Thursday, 31 January 2013

இராகு கேது தோஷம்


இராகு கேது தோஷம்  உள்ளவர்களா ? கவலை வேண்டாம்

1) லக்னத்தில் கேது  7-ல் இராகு இருக்க பெற்றவர்கள்.
2)லக்னத்திற்கு 7-ல் கேதுவோடு சுக்கிரன் அமைய பெற்றவர்கள்.
3) லக்னத்திற்கு 8-ல் செவ்வாயோடு இராகு அமைய பெற்றவர்கள் தலை சிதறி இறக்கும்் துர்பாக்கியம் உண்டு, ஆனால் காளத்தியப்பரை வழிபட்டால் நல்வாழ்வு சிறக்கும்.
4)லக்னத்தில் சூரியன் இராகு கூடி 7-ல் கேதுவோடு செவ்வாய் இருக்கும் பெண் இளம் வயதில் விதவை ஆகலாம் , ஆனால் காளஹஸ்தியில் இராகு கேது தோஷம் கழித்தால் கணவனுக்கு பூரண ஆயுள் கிடைக்கும்.
5) லக்னத்திற்கு 4-ல் இராகு வோடு சனியும் 10-ல் சூரியனோடு கேது அமர்ந்தால் தந்தை மகனுக்கு ஆகாது , தந்தையை கொலை செய்யும் அளவிற்கு மகன் துணிவான் ஆனால் திருநள்ளாறு ஈசனையும் , இராகு கேது தோஷம் கழித்தால் தந்தையும் மகனும் நாட்போடு வாழ்வர்.
6)லக்னத்திற்கு 5-ல் கேதுவோடு சனியும் 11-ல் இராகுவோடு புதனும் அமர்தால் தன் சொந்த பந்தங்களை விட பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் கோடீஸ்வர யோகமாகும் , ஆனால் அதனை ஆள மக்கட்பேறு பாக்கியம் இல்லை.ஆனால் காளஹஸ்தி ஈசனை வணங்கினால் மக்கட் செல்வம் உண்டாகும்.
7)லக்னத்திற்கு 2-ல் கேதுவோடு  சேர்ந்து சனியும் 8-ல் இராகுவோடு சோந்து குருவும் அமைந்தால் , ஞானியாகும் வாய்ப்பும்
நாணயமான ஒழுக்கமுள்ள குழந்தையாக , ஆபூர்வ குழந்தையாக பிறக்கும் , இப்பிறவி முன் பிறவியில் காளஹஸ்தி ஈசனை வழிபட்டு இறந்த புண்ய ஆத்மாவாகும்.
8) லக்னத்திற்கு 9-10-11 க்குடையோர் சேர்ந்து 5-9-10ம் இடங்களில் ஒன்று கூடி இருந்தால் மிக பெரிய ராஜ‌ யோகமாகும் ஆனால் இராகு கேது கிரங்களுக்குள் தர்ம் கர்மாதிபதிகள் 3  மாட்டி கொண்டால் யோகம் முழுவதும் செயல்படமுடியாமல்  போகும் , ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து உலகம் போற்றும் உத்தமராக வாழ்வார்.
9) கேதுவோடு புதன் சேர்ந்து 12-ம் விட்டில் இருந்து 6-ம் வீட்டில் இராகுவோடு சுக்கிரன் அமர்ந்தால் இதில் ஏதாவது ஒரு கிரகம் உச்சம் ஆட்சியில் இருந்தால் மகாலட்சுமி யோகமாகும் , வெளிநாடுகளில் இருந்து செல்வம் சேர்ந்து தன்னை நம்பியவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக இருப்பர் 12-ம் இட கேது புதனால் கெட்ட சகவாசமும் ஏற்படும் இராகு கேது  தோஷம் கழித்தால் உலகம் உள்ளவரை பெயர் அழியாம்ல் பாதுகாக்கப்படும்.
10) லக்னடத்திற்கு 7-ல் இராகுவோடு சூரியன் சந்திரன் சேர்ந்தால் மனதைரியம் குன்றியவராகவும் மனநிலை பாதிக்கபட்டவராகவும்  திருமணதடை ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து  மன தைரியம் , மன நிம்மதி , திருமண பாக்கியம் ஏற்பட்டு இன்புற்று வாழ்வர்.
11) லக்னத்திற்கு 8-ம் வீட்டில் கேது சனி செவ்வாய் சேர்திருந்தும் குரு சுக்கிரன் ஸ்தானங்களில் இருந்து எட்டாம் வீட்டிற்கு பார்வைபடாமல்  இருந்தால் விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களை இழக்கும் துர்பாக்கியம் ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால்இராகு கேது மன மகிழ்ந்து  விபத்துகளில் இருந்து பாதுகாக்கபட்டு சிறிய காயங்களோடு தப்பி விடுவர்.
12) சாதாரண குடிமகனை நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதியாகவும் , நாட்டை ஆளும் பிரதமராகவும் மாற்றும் சக்தி இராகு கேதுவிற்கு மட்மே உண்டு சுயநலம் ஆணவபோக்கு அதிகார துஷ்பிரயோகம் , வறுமையானவர்களை எட்டி உதைப்பது , பிறர் சொத்தை அபகரிக்கும்  தனவான்களை சாதாரண நிலைக்கும் கொண்டுவந்து நாடு கடத்தும் சூழ்நிலைக்கு தள்ளபடுவது  இராகு கேதுவின் வேலையே ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் மனதில் நல்லெண்ணம்  மட்டுமே பிறக்கும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்!!!





ஆந்திரமாநிலம்,சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.இங்கே காளத்தியப்பராக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.
இங்கேதான் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தி நிரூபணமாகியது.1990க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த புராணச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை;இருப்பினும்,ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய இந்த பாதாள பைரவப் பெருமானின் பெருமைகளை விளக்குவது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் கடமை ஆகும்.யாருக்கெல்லாம் ராகு அல்லது கேதுவால் கடுமையான பாதிப்பு இருக்கிறதோ அவர்களும் இந்த பாதாளபைரவப் பெருமானை தொழுது வழிபடலாம்;ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய இந்த பாதாள பைரவப் பெருமான் ஸர்ப்ப தோஷங்களையும் நீக்குபவர் ஆவார்.ஆயில்யமே ஒரு பாம்பு நட்சத்திரம் தானே!!
நாம் கலியுகம் 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.இதற்குச் சமமான கிறிஸ்தவ வருடம் கி.பி.2013 ஆகும்.கலியுகம் செல்லச் செல்ல கடுமையான பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களும்,மிகவும் யோகங்கள் நிறைந்த ஆத்மாக்களுமே அதிகமாகப்பிறப்பார்கள்;அப்படிப்பட்டவர்களும் வழிபட வேண்டிய பைரவர் இந்த பாதாள பைரவப் பெருமான் ஆவார்.ஒருவேளை உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இந்த ஆன்மீகக்கடல் பதிவினை வாசித்துவிட்டு,இந்தியாவில் ஆந்திரமாநிலம் காளஹஸ்திக்கு வர முடியாதவர்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் எழுதி வந்தாலே போதுமானது.ஒரு சில வருடங்களுக்குப்பிறகு,உங்களுக்கு காளஹஸ்திக்குச் செல்லும் வாய்ப்பை பாதாள பைரவப் பெருமானே எற்படுத்தித் தருவார்.


“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கண்ணப்ப நாயனார் தொண்டை நாட்டின் உடுப்பூரில் வேடர் குலத்தில் பிறந்தவர்.நாகன் என்னும் வேடர் குலத் தலைவர்க்கு மகனாகத் தோன்றினார்.திண்ணன் எனப் பெயரிடப்பட்டார்.தம் குல வழக்கப்படி வேட்டையாடும் தொழிலில் வல்லவரானார்.உரியகாலத்தில் திண்ணனார் வேடர் குலத் தலைவரானார்.
ஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்.நீண்டநேரம் வேட்டையாடிய பிறகு திருக்காளத்தி மலையைச் சென்றடைந்தார்.அங்கு காளத்தியப்பரைப் பார்த்தவுடன் முன்பிறவிப் பயனால் பக்தி மிகுதியால் கண்ணீர் சிந்தி வழிபட்டார்.நீராட்டி,பூச்சுட்டியிருப்பதைப் பார்த்தார்.தனித்து இருக்கும் காளத்தியாரைப் பிரிய மனமின்றி உருகி நின்றார்.இறைவனுக்கு உணவு படைக்க தரமான இறைச்சியைத் தேடிச் சென்றார்.புதிதாக வேட்டையாடிய பன்றி இறைச்சியை சமைத்து,சரியான நேரத்தில் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொண்டு வந்து,கட்டினார்.பொன்முகலி ஆற்று நீரை வாயில் எடுத்துக்கொண்டு(அந்தக்காலத்தில் மண்பாத்திரம் தான்! காட்டுப்பகுதியில் அதுவும் கிடைக்கவில்லை;),இறைவனுக்குப்படைக்கவேண்டிய பூக்களை தலையில் வைத்துக் கொண்டு காளத்தியப்பர் இருப்பிடம் தேடிச் சென்றார்.சிவலிங்கத்தின் உச்சியில் சூடப்பட்டிருந்த பூக்களை தனது காலால் தள்ளிவிட்டு, தனது வாயில் இருந்த ஆற்றுநீரால் அபிஷேகம் செய்தார்;பிறகு தனது தலையில் சுமந்து வந்த பூக்களை சூடினார்.சமைத்த பன்றி இறைச்சியை படையலிட்டார்.இரவு முழுவதும் இறைவனுக்குக் காவலாக இருந்தார்.சூரியன் உதயமானதும்,புறப்பட்டார்.


