Tuesday, 8 January 2013

பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா?


உங்களுக்கு பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா?

இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. கணவனும் மனைவியும் தங்களின் உடலை ரீ சார்ஜ் செய்து கொள்ளும் இடமே படுக்கையறையாகும். இனிமையான செக்ஸ் லைஃபுக்கு படுக்கையறையின் பங்கு கணிசமானதாகவே இருக்கிறது. படுக்கையறையானது அனைத்து அம்சங்களுடன் அமைந்து விட்டால் அந்த குடும்பத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைக்கும் படுக்கையறையிலேயே சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்
பெட்ரூம் மேனர்ஸ்
படுக்கையறையில் கணவன் மனைவி இருவரும் அன்பு வழியும் பாசப் பிணைப்புடன் இருப்பார்கள். ஆனால் சமயங்களில் அவர்களையும் அறியாமல்… பலவீனமாக நடந்து கொண்டு விடுவார்கள். இது அந்த நேரத்து இனிமையை தகர்த்து விடக்கூடும். எனவே தான் எந்த நேரத்தில் எப்படி எல்லாம் தம்பதிகள் நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆங்கிலேயர்கள் வரையறுத்தார்கள். அவர்கள் கூறிய முக்கியமான விஷயம் தான் பெட்ரூம் மேனர்ஸ். படுக்கையறையில் கணவனும், மனைவியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் பெட்ரூம் மேனர்ஸ் ஆகும்.
நாகரீகமான தாம்பத்யம் 
படுக்கையறையில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மதிப்பது தான் இதன் அடிப்படை அம்சம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் படுக்கையறையில் தம்பதிகள் நாகரிகமாக நடந்து கொள்வது என்று சொல்லலாம். கணவன் மனைவி என்கிற உன்னதமான உறவு முறையில் அடிப்படையில் உடலுறவை மேற்கொள்ளும் போது, அவர்களிடையே பூரணமான, நிம்மதியான சுகம் கிடைக்க இந்த பெட்ரூம் மேனர்ஸ் வழி வகுக்கிறது. அருமையான, அழகான பெட்ரூம் மேனர்ஸ் தம்பதியரின் தாம்பத்திய வாழ்க்கையை திருப்திகரமானதாக உயர்த்தி, மெருகூட்டும்.
சுகாதாரமான நடவடிக்கை
கணவன் மனைவி இரண்டு பேரும் நன்றாக பல் துலக்கி விட்டு, முடிந்தால் ஒரு குளியலைப் போட்டு விட்டு படுக்கை அறைக்குள் நுழையாலாம்.
இல்லற சுகம் காண முயல்கிற தம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு முன்பாக மிதமான சுடுநீரில் குளித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் திகழும்.
தம்பதிகள் இரண்டு பேரும் உறவுக்கு நுழையும் முன்பாக, தங்களின் பிறப்புறுப்புகளை சுத்தம் செய்து கொள்வது நல்லது. கணவன் தனது பிறப்புறுப்பின் முன் தோலைப் பின்னுக்கு தள்ளி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். மனைவியும் சுய சுத்தம் கடைபிடிப்பது அவசியமாகும்.
பிரச்சினையை பேசாதீர்கள் 
வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டுக்கு வெளியே செருப்பை கழற்றி விடுவது மாதிரி… படுக்கையறைக்குள் நுழைகின்ற தம்பதிகள் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை உள்ளே கொண்டு போகாமல் இருப்பது நல்லது. படுக்கையறைக்குள் வந்தவுடன் தான் பல பேர் அடுத்த மாசம் வரப் போகிற ஒரு விழாவிற்கு என்ன மாதிரியான டிரெஸ் எடுப்பது என்பதை பேசுவார்கள். அல்லது கணவன் மனைவியிடமோ, அல்லது மனைவி கணவனிடமோ கோர்ட்டில் வழக்கு தொடுப்பது மாதிரி யார் மீதாவது குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பார்கள்.
புத்துணர்ச்சியுடன் இருங்கள்
பல கணவன் மனைவி திருமணம் முடிந்த பிறகு இன்னமே நமக்கு என்ன இதெல்லாம் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் தான் ஆடை உடுத்துவார்கள், தங்கள் தோற்றம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள் எதிலும் ஒழுங்கானவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறது உளவியல் குறிப்பு ஒன்று.
படுக்கை அறையில் மனைவி ஜடமாக இருக்கக் காரணம் படுக்கை அறையின் வெளியிலே அவள் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதை பொருத்து அமையும். எனவே பெண் எதிர்பார்ப்பது போல படுக்கை அறையில் மட்டுமல்லாமல் வெளியேயும் அன்பாக, ஆதரவாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்கள் இல்லறம் இனிய சங்கீதம் ஒலிக்கும் நல்லறமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment