, tail stars)

20)பூராடம் சுக்ரன் ஷண்முகம்
(Delta and Epsilon Sagittarius)

21)உத்திராடம் சூர்யன் ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
(Zeta and Omicron Sagittarius)

22)திருவோணம் சந்திரன் த்விமுகம்
(Altair - Alpha Aquila)

23)அவிட்டம் செவ்வாய் த்ரிமுகம்
(Delphinus)

24) சதயம் ராகு அஷ்டமுகம்
(Lambda Aquarius)

25)பூரட்டாதி சனி பஞ்சமுகம்
(Alpha and Beta Pegasus)

26)உத்திரட்டாதி சனி சப்தமுகம்
(Gama Pagasus and Alpha Andromeda)

27)ரேவதி புதன் - சதுர்முகம்
(Zeta Piscum)


                    இந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவாஇருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள்.

அனைவரும் தமக்குரிய ருத்ராக்ஷங்களை அணிந்து நலம் பெறலாமே!

No comments:

Post a Comment