சிவாச்சாரியார் வந்து இறைச்சித்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும்,காலணிச்சுவடுகள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனார்.திருக்கோவிலை தூய்மை செய்து முறைப்படி நீராட்டிப் பூசை செய்தார்.அன்றாடம் திண்ணனார் தம் வழக்கப்படி நீராட்டி,பூச்சூட்டி, ஊண் அமுது படைத்தார்.சில நாள் இவ்வாறு நடக்க சிவகோசரியார் மனம் வருந்தி,இறைவனிடம், “இக்கொடுஞ்செயலை தினமும் செய்வது யார்? என்றுத் தெரியவில்லை; தங்கள் திருவருளால் இவ்வாறு இனி நடக்காமல் தடுக்க அருள வேண்டும்” என்று மனப்பூர்வமாக வேண்டினார்.


அன்று இரவே காளத்தியப்பர் அவர் கனவில் தோன்றி, “அன்புநிறைந்த அவனை கொடியவன் என்று நீ எண்ணுகிறாய்;அது முற்றிலும் தவறு;அவனது செயல்களில் இருக்கும் அன்பை மட்டுமே யாம் கவனிக்கிறோம்;நாளை நீ விரைவாக வந்து எமக்கு அருகே ஒளிந்திருந்து கவனி;அவனது அன்பு எத்தகையது? என்பது உனக்கும் புரியும்”என விளக்கமளித்திவிட்டு மறைந்துவிட்டார்.

அதேபோல சிவகோசரியார் வெகுநேரம் முன்பாகவே வந்து மறைந்துநின்று நடக்க இருப்பதைக் கவனிக்கத் தயாரானார்.திண்ணனார் வழிபடத்துவங்கிய 6 ஆம்நாளாகிய அன்று,வழக்கம் போல ஊனும்,மீனும்,பூவும் கொண்டு வந்தார்.திண்ணனார் காளத்தியப்பரை நெருங்கியதுமே சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;இதைக் கண்ட திண்ணனார் பதறித் துடித்துப் போனார்;உடனே,அருகில் ரத்தம் வழிவது நிற்கும் மூலிகைச் செடியில் இருந்து ஒரு இலையை பறித்து,அதைப் பிழிந்து அந்த கண்ணின் மீது விட்டார்;இருந்தும் இரத்தம் வழிவது நிற்கவில்லை;உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது;தனது கண் ஒன்றை தன்னுடைய அம்பால் தோண்டி எடுத்து அந்த ரத்தம் வழியும் கண்ணில் பொருத்தினார்.உடனே ரத்தம் வழிவது நின்றது;ஆனால்,அடுத்த கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;எனவே,தனது கால் பெருவிரலால் அந்த ரத்தம் வழியும் இன்னொரு கண்ணுக்கு அருகே மிதித்து(அடையாளத்துக்காக) தனது இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுத்துப் பொருத்த முயல,காளத்தியப்பராகிய சதாசிவன் நேரில் தோன்றினார். தோன்றி “கண்ணப்பா நில்” என்றார்.சிவகோசாரியார் திண்ணனாரின் அன்பின் பெருமையை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நன்று.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment