Monday, 11 February 2013

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!




சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

 சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

 ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

 ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
' நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்....
அஹோபிலம்(சிங்கவேள்குன்றம்)

 நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை....
பிரதோஷ வேளை(மாலை 4.30-6))

இரணியனை சம்ஹரித்த நாள்...
சதுர்த்தசி திதி

நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம்...
சுவாதி(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)

பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்...
(பக்த) பிரகலாதன்

அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)

நரசிம்மருக்குரிய நிவேதனம்...
பானகம், தயிர் சாதம்

 பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர்...
நாரதர்

நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்...
கம்பர்(தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)

நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?
""நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்''

மாரியம்மனாக வழிபடப்படும் ரிஷிபத்தினி....
ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.
கண்ணன் ....பாம்பின் மீது நடனம் ஆடினார்
காளிங்கன்
தேவர்களின் குருவாக இருப்பவர்...
பிருகஸ்பதி (வியாழன்)
குதிரை முகம் கொண்ட பெருமாள்...
ஹயக்ரீவ மூர்த்தி
கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல்...
கணேச பஞ்சரத்னம்
வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன்...
திருவொற்றியூர் அம்மன்
சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை...
கர்ணன்
குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை ...என்பர்
கும்பமுனிவர்(கும்பம் என்றால் குடம்)
பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம்...
கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)

ஆதிசேது என்று அழைக்கப்படும் தலம்...
வேதாரண்யம்

 கோயில் மாநகரம் என்று போற்றப்படும் தலங்கள்...
மதுரை, காஞ்சிபுரம்

 தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

 வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

பூலோக வைகுண்டம் என்று பெயர் கொண்ட தலம்...
ஸ்ரீரங்கம்

 சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

 திருவேரகம் எனப்படும் முருகனின் திருத்தலம்...
சுவாமி மலை

அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

பூலோகத்தில் காண முடியாத திவ்யதேசங்கள்....
திருப்பாற்கடல், வைகுண்டம்

"ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த தலம்...
திருக்கோஷ்டியூர்

மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவம்....
பிரம்மோற்ஸவம்
கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்த வேண்டும்?
12 ஆண்டுகள்
ஆதிசங்கரரின் தாயார் பெயர்...
ஆர்யாம்பாள்
தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை
கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்
தேய்பிறையில் வரும் சதுர்த்தியை எப்படி குறிப்பிடுவர்?
சங்கடஹர சதுர்த்தி
தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் மாதம்...
ஆடி
திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்....
மருள்நீக்கியார்
பன்னிருதிருமுறைகளில் முருகன் மீது பாடப்பட்ட பாடல்...
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை

காளிதாசருக்கு அருள்புரிந்த காளி எங்கு வீற்றிருக்கிறாள்?
உஜ்ஜயினி
வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
சிம்மவாகினியாக வந்து மகாலட்சுமி கோலாசுரனை அழித்த தலம்....
மகாராஷ்டிரா கோலாப்பூர்
தசரா பண்டிகை அரசு விழாவாக நடைபெறும் திருத்தலம்....
மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்
ராமகிருஷ்ணருக்கு அருள் செய்த காளி எங்கு கோயில் கொண்டிருக்கிறாள்?
கோல்கட்டா தட்சிணேஸ்வரம்
சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்


அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யோகபீடத்தில் அருளும் அம்மன்...
குற்றாலாம் குழல்வாய்  மொழியம்மை
சரஸ்வதிதேவி மற்றும் பிரம்மதேவருக்கு கோயில் இருக்கும் தலம்...
புஷ்கரம்(சக்திபீடங்களில் இத்தலம் காயத்ரிபீடமாகும்)
தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமம் கொண்டு அறம் வளர்க்கும் அம்பிகை தலம்...
திருவையாறு
மகராஷ்டிராவில் தைரியத்தை அருளும் அம்பிகையாக விளங்குபவள்....
பவானி (வீரசிவாஜியின் இஷ்ட தெய்வம்)

வயலூரிலுள்ள சுவாமி மற்றும்  அம்பாளின் பெயர்...
ஆதிநாதர், ஆதிநாயகி அம்மன்.
வள்ளி அவதரித்த தலம்?
வள்ளிமலை (வேலூர் மாவட்டம்)
மயில்வாகன முருகப்பெருமானை இப்படி அழைப்பர்...
ஸ்ரீசிகி வாஹனர்.
ஆங்கில வருடப்பிறப்பு அன்று படிப்பூஜை நடக்கும் அறுபடைத்தலம்...
திருத்தணி
தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம்....
சுவாமிமலை
சூரசம்ஹாரத்திற்கு வெற்றிப் பரிசாக இந்திரன் முருகனுக்கு அளித்த பரிசு.......
தன் மகள் தெய்வானை
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முருகன் வீற்றிருக்கும் மலை....
பத்துமலை
திருச்செந்தூரின் புராணப்பெயர்.....
திரிபுவனமாதவி சதுர்வேதிமங்கலம்
குமரகுருபரர் முருகனை எவ்வாறு அழைக்கிறார்....
சைவக்கொழுந்து, சிவக்கொழுந்தீஸ்வரர்.
பழநியில் முருகப்பெருமானை  எப்படி அழைப்பர்...
தண்டாயுதபாணி
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை...
பந்தளராஜா ராஜசேகரன்
மாலை அணிவித்த ஆண்களை ஐயப்பன் என்பர், பெண்களை..........என்போம்
மாளிகைப்புறம்
சபரிமலையில் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆசனம்...
பத்மாசனம்
பதினெட்டாம் படி எதனால் அமைக்கப்பட்டுள்ளது....
கிருஷ்ண சிலை என்னும் ஒருவகை மரத்தால். அதன் மேல் பஞ்சலோகத் தகடு வேயப்பட்டுள்ளது.
எருமைத்தலை அரக்கி மகிஷியை மணிகண்டன் கொன்ற இடம்...
எருமேலி
ஐயப்பன் மாலையில் எத்தனை துளசிமணிகள் இருக்கலாம்...
54 அல்லது 108
சபரிமலை செல்வோர் அணிய  வேண்டிய ஆடையின் நிறம்...
நீலம் அல்லது கருப்பு
சபரிமலை சன்னிதானம் தவிர
வேறு எங்கிருந்தெல்லாம் மகரஜோதியை தரிசிக்கலாம்....
அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு
கன்னி மூல கணபதி கோயில் அமைந்த இடம்....
பம்பைக் கரை
"சபரிமலை' என்ற பெயரிலுள்ள  "சபரி' என்பது யார்...
ராமபக்தையான ஒரு மூதாட்டியின் பெயர், ராமனுக்கு காய்ந்த இலந்தைப் பழத்தை
பக்தியுடன் கொடுத்தவர்.

இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை
கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)
அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை
ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12
அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்...
மகதி யாழ்
சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்
ராமானுஜர் அவதரித்த திருத்தலம்..
ஸ்ரீபெரும்புதூர்
கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்?
ஸ்காந்தம்
தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்?
விநாயகர்
அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்..
கவிகாளமேகப்புலவர்
தேவாரத்தில் முருகனை "செட்டியப்பன்' என்று சொன்னவர்...
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்...


காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

பாலமுருகன் வீற்றிருக்கும் மயிலின் பெயர்....

இந்திரமயில்
நரசிம்மர் அவதரித்த தூண் எத்தலத்தில் உள்ளது?
அகோபிலம்(ஆந்திரமாநிலம்)- உக்கிர ஸ்தம்பம்

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு
ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
ஸ்ரீராமர் பாதம்.
கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....


"வெள்ளம் குடி' அல்லது படுக்கை
மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
மணிகண்டன்
ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
41 நாட்கள்
மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
நாகராஜா, நவக்கிரகங்கள்
ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
வாபர்
ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
 "சுவாமியே சரணம் ஐயப்பா'

பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது அவசியம்
இருமுடி
ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....
நெய்
ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....
ஹரிவராசனம்
எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது...
1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார்.
ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?
பூதநாத புராணம்
மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்...
மகிஷி
தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும் ஐயப்பநாமம்...
தர்ம சாஸ்தா
ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....
வாபர்
ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்
மாளிகைப்புறத்தம்மன்
சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?
பேட்டை துள்ளல்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

ஹரிஹர சுதன் என்பதன் பொருள்....
சிவ, விஷ்ணுவின் மகன்

 ஐயப்பனை.... கிரக தோஷ பரிகாரமாக வழிபடுவர்.
சனிகிரகம்

 திருவிதாங்கூர் ராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய தங்கி அங்கியின் எடை...
450 பவுன்

தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி....
மகிஷி

 ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரம்....
(பங்குனி) உத்திரம்

எருமேலியில் பக்தர்கள் வண்ணம் பூசியபடி ஆடுவது...
பேட்டை துள்ளல்

பேட்டை துள்ளலில் சொல்லும் சரணகோஷம்.....
சாமி திந்தக்கதோம்! ஐயப்ப திந்தக்கதோம்!

ஐயப்பனின் அன்புக்காக காத்திருக்கும் அம்மன்...
மாளிகைபுறத்தம்மன்

 ஐயப்பனுக்கு விருப்பமான பிரசாதம்....
அரவணை என்னும் கட்டிப்பாயாசம்

 சபரிமலையில் இரவு பூஜையின் போது பாடப்படும் பாடல்....
ஹரிவராஸனம்.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
கண்ணன் இன்றும்  மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம்...
துவாரகை
விநாயகப்பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்...
ஆதிசங்கரர்
பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமான் மீது பாடிய கவசநூல்...
சண்முகக் கவசம்
"நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?



அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

யாதுமாகி நின்றாய் காளி என்று உமையவளைப் போற்றிய புலவர்...
பாரதியார்
வெற்றியைத் தரும்முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்....
வேலு(ம்) மயிலும்
மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
"கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்திப் பாடிய அருளாளர்....
வள்ளலார்
ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்...
குலசேகராழ்வார்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்
"மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)
நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்
நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார  தாண்டவம்
இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
ஆரோக்கியம்
ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி...
சிம்மம்
சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் மதத்தை.... என்று அழைத்தனர்.
சவுரம்
சூரியபகவானுக்குரிய நவரத்தினம்....
மாணிக்கம்
வேதமந்திரங்களில் சூரியன் .....மந்திரத்திற்கு உரியவராவார்
காயத்ரி
சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ....உண்டாகும்
பக்தியோகம்() ஆன்மிக யோகம்
சூரியதேவனை....... நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
நவக்கிரகநாயகன்
சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்...
தை முதல் ஆனி வரை
எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்...
ரதசப்தமி(தை சப்தமி)

நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
ரத்னாகரர்
சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்....
கம்பர்
அயோத்தி என்பதன் பொருள்...
யுத்தமில்லாத இடம்
தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி...
ரிஷ்யசிருங்கர்
ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி...
லட்சுமணர்
விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்...
பிரம்மா
பிரகலாதன் என்பதன் பொருள்....
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு .... என்று பெயர்.
வைதேகி
இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்...
கவுதமர்
தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்...
சதானந்தர்

திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி
பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி
வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி
திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.
மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்...
திருமங்கையாழ்வார்
கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்....
கந்தபுராணம்
தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்....
நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)
ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்...
ராமானுஜர்
விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்...
தொண்டரடிப்பொடியாழ்வார்

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
சுவாமிமலை(மலை அமைப்பில் கட்டப்பட்டகோயில்)
விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்
சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்
ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்
ராமநாமத்தை கருடபுராணம் எப்படி குறிப்பிடுகிறது?




அமுதம்
திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்.....
நம்மாழ்வார்
சர்க்கரைப் பந்தலில் தேன்மழை எனப்படும் பாகவதப் பகுதி....
பத்தாம்பகுதியான கிருஷ்ணரின் வரலாறு
இறைவனும் இறைநாமமும் ஒன்றே என்று கூறியவர்....
ராமகிருஷ்ண பரமஹம்சர்
கர்நாடகத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற சிவத்தலம்...
திருக்கோகர்ணம்

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தைவீழ்த்தியவர்....
கிராதமூர்த்தி(வேடுவராக வந்த சிவன்)
கும்பகோணத்தில் அருளும் மங்களாம் பிகை.... பீடம்
மந்திரபீடேஸ்வரி பீடம்
கும்பேசர் குறவஞ்சி எழுதிய புலவர்....
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
கும்பகோணம் தலத்தின் விசேஷமான தீர்த்தங்கள்....
காவிரியாறு, மகாமகக்குளம்

கும்பகோணத்தைத் தமிழில்...என்று அழைப்பர்
குடமூக்கு, குடந்தை
ஆழ்வார் என்று அழைக்கப்படும் பெருமாள்...
கும்பகோணம் ஆராவமு தாழ்வார்- சாரங்கபாணிப்பெருமாள்
சாரங்கபாணி கோயிலில் உள்ள இருவாசல்கள்...
உத்ராயண, தட்சிணாயன வாசல்கள்
மாசிமகத்தன்று
சூரியன்....ராசியிலிருந்து.... ராசியைப் பார்க்கிறார். கும்பத்திலிருந்து சிம்மத்தை
"நடந்தகால் நொந்ததோ' என்று குடந்தை சாரங்கபாணியிடம் உருகியவர்....
திருமழிசையாழ்வார்
மூலவரும் உற்சவரும் சமம் என்பதால் சாரங்கபாணிகோயிலுக்கு .... என்று பெயர்
உபயபிரதான திவ்யதேசம்

திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி
சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்
"அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்
மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்
நடுக்கம் தீர்த்தவிநாயகர் அருள்பாலிக்கும் சிவத்தலம்...
வேதாரண்யம்
ஆண்டாள் பாடிய ""வாரணமாயிரம்'' என்பதன் பொருள்...
ஆயிரம் யானை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பெரியாழ்வார் எத்தலத்தில் பாடினார்?
மதுரை கூடலழகர் கோயில்

சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய
முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்
சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
அத்திரி முனிவரின் மனைவி....
அனுசூயா
ராவணன் யாருடைய தம்பி ....
கரன்
அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர்....
காமவல்லி
சூரியனின் அம்சமாகப் பிறந்தகுரங்கு மன்னன்....
சுக்ரீவன்
அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்தவள்....
சீதாதேவி
தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத் தச்சர்....
மயன்

பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர்...
ஜாம்பவான்
ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன்...
வால்மீகி
தசரதருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை...
சத்ருக்கனன்
வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை....
கருடன்

கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

 குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

 ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

ஆயுள் அதிகரிக்க எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?
கிழக்கு

 நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் நேர்வரிசையில் அருளும் கோயில்...
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில்

 அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

திருப்பள்ளி எழுச்சியின் போது கோயிலில் பாடும் ராகம்....
பூபாளம்

 தேங்காய் உடைப்பதற்கு பதிலாக துருவி நிவேதிக்கப்படும் கோயில் எது?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (தேங்காய் உடைத்தால், சுவாமியின் யோகநித்திரை கலைந்து
விடும் என்பதால்)

 தேவலோக மரமான கற்பகமரத்தில் வீற்றிருக்கும் தெய்வம்....
ஸ்வர்ண வர்ஷினி

 வீணை இசையை விட இனிய மொழி பேசும் அம்பிகை எங்கு அருள்கிறாள்?
வேதாரண்யம் (யாழைப் பழித்த மொழியாள்)
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
உத்திரம்

 ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியின் முற்பிறவி பெயர்....
லீலாதேவி

சபரிமலைக்குச் செல்லும் காட்டுவழியில் உள்ள கோட்டைகள்....
ஏழு

பழநிமலையில் புனிததீர்த்தமாகக் கருதப்படும் நதி...
சண்முகநதி

பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும் படைவீடு...
திருப்பரங்குன்றம்

 வள்ளி,தெய்வானை முற்பிறவியில் யாருடைய மகள்கள்?
திருமால்

வள்ளி, தெய்வானையின் முற்பிறவி பெயர் என்ன?
அமுதவல்லி, சுந்தரவல்லி

 பங்குனி சுவாதிநாளில் அவதரித்த சிவனடியார்....
புனிதவதியார்(காரைக்காலம்மையார்)

 ஆளுடைய பிள்ளையார் என்று போற்றப்படும் நாயன்மார்....
திருஞானசம்பந்தர்

 குழந்தை முருகன் பவனி வந்த மயில்...
இந்திரமயில்

திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

 பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

 சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

 உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

 விநாயகரின் பெயரான "சுமுகன்' என்பதன் பொருள்....
நல்ல முகத்தை உடையவர்

வாய்மையே வெல்லும்(சத்யமேவ ஜெயதே) என்பது இடம்பெற்றுள்ள உபநிஷதம்...
முண்டக உபநிஷதம்

ஆதித்ய ஹ்ருதயத்தை எப்போது பாராயணம் செய்ய வேண்டும்?
சூரியோதய வேளையில்

அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

 தாயாரின் மூலமே பெருமாளை அடைய முடியும்என்பதை எப்படி குறிப்பிடுவர்?
புருஷாகாரம்(பரமாத்வோடு சேர்ப்பவள்)

 உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

 மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

 மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

 மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

 மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

 சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

 மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட காலம் எது?
சாலிவாகன சகாப்தம் 807 பங்குனி உத்திர நட்சத்திரம்(தற்போது சாலிவாகன (தெலுங்கு) ஆண்டு 1933) . அதாவது, 1126 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்டது.

கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட ஊர்
ஸ்ரீரங்கம்

 ராமனின் பெற்றோர் தசரதர்-கோசலை. தசதரதரின் பெற்றோர் யார்?
அஜன்- இந்துமதி

கைகேயின் நாடு, ஊர் எது?
கேகய தேசம், ராஜக்கிரகம்

அயோத்தி நகரம் யாரால் உருவாக்கப்பட்டது?
சூரிய குல அரசன் மனு

ராஜாஜி எழுதிய ராமாயணத்தின் பெயர்...
சக்கரவர்த்தி திருமகன்

தசரதரின் மந்திரி சுமந்திரருக்கு தரப்பட்டிருந்த பெருமை என்ன?
அந்தரங்க அமாத்தியாயன் என்ற பதவி...அரசரின் அந்தப்புரத்திற்குள்ளும் நுழையும் உரிமை பெற்றவர்.

 ராம சகோதரர்கள் பிறந்த நட்சத்திரம்...
ராமன்- புனர்பூசம், பரதன்- பூசம், லட்சுமணன்- ஆயில்யம், சத்ருக்கனன்- மகம்

கோசலநாடு என்ற சொல்லின் பொருள்
மயில்கள் நிறைந்த நாடு

ஜனகர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
தந்தை
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
புலவர் இளம்பெருவழுதி அழகர்மலையைப் பரிபாடலில்... என்று குறிப்பிடுகிறார்.
மாலிருங்குன்றம்

முதல் ஆழ்வார்கள் மூவரில் கள்ளழகரைப் பாடியவர்கள்....
பூதத்தாழ்வார், பேயாழ்வார்
அழகர்கோவில் கள்ளழகர் யாருக்காக வைகையாற்றில் எழுந்தருள்கிறார்?
மண்டூக மகரிஷி
பழங்காலத்தில் அழகர்கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
திருமாலிருஞ்சோலை
அழகர்கோவிலில் புனித தீர்த்தமாக விளங்கும் சுனை....
நூபுர கங்கை
நூபுரகங்கை என்பதன் பொருள்....
சிலம்பாறு
கள்ளழகரை காணும் பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம்....
கோவிந்தா கோவிந்தா
அழகரை வைகையாற்றில் வரவேற்கும் பெருமாள்....
மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள்
வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் சப்பரம்.....
ஆயிரம் பொன் சப்பரம்
கள்ளர் கோலத்தில் அழகர் அழகர் உடுத்தியிருக்கும் ஆடை...
கண்டாங்கி.

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif
ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம்...
புனர்பூசம்

 "திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள்...
திருவாதிரை, திருவோணம்

 ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்...
கிருஷ்ணர்

ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் எத்தனை?
இரண்டேகால்

சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம்....
மூலம்

 ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள்...
ஆடிப்பூரம்

நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்த நாள்...
சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்

முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள்....
கார்த்திகை, விசாகம்

சுபநிகழ்ச்சிகளை செய்ய ..... நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர்.
ரோகிணி

நட்சத்திரமண்டலத்தில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வது...
அசுபதி
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்?
லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்கனன்- சுருதகீர்த்தி

2) சூரியனின் நட்பு கிரகங்கள் எவை?
செவ்வாய், குரு, சந்திரன்

3) குற்றாலநாதரின் அம்பாள் பெயர்...
குழல்வாய்மொழி நாயகி

4) நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது?
திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி
அட்டை

"பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை?
நரசிம்மர்.

 "பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? பக்தர்களிடம் கருணை உள்ளவன்
(வத்சலம்- கருணை)

 இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது?
ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்

 "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

இலங்கை மீது படையெடுக்க ராமன் குறித்த நட்சத்திரம்...
உத்திரம்

 ராவணனின்மனைவி மண்டோதரியின் தந்தை..
மயன்

 மாரீசன் ராமனை எப்படி அழைத்தான்?
நரசிம்மா...!

வானரங்களுக்கு அழகு எது என்று ராவணன் கூறினான்?
வால்

விபீஷணனின் மனைவி பெயர்...
சரமை

 தேவர்கள் உத்தரவுபடி அனுமனை சோதித்த அரக்கி...
நாகங்களின் தாய் சுரசை

ராமபாணத்தால் துளைக்கப்பட்ட மரம்..
ஆச்சா மரம்

கடலில் பாலம் (சேதுபந்தனம்) அமைத்தவன் யார்?
நளன்

 சேதுபந்தனம் என்பதன் பொருள்...
சேது- பாலம், பந்தனம்- கட்டுதல்

சேதுபந்தனம் அமைக்க எத்தனை நாள் ஆனது?
மூன்று
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

திருச்செந்தூரின் புராதனப் பெயர்....
திருச்சீரலைவாய்

 தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
 திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)
 சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...
அஜமுகி
 அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடு
மாவிளக்கு

இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....
சிவகிரி, சக்திகிரி

மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...
கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)

 முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....
திருத்தணி
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

"தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

 பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்...
பாம்பன் சுவாமிகள்

 திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்....
வள்ளலார்

பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....
அருணகிரிநாதர்

 ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்...
திருக்கோஷ்டியூர் நம்பிகள்

திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்.....
திருமங்கையாழ்வார்

திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

 ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்...
வியாசர்
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

வைகுண்ட வாசலில் காவல்பணிசெய்யும்இருவர்....
ஜெயன், விஜயன்

 திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர் யார்?
கூன்பாண்டியனின் அமைச்சர் குலச்சிறையார்.

மகாவிஷ்ணு வராகமாக அவதாரமெடுத்து யாரை வதம் செய்தார்...
இரண்யாட்சன்

பிரகலாதனின்பெற்றோர்...
இரண்யகசிபு (இரண்யன்), கயாது

 கும்பகர்ணன் பிரம்மாவிடம் .... வரம் பெறுவதற்காகத் தவம் செய்தான்.
நிர்தேவத்துவம் (தனக்கு ஈடான தெய்வம் வேறில்லை)

ராமபட்டாபிஷேக செய்தியைச் சொன்ன கூனிக்கு கைகேயி கொடுத்த பரிசு...
முத்துமாலை

திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

 மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

 தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் கூன் நிமிர்ந்த பின் ஏற்பட்ட பெயர்....
நின்றசீர் நெடுமாறன்

ஆதிசங்கரர் முக்தி பெற்ற திருத்தலம்...
முக்திநாத்(நேபாளம்)

"சரவணபவ' என்பதன் பொருள் ....
நாணல் காட்டில் பிறந்தவன்

வசிஷ்டமுனிவர் வளர்த்த பசு.....
நந்தினி

 கவுசிகன் என்பது.... ரிஷியின் பெயர்
விஸ்வாமித்திரர்

 அர்ஜூனனுக்கு வில்லினால் ஏற்பட்ட பெயர்...
காண்டீபன்

ராமனின் அம்பு .... வடிவத்தில் இருக்கும்
பிறை சந்திரன்

 திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்...
ராமானுஜர்

ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராமனின் தம்பி....
லட்சுமணன்

 "சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

 சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

 மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

 அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

கர்நாடகா திருநாராயணபுரத்தில் இருக்கும் ராமானுஜரை .... என்பர்.
தமர் உகந்த திருமேனி (தனக்குத் தானே வடித்த சிலை)

 அகோபிலம் என்ற சொல்லின் பொருள்...
சிங்ககுகை(அகோ- சிங்கம், பிலம்- குகை)

திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து கைங்கர்யம் செய்தவர். .....
அனந்தாழ்வார்

வைகுண்டத்தில் பெருமாள் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்....
நித்யசூரிகள்(முக்தி பெற்றவர்கள்)

 பிருந்தா என்னும் சொல்லின் பொருள்....
துளசி.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர்...
திருஇரும்பூளை

உலக உயிர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர்.....
தட்சிணாமூர்த்தி(சிவபெருமான்)

 ராசிசக்கரத்தில் பெயர்ச்சி பெறும் குரு யார்?
நவக்கிரக குருவான பிருகஸ்பதி

குருவிற்குரிய நட்சத்திரம்...
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

ஜாதகத்தில் குருதிசை எத்தனை ஆண்டுகள் நடக்கும்?
ஆண்டுகள்

குரு பார்க்கும் பார்வை எத்தனை?
ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் பார்வைகள்

 மேஷ குருவின் பார்வை பெறும் ராசிகள்...
சிம்மம், துலாம், விருச்சிகம்

 குருவிற்கு உகந்த மலர்...
முல்லை

பிருகஸ்பதி என்பதன் பொருள்...
கல்வியில் சிறந்தவர்

 குருவை வழிபடுவதால் ஏற்படும் பலன்...
செல்வவளம், திருமணயோகம், புத்திரப்பேறு, ஞானம்.

ராமனுக்காக படையெடுக்க முயன்ற ஆழ்வார்...
குலசேகராழ்வார்
. சுக்கில பட்சம் என்று எதைக் குறிப்பிடுவர்?
வளர்பிறை

 வெள்ளியம்பலம் என்று போற்றப்படும் சிவத்தலம்....
மதுரை

 பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

 கோயிலில் துர்க்கையம்மனை எத்திசை நோக்கி அமைப்பர்?
வடக்கு

சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

 ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

 தெய்வீக திசைகள் என்று கருதப்படுபவை....
வடகிழக்கு(ஈசானம்) தென்மேற்கு(கன்னிமூலை)

முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு... கண்கள் எத்தனை?
பதினெட்டு (முகத்துக்கு ஒரு நெற்றிக்கண்ணும் உண்டு என்பது ஐதீகம்)

. சுக்ரீவன் என்பதன் பொருள்....
நல்ல கழுத்தைக் கொண்டவன்.

வேதம் தமிழ் செய்மாறன் என்றுபோற்றப்படுபவர்...
நம்மாழ்வார்

 சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

 தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

 அஷ்டாங்கவிமானத்தில் எத்தனை கருவறைகள் இருக்கும்?
மூன்று கருவறைகள்
 கேசி என்ற அரக்கன் கண்ணனைக் கொல்ல எந்த உருவத்தில் வந்தான்?
குதிரை

அன்னதானம் செய்த மணிமேகலையுடன் ஒப்பிடப்படும் தெய்வம்....
அன்னபூரணி

விஷ்ணுவை அடைய பக்தி நெறியை விட எளிய சாதனமாக கருதப்படுவது....
பிரபத்தி நெறி (விஷ்ணுவை சரணடைதல்)

 பெருமாள் கள்ளழகராக அருள்பாலிக்கும் தலங்கள்
அழகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) கள்ளபிரான் கோயில்

 திருமாலின் ஆயுதங்களில் பெண்ணாக கருதப்படுவது....
கவுமோதகி என்னும் கதாயுதம்

 மதுரையின் எல்லையை பாம்பு காட்டியதால் உண்டான பெயர்....
ஆலவாய்.


அக்னிப்பூ என்பது எந்தக் கடவுளைக் குறிக்கும்?
முருகப்பெருமான்

 வாரணமாயிரம் என்பதன் பொருள்....
ஆயிரம் யானைகள்

 "எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல்...
திருப்பாவை, திருவெம்பாவை

 சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

. மன்மதன் பவனிவரும் தேர்...
பூந்தென்றல்

 "உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம்(விசிறி) வீசி சேவை செய்தவர்...
திருக்கச்சிநம்பிகள்

தமருகந்த திருமேனியாக (தனக்குத்தானே எழுப்பியது) ராமானுஜர் அருள்புரியும் தலம்....
மேல்கோட்டை(கர்நாடகா)
.
திருநாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி....
திலகவதியார்

 கந்தரநுபூதி பாடிய முருகனைப் போற்றியவர்...
அருணகிரிநாதர்

இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

"நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

"ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

 "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

 "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

7. "மாயனுக்காக கனா கண்டேன் தோழீ நான்' என்று கூறியவர்....
ஆண்டாள்

 ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

 "வாடினேன் வாடி வருந்தினேன்' என்று பெருமாளிடம் வருத்தப்பட்டவர்...
திருமங்கையாழ்வார்

 "நாரணன் அன்னை நரகம் புகாள்' என்று பாசுரம் பாடியவர்....
பெரியாழ்வார்.


திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

 நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

 சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

 ஏழு கடல் மணலை விடவும் அதிக பிறவி எடுத்ததாகப் பாடியவர்...
அருணகிரிநாதர்

கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

 சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

 மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள அடையாளம்....
ஸ்ரீவத்சம்

 கண்ணனைக் கொல்ல வந்த பேய் வடிவ அரக்கி....
பூதனை

 "அயோநிஜர்' என்று குறிப்பிடப்படும் மூவர்....
பொய்கையாழ்வர், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

சப்தமாதர்களில் திருமாலின் அம்சமாக விளங்குபவள்...
வைஷ்ணவி

 சுவாமிமலையின் புராணப் பெயர்....
திருவேரகம்

 "நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

 முருகன் வள்ளியை மணம் செய்த முறையை.... என்பர்
களவு மணம்

 யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்களை எப்படி குறிப்பிடுவர்?
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்

அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

"மறந்தும் புறம் தொழா மாந்தர்' (திருமாலைத் தவிர மற்றவர்களை வணங்காதவர்)என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்...
நான்முகன் திருவந்தாதி

 நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர்...
திருமழிசையாழ்வார்.

கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம்.....
ஓம் நமோ பகவதே வாசுதேவாய (ஓம் என்பது ஒரே எழுத்து)

 கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?
குரு÷க்ஷத்திரம்

கிருஷ்ணர் நாரதருக்கு .... இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?
வீணை

கிருஷ்ணாவதாரமே மகாவிஷ்ணுவின் .... அவதாரம் என்று சிறப்பிப்பர்
முழுமையான(பூர்ண)

 பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி.....
பத்தாவது அத்தியாயம்

 எட்டு ராணிகளுடன்(அஷ்ட மகிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்....
துவாரகை

 கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்...
மதுரா

எல்லா உறவுநிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்...
பாரதியார்

 கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்...
நாராயண தீர்த்தர்

மன்னார்குடியில் பசுமேய்த்த கோலத்தில் இருப்பவர்.....
ராஜகோபாலன்

வாமனன் என்பதன் பொருள்.....
குறுகியவன், அழகானவன்

சீர்காழியில் அருள்பாலிக்கும் உலகளந்த பெருமாள்.....
தாடாளன்

 பலிச்சக்கரவர்த்தி யாகம் செய்த இடம்....
நர்மதை நதிக்கரை

ஆண்டாள் "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று போற்றும் அவதாரம்....
வாமனனாய் வந்து திருவிக்ரமமூர்த்தியாய் உயர்ந்தது

உலகளந்த பெருமாளைப் போற்றும் திருப்பாவை பாடல்கள்....
3,17, 24

 வாமனரின் பெற்றோர்....
காஷ்யபர், அதிதி

 விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வாமனமூர்த்தி எத்தனையாவது திருநாமம்?
152

 மகாபலி எதற்காக யாகம் செய்தான்?
இந்திரபதவி பெறுவதற்காக

 வாமனரைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியம்...
திருக்குறள்

அதிதிக்கு வாமனர் எத்தனையாவது பிள்ளை?
12

ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்த புராணம்....
பிரம்மாண்ட புராணம்

 பிரம்மாண்ட புராணப்படி சக்திபீடங்கள் எத்தனை உள்ளன?
51

 தாடங்கத்தை(தோடு) சக்கரமாக அணிந்திருக்கும் அம்பிகையர்....
திருக்கடையூர் அபிராமி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

பராசக்தி என்பதன் பொருள்...
அளவிடமுடியாத அருட்சக்தி

மந்திரங்களுக்கு கட்டுபட்டவள் என்பதால் அம்பிகையை.... என்பர்.
மந்திரிணி

சக்தி தலங்களில் மந்திரிணி பீடமாக விளங்கும் திருத்தலம்...
மதுரை

பஞ்சபூதத்தலங்களில் மண் தலத்தில் அருள்புரியும்
அம்பிகை... காஞ்சி காமாட்சி

 இந்தியாவின் கடைக்கோடியில் விளங்கும் சக்திபீடம்....
கன்னியாகுமரி

மன்மதனால் அம்பிகைக்கு கோயில் எழுப்பட்ட திருத்தலம்...
கவுகாத்தி காமாக்யா கோயில் (அசாம்)

திருவாலங்காட்டை சக்தி பீடங்களில்..... பீடமாகச்சொல்வர்.
காளிபீடம்.

தேவாரத்தில் விநாயகர் வணக்கம் இடம்
பெற்றுள்ள தலம்... திருவலிவலம் (திருவாரூர் மாவட்டம்)

 தேவாரத்தில் முதல் ஏழு திருமுறைகளிலும் பாடல்பெற்ற சிவன்...
வேதாரண்யேஸ்வரர்

 சுந்தரரின் தோழராக கைலாயத்திற்கு உடன் சென்றவர்....
சேரமான் பெருமான் நாயனார்

ராமபிரானால் கொல்லப்பட்ட வானரம்
வாலி

சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி செலுத்திய ஆங்கிலேயர்...
சர். தாமஸ் மன்றோ

சுதர்சனம்(சக்கரம்) என்பதன் பொருள் .....
நல்ல காட்சி

 முருகப்பெருமான் பாலனாக வலம் வந்த மயில் ....
இந்திரமயில்

 தானான திருமேனியாக ராமானுஜர் அருள்புரியும் தலம்...
ஸ்ரீரங்கம்

கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

பாரதியார் பாடிய காளி எங்கு அருள்புரிகிறாள்?
உஜ்ஜயினி(மத்தியபிரதேசம்)

 வங்காள மக்கள் துர்கா
பூஜையின் போது..... என்று சொல்லி தேவியை வணங்குவர். ஜய அம்பே! ஜகதம்பே!! (அம்பாளுக்கே வெற்றி! உலக நாயகிக்கு வெற்றி)

அம்பாள் வதம் செய்த அசுரனின் பெயரால் வழங்கும் தலங்கள்...
மைசூரு(மகிஷன்), கோலாப்பூர்(கோல்ஹாசுரன்)

 ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சக்திபீடம்...
காயத்ரி பீடம் (புஷ்கரம்)

 கைலாயத்தில் அம்பிகையின் அம்சமாக இருக்கும் ஏரி...
மானசரோவர்

சங்கீத மும்மூர்த்திகளால் பாடப்பெற்ற அம்பிகை....
நீலாயதாட்சி(நாகப்பட்டினம்)

சத்ரபதி வீரசிவாஜி வழிபட்ட தமிழக அம்பிகை...
சென்னை காளிகாம்பாள்

 மீனாட்சியம்மனுக்கு தங்க ஷுவை காணிக்கையாக்கிய ஆங்கிலேயர்...
ரோஸ்பீட்டர்

அம்பிகை இல்லறம், துறவறம் என இருநிலைகளில் அருளும் தலம்....
திருவாரூர்(நீலோத்பலாம்பாள், கமலாம்பாள்)

 சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும்மூலவராகவிளங்கும் தலம்...
கோலாப்பூர்(மகாராஷ்டிரா)


சப்தாஸ்வன் என்று சிறப்புப்பெயர் கொண்டவர்...
சூரியன்(ஏழு குதிரைகளைக் கொண்டவன்)

 மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

ஆறுபடைவீட்டில் குகாசலம் எனப்படும் தலம்...
சுவாமிமலை

திருமால் மீது முகுந்தமாலை பாடிய ஆழ்வார்...
குலசேகராழ்வார்

யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது....
கிருதயுகம்

 ராமாயணத்தில் மந்திர ரத்தினமாகத் திகழ்வது...
சுந்தர காண்டம்

 துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம்...
ராமசரித மானஸ்

 ராஜரிஷியான விஸ்வாமித்திரரின் இயற்பெயர்....
கவுசிகன்

9. பூதத்தாழ்வார் பாடிய பிரபந்தப்பாடல்....
இரண்டாம் திருவந்தாதி

10. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

பிருந்தாவனத்தில் கண்ணனைக் கொல்ல பசுங்கன்றாக வந்தவன்...
வத்சாசுரன்

2. கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு அசுரன்....
பகாசுரன்

3. எந்தப் பாம்பின் மீது கண்ணன் நர்த்தனம் புரிந்தான்....
காளிங்கன்

4. கண்ணன் மீது கொண்ட பக்தியால் கோபியர்கள் பாடிய பாடல்.....
கோபிகாகீதை

5 .கேசி என்பவன் ..... வடிவத்தில் கண்ணனைக் கொல்ல முயன்றான்.
குதிரை

6. யமுனையாற்றில் கண்ணனிடம் விஸ்வரூப தரிசனம் பெற்ற பக்தர்....
அக்ரூரர்

7. தந்தம் இரண்டையும் ஒடித்து, கண்ணன் கொன்ற யானை......
குவலயாபீடம்

8. மதுராவில் கண்ணனோடு மல்யுத்தம் செய்து தோற்ற இருவர்....
முஷ்டிகன், சாணூரன்

9. கண்ணனை மணக்க விரும்பி துவாரகைக்கு தூது அனுப்பியவள்.....
ருக்மணி

10. ஏழுகாளைகளை அடக்கியதால், கண்ணனை மணந்த ராஜகுமாரி......
நாக்னஜித்

தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்...
பிரம்ம வைவர்த்த புராணம்

2. நரகாசுரனின் பெற்றோர்....
வராஹமூர்த்தி, பூமிதேவி

3. நரகாசுரனின் இயற்பெயர்....
பவுமன்(பூமியின் பிள்ளை)

4. கிருஷ்ணரோடு யுத்தம் செய்ய நரகாசுரன்... வாகனத்தில் வந்தான்
யானை

5. நரகாசுரனின் மகன் பெயர்.....
பகதத்தன்

6. தீபாவளியை ..... நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்
ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி

7. தீபாவளி ஸ்நானத்தை ..... என்றும் அழைப்பதுண்டு
நரகசதுர்த்தசி ஸ்நானம்

 கங்காதேவி தீபாவளியன்று எதில் வசிப்பதாகக் கூறுவர்?
வெந்நீர்

 தீபாவளிநாளில் எண்ணெயில் ..... இருப்பதாக ஐதீகம்
லட்சுமிதேவி

 வடநாட்டில் தீபாவளியன்று ....... வழிபாடு நடத்துவர்.
லட்சுமி பூஜை, குபேர பூஜை


1.கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர்...தேவராய சுவாமிகள்

சண்முக கவசத்தை எழுதியவர்...பாம்பன் சுவாமிகள்

கந்தரநுபூதியை பாடிய அருளாளர்.....அருணகிரிநாதர்

திருமுருகாற்றுப்படை பாடிய சங்கப்புலவர்....நக்கீரர்

முருகனால் வெட்டிய கை வளரப் பெற்ற பெண்ணடியார்...முருகம்மையார்

ஊமைப்பிள்ளையாய் இருந்து முருகனருளால் பாடியவர்...குமரகுருபரர்

முருகனிடம் தமிழ் மொழியைக் கற்றறிந்த முனிவர்...அகத்தியர்

கண்ணாடியில் திருத்தணி முருகனை தரிசித்து மகிழ்ந்தவர்...வள்ளலார்

வயலூர் முருகனை இஷ்டதெய்வமாக போற்றிய அடியவர்....வாரியார்

முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர்....
திரு.வி..,

அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

 தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

 மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

 அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

 காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)


சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

பாம்பன்சுவாமிகளின் சமாதிக்கோயில் எங்குள்ளது?
திருவான்மியூர்

 மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

 சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

 உடம்பைக் காற்று போல லேசாக்கும் பயிற்சி....
அஷ்டமாசித்திகளில் ஒன்றான லகிமா

சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

பில்வப்பிரியை (வில்வத்தை விரும்புபவள்) என்பது யாரைக் குறிக்கும்?
லட்சுமி

 செவ்வாய், சனி கிரகத்தின் தொல்லைகளை நீக்கும் பெண் தெய்வம் யார்?
மகாலட்சுமி

 மகாலட்சுமி கிரக தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவள் என்று சொல்லும் நூல் எது?
ஸ்ரீசூக்தம்

ஸ்ரீசூக்தத்தை எழுதியவர் யார்?
மகாகவி வேங்கடாத்வரீ

இரு கை கொண்டு வாங்க வேண்டிய பொருட்கள்...
புத்தகம், வெற்றிலை பாக்கு, திருநீறு, தங்க நகை, உடை.


. இரவில் சாப்பிடக்கூடாதவை என சாஸ்திரம் தடுப்பது..
கஞ்சி, இஞ்சி, தயிர்சாதம், நெல்லிக்காய், பாகற்காய், கீரை.

 யார் வீட்டில் செல்வம் தங்காது?
காலையும், மாலையும் உறங்குபவர் வீட்டில்...

 வீட்டில் லட்சுமி தங்க ஆதிசங்கரர் அளித்துள்ள ஸ்தோத்திரம்..
கனகதாராஸ்தவம்

பாற்கடலில் லட்சுமியின் அருகில் நிற்கும் மரங்கள்
பாரிஜாதம், கற்பகதரு.

"விஜயா' என்ற பெயர் யாரைக் குறிக்கும்?
ராஜலட்சுமி.

பிரம்மலிபி என்பதன் பொருள்.....
தலையெழுத்து

 சுப்ரமண்ய புஜங்கம் பாடியவர்....
ஆதிசங்கரர்

 பட்சிராஜர் என்று போற்றப்படுபவர்...
கருடாழ்வார்

 கருடனின் அம்சமாகப் பிறந்த ஆழ்வார்....
பெரியாழ்வார்

 வாசுதேவன் என்பதன் பொருள்....
எங்கும் நிறைந்தவன் (எங்கும் பரவியிருப்பவன்)

அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

 நவரத்தினங்களில் செவ்வாய்க்குரிய கல்...
பவளம்

செயல் தடையின்றி நிறைவேற அருளும் விநாயகர் துதி....
காரியசித்தி மாலை

 புகழ்பெற்ற அனுமன் சாலிஸாவைப் பாடியவர்....
துளசிதாசர்

பிருந்தா என்பது யாரைக் குறிக்கும்?
துளசி

 துளசியைத் தமிழில் .... என்று வழங்குவர்.
துழாய்

முருகனுக்கு மலரால் உண்டான பெயர்....
கடம்பன்(கடப்பமலர் முருகனுக்கு உகந்தது)

விஷ்ணு மூர்த்தமாக ....... கல்லை பூஜிப்பர்.
சாளக்ராமம்

சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

 தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

வாழ்நாளில் ஒருமுறை கூட பழநியைத் தரிசிக்காதவர்....
பாம்பன் சுவாமிகள்

 ராமானுஜரை 18முறை வரவழைத்த பின் உபதேசித்தவர்....
திருக்கோஷ்டியூர் நம்பி

ராசிமண்டலத்தில் சூரியன் ஐப்பசியில்.... கதி அடைகிறார்.
நீச்சகதி(ஆற்றலை இழந்துவிடும் நிலை)

இந்திரனின் மகன் சயந்தன் வழிபட்ட சிவன்....
திருப்புத்தூர் திருத்தளிநாதர் (சிவகங்கை மாவட்டம்)


முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

பஞ்ச சபைகளில் சித்திரசபை எனப்படுவது...
குற்றாலம்

தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

 அஷ்டமாசித்திகளில் கூடுவிட்டு கூடு பாய்வதை ... என்பர்
பிராகாமியம்

தன்னைக் கொல்ல வந்தவரையும் வணங்கியவர்....
மெய்ப்பொருள் நாயனார்

தடாதகை என்னும் பெயரில் வளர்ந்தவள்...
மதுரை மீனாட்சி

குமரகுருபரர் முருகன் மீது பாடியது...
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

குசேலர் வாழ்ந்த அவந்தி எந்த மாநிலத்தில் உள்ளது?
மத்திய பிரதேசம் (தற்போது உஜ்ஜயினி)

அலங்காரத்தில் விருப்பம் கொண்ட முருகன் அருளும் தலம்.....
திருச்செந்தூர்

சூர்ப்பனகை என்பதன் பொருள்....
முறம் போன்ற நகம் கொண்டவள்.


சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்....
தை முதல்நாள்(மகர சங்கராந்தி)

 "ஞாயிறு போற்றுதும்' என்று சூரியனை போற்றும் இலக்கியம்...
சிலப்பதிகாரம்

சூரியனின் ரதத்தில் இருக்கும் குதிரைகள் எத்தனை?
ஏழு

சூரியவம்சத்தில் உதித்த கொடைவள்ளல்....
கர்ணன்

சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் பறந்த வீரன்....
அனுமன்

 ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை .... என்று குறிப்பிடுவர்
ஆத்மகாரகர்( ஆத்மாவிற்கு உரியவர்)

சூரியன் முழுஆற்றலோடு எந்த ராசியில் இருப்பார்?
மேஷம்(சித்திரைமாதம்)

 சூரியனின் ஒற்றைச் சக்கர தேருக்கு சாரதியாக இருப்பவர்....
அருணன்

சூரியனுக்கு ஆற்றல் தரும் காயத்ரி மந்திரத்தை உலகிற்கு வழங்கியவர்...
விஸ்வாமித்திரர்

சூரியவம்சத்தில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்....
ராமாவதாரம்

முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

 தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்...
திருமால்

 மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை....
மீனாட்சி

 விசாலாட்சி என்பதன் பொருள்.....
அகன்ற கண்களைப் பெற்றவள்

 நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி...
கண்ணுடைய நாயகி

 கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்...
இந்திரன்

சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

 கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது?
தாட்சண்யம்(கருணை)

 முருகனுக்கு எத்தனை முகங்கள்?
ஆறு

சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

ராவணனின் தம்பிகளில் மூத்தவன்....
கும்பகர்ணன்

அக்ஷன் என்பவன் யார்?
ராவணனின் இரண்டாவது மகன்

 ராமசகாயன் என்று அழைக்கப்படுபவன்...
சுக்ரீவன்

 ராவணனின் அழிவிற்கு விதையிட்டவள் யார்?
சூர்ப்பனகை

விஸ்வமித்திரரின் கட்டளையால் ராமன் யாரைக் கொன்றார்?
தாடகை

சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி...
திரிஜடை

 இந்திரஜித்தின் தாய் ...
மண்டோதரி

 சீதையை அபகரிக்க ராவணனுடன் மாயமானாக வந்தவன்...
மாரீசன்

ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்தவர்....
வசிஷ்டர்

 ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருப்பவர்...
ஜாம்பவான்


"கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா' என்று பாடியவர்....
பாரதியார்

காகமாக வந்து சீதைக்கு துன்பம் கொடுத்தவன்...
ஜெயந்தன்

 கூடற் கலாபமயிலாக விளங்கும் அம்பிகை....
மதுரை மீனாட்சி
புதனுக்குரியசிவன்கோயில்....
திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்)

திருவாய்மொழி பாடியவர்....
நம்மாழ்வார்

சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

சரவணன் என்பதன் பொருள்...
நாணற்காட்டில் பிறந்தவன்

 நூபுர கங்கை தீர்த்தம் எங்கு உள்ளது?
அழகர்கோவில்

யசோதையாக கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர்...
பெரியாழ்வார்

 திருச்சாத்து உருண்டை என்னும் மருந்து வழங்கும் தலம்....
வைத்தீஸ்வரன் கோவில்


காஞ்சி வரதராஜரிடம் மிகுந்த பக்தி கொண்ட அடியவர்....
தொட்டாச்சாரியார்

 பட்சிராஜர் என்று சிறப்பிக்கப்படுவது....
கருடன்

பாண்டவர்களில் ஜோதிட நிபுணர்...
சகாதேவன்

 சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் எத்தனை?
பதினான்கு

 பிதாமகர் பீஷ்மரின் பெற்றோர்...
சந்தனு, கங்கா

மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்....
64

தெய்வீகமான வடகிழக்கு திசையை .... என்று குறிப்பிடுவர்.
ஈசானம்

அர்ஜூனனுக்குரிய கொடி...
அனுமன் கொடி

கண்ணனை அழிக்க கம்சன் அனுப்பிய கொக்கு அசுரன்...
பகாசுரன்

தசரதருக்குப் புத்திரசாபம் கொடுத்தவன்....
ஜலபோஜன்.


திருநாவுக்கரசரின் இயற்பெயர்....
மருள்நீக்கியார்

பிரகலாதனுக்கு தாயின் கருவிலேயே உபதேசித்தவர்....
நாரதர்

விழிக்கே அருளுண்டு' என்று அம்பிகையைப் பாடியவர்...
அபிராமி பட்டர்

சுப்ரபாதம் என்பதன் பொருள்...
நல்ல காலைவேளை

கூடற்கலாப மயில் எனப்படும்அம்பிகை ....
மீனாட்சி அம்மன்

ஆழ்வார்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பவர்...
நம்மாழ்வார்

தட்சிணேஸ்வர காளியுடன் நேரில் பேசிய அருளாளர்...
ராமகிருஷ்ண பரமஹம்சர்

 தாமரையின் பேரால் குறிக்கப்படும் சங்கரரின் சீடர்....
பத்மபாதர்

 சென்னை காளிகாம்பாளை வழிபட்ட மன்னர்....
சத்ரபதி சிவாஜி

"கடை விரித்தேன்.. கொள்வாரில்லை' என்று வருந்தியவர்...
வள்ளலார்


விஸ்வாமித்திரருக்கு "ராஜரிஷி' பட்டம் தந்தவர்...
பிரம்மா

தசரதன் என்பதன் பொருள்....
பத்துதிசைகளிலும்தேர் செலுத்துபவன்

 ராமநாமத்தால் தவசீலராக மாறிய வேடன்...
ரத்னாகரன்(வால்மீகி)

ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராம சகோதரர்...
லட்சுமணன்

 விதேக நாட்டில் பிறந்ததால் சீதைக்கு.... என பெயர்
வைதேகி

சுக்ரீவன் யாருடைய அம்சம் கொண்டவர்?
சூரியன்

 சிவ வடிவங்களில் வசீகர மூர்த்தியாகத் திகழ்பவர்...
பிட்சாடனர்

 முதலை உண்ட சிறுவனை வரவழைத்த அடியவர்....
சுந்தரர்

 ஸ்ரீருத்ரம் (மந்திரம்) ஜெபித்து சிவனருள் பெற்றவர் ...
ருத்ரபசுபதி நாயனார்

பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்....
திருத்தொண்டர் புராணம்


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பாடியவர்.......
திருமூலர்

 தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரம்....
கல்லால மரம்

சூரியவழிபாட்டுக்கு உகந்த மலர்...
செந்தாமரை

 "பாலூட்டும் தாயினும் அன்பு மிக்க சிவன்' என்று பாடியவர்.....
மாணிக்கவாசகர்

 சுந்தரரோடு கயிலாயம் சென்ற அடியார்...
சேரமான் பெருமாள் நாயனார்

 .......வேரில் விநாயகர் சிலை செய்து வழிபடுவர்.
வெள்ளெருக்கு

. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பருக்கு அருள் செய்த முருகன் எங்கிருக்கிறார்?
காஞ்சி குமரக்கோட்டம்

 விஷ்ணுவின் கையில் உள்ள வில்லின் பெயர்....
சார்ங்கம்

 ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

 மீனாட்சியம்மன் மீது பஞ்சரத்னம் பாடியவர்...
ஆதிசங்கரர்


புராணரத்தினம் என்று போற்றப்படுவது...
பாகவதம்

திருமால் .....நிலத்திற்குரிய கடவுள்.
முல்லை

 ஆலமர் செல்வன் என்று போற்றப்படுபவர்....
தட்சிணாமூர்த்தி

இளைய பெருமாள் என்று யாரைக் குறிப்பிடுவர்?
லட்சுமணன்

 இளைய ஆழ்வார் என்று போற்றப்படுபவர்....
ராமானுஜர்

அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்...
சங்கரநாராயணர்

திருமால் துயில் நீங்க பள்ளியெழுச்சி பாடியவர்...
தொண்டரடிப்பொடியாழ்வார்

அர்ஜுனனுக்கு கொடியால் உண்டான பெயர்.....
கபித்வஜன்(அனுமன்கொடி கொண்டவன்)

 முகூர்த்தம் என்பதன் கால அளவு...
90 நிமிடம்

 பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மந்திரம்.....
விஷ்ணு சகஸ்ரநாமம்.

விநாயகர் என்பதன் பொருள்......
உயர்ந்த தலைவர்

அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அளித்த முருகன்...
வயலூர்முருகன்

இசைஞானியார் என்ற பெண் நாயன்மாரின் மகன்....
சுந்தரர்

இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

 நவநிதிகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர்...
லட்சுமி குபேரர்

 கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல்....
கங்காஷ்டகம்

 சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

 உடுப்பி கிருஷ்ணரை ஆராதித்த அருளாளர்....
மத்வாச்சாரியார்

சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்...
அரிச்சந்திரன்

ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)


தசரதபுத்திரர்களில் ஆதிசேஷனின் அவதாரமாக குறிப்பிடப்படுபவர்....
லட்சுமணர்

 கண்ணில் கண்ட உயிர்களை எல்லாம் குருவாக ஏற்றவர்....
தத்தாத்ரேயர்

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றவர்....
திருமூலர்

 முருகனின் அருளால் கை வளரப் பெற்ற அடியவர்...
முருகம்மையார்

 விநாயகர் மீது காரியசித்தி மாலை பாடியவர்...
கபிலர்

திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர்....
குலச்சிறையார்

 திரிலோக சஞ்சாரி என்று சிறப்புப்பெயர் பெற்றவர்....
நாரதர்

 பொதிகைமலையில் உற்பத்தியாகும் நதி
தாமிரபரணி

 ஆண்டவனை அரை நிமிஷமாவது வணங்கச் சொல்லும் அடியவர்...
அருணகிரிநாதர்

 எமதர்மனின் தங்கையாக கருதப்படும் புனித நதி....
யமுனை

நவநிதிக்கும் அதிபதியாக குபேரனை நியமித்தவர்.....
சிவன்

குபேரமந்திரம் இடம் பெற்றுள்ள வேதம்...
யஜூர்

 கலியுகம் முடியும் வரை குபேரனுக்கு வட்டிசெலுத்துபவர்....
திருப்பதி வெங்கடாஜலபதி

குபேரனின் மனைவி....
சித்ரரேகா

குபேரனின் வாகனங்கள்....
குதிரை, கிளி, நரன்(மனிதன்)

 குபேரன் ஆட்சி செய்யும் பட்டினம்...
அளகாபுரி

 குபேரனுக்குரிய திசை....
வடக்கு

 அட்சயம் என்பதன் பொருள்....
குறைவில்லாதது

 திரவுபதி மானம் காக்க புடவை தந்த கிருஷ்ணர் சொன்னது வார்த்தை...
"அட்சயஅட்சய' (வளர்க வளர்க)

அட்சயபாத்திரம் ஏந்தியிருக்கும் காப்பியத்தலைவி....
மணிமேகலை

சந்தனம் கிடைக்காமல் சிவனுக்காக தன் கையையே அரைத்தவர்....
மூர்த்திநாயனார்

 3000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த அருளாளர்.....
திருமூலர்

 பிள்ளைகளுக்கு நாவுக்கரசரின் பெயரை இட்ட அடியவர்...
அப்பூதியடிகள்

 அபிஷேகப்பாலைக் கொட்டியதந்தையின் கால்களை வெட்டியவர்....
சண்டேஸ்வரர்க்ஷ

பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்...
அதிபத்தர்

 சிவபெருமானை காளை மாடு பூஜித்த தேவாரத்தலம்....
திருவையாறு

நந்தீஸ்வரரின் மனைவி...
சுயசாம்பிகை
மதுரையில் நடராஜர் ஆடிய நடனம்....
சந்தியாதாண்டவம்

அம்பிகை பூஜித்த லிங்கத்தை... என குறிப்பிடுவர்
தேவிக லிங்கம்

சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்...
சோமாஸ்கந்தர்.

நரசிம்மர் அவதரித்த நட்சத்திரம்.....
சுவாதி

 திவ்யதேசங்களில் நவநரசிம்மர் அருளும் தலம்...
அகோபிலம்

அகோபிலம் என்பதன் பொருள்.....
சிங்ககுகை

 ஒரே நேர்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்ம தலங்கள்....
பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்ககிரி(அபிஷேககுப்பம்)

 பிரகலாதனின் பெற்றோர்...
இரண்யன், கயாது

சித்ராபவுர்ணமியில்அவதரித்தவர்....
சித்ரகுப்தர்

சைவ வைணவ ஒற்றுமைக்காக மதுரையில் விழா நடத்தியவர்....
திருமலை நாயக்கர்

சித்ராபவுர்ணமியில் வைகையாற்றில் இறங்கும் பெருமாள்...
அழகர்கோவில் கள்ளழகர்

 கள்ளழகரிடம் சாபவிமோசனம் பெற தவமிருந்தவர்...
மண்டூகமகரிஷி

சித்ராபவுர்ணமியில் இந்திரன் பூஜித்த சிவன்.....
சுந்தரேஸ்வரர்(மதுரை)

பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் .....
முதல் திருவந்தாதி

 பத்மாவதியாக திருமகளை வளர்த்த மன்னர்.....
ஆகாசராஜன்

 முற்பிறவியில் எலியாக இருந்த சக்கரவர்த்தி....
பலி

நவக்கிரகங்களில் குருவிற்கு உரிய ரத்தினம்....
புஷ்பராகம்

 லட்சுமியின் உடன்பிறந்த சகோதரர்....
சந்திரன்

சுக்ரீவனின் மனைவி......
உருமை

 குமரகுருபரர் சரஸ்வதி மீது பாடிய பாடல்...
சகலகலாவல்லிமாலை

மற்றவர்கள் அறியாதபடி சிவனை வழிபட்ட அரசி...
மங்கையர்க்கரசி

 நாயன்மார்களில் ஒருவரான இசைஞானியாரின் மகன்....
சுந்தரர்

ஆறுநாட்கள் தொண்டு செய்து சிவனோடு கலந்தவர்...
கண்ணப்பர்



தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடியவர்.....
மாணிக்கவாசகர்

 சிவனுக்கு உகந்த விரதம்...
சோமவார விரதம்(திங்கள்கிழமை )

 கல்ஆலமரத்தின் கீழ் வீற்றிருப்பவர்.....
தட்சிணாமூர்த்தி

பார்வதிஆறுகுழந்தைகளை ஒன்றாக்கி முருகனுக்கு இட்டபெயர்...
கந்தன்(ஒன்று சேர்க்கப்பட்டவன்)

திருச்செந்தூரின் புராணப் பெயர்....
திருச்சீரலைவாய்

தமிழ் இலக்கியத்தில் காளியை .... என்று குறிப்பிடுவர்.
கொற்றவை

 லம்போதர் என்று விநாயகரை அழைக்க காரணம்....
பெருவயிறு பெற்றவர் என்பதால்

 துளசிதாசர் எழுதிய இந்தி ராமாயணம்...
ராமசரித மானஸ்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிய சித்தர்....
திருமூலர்

 வன்னி இலை நவக்கிரகங்களில் யாருக்குரியது?
சனீஸ்வரர்


ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம்....
திருச்செந்தூர்

முருக நாமத்தை எப்போதும் ஜெபித்த பெண் அடியார்.....
முருகம்மையார்

 கந்தசஷ்டிகவசம் யார்மீது பாடப்பட்டது?
சென்னிமலை முருகன்

குருவாக உபதேசித்த முருகன் அருளும் தலம்...
சுவாமிமலை

சித்தன்வாழ்வு என அழைக்கப்படும் தலம்....
பழநி

பாம்பன்சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள்....
6666

முருகனை வணங்க நாலாயிரம் கண்கள் தேவை என பாடியவர்.....
அருணகிரிநாதர்

ஆறுபடைவீடுகளில் முதல்வீடாக திகழும் தலம்...
திருப்பரங்குன்றம்

சரவணன் என்பதன் பொருள்...
நாணல்காட்டில் பிறந்தவன்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடிய அடியவர்....
குமரகுருபரர்

திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
திருஞானசம்பந்தர்

அறம் வளர்த்த நாயகியாக அம்பிகை அருளும் தலம்...
திருவையாறு

மணலால் சிவலிங்கம் வடித்து அம்பாள் பூஜித்த தலம்...
காஞ்சிபுரம்

 ஊன் உடம்பே ஆலயம் என்று போற்றியவர்....
திருமூலர்

நவக்கிரகங்களில் புதனுக்குரிய இரு கோயில்கள்...
திருவெண்காடு, மதுரை

 கந்தசஷ்டி கவசம் பாடியவர்.........
தேவராய சுவாமிகள்

 லலிதா சகஸ்ரநாமத்திற்கு இணையான நூல்...
அபிராமி அந்தாதி

பிரயாகை என்ற சொல்லின் பொருள்....
பிரம்மா யாகம் செய்த இடம்

ஆதிசங்கரர் சித்தியடைந்த தலம்....
கேதார்நாத்

திருக்குறளில் எத்தனை குறள்....
1330.

மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
தேவேந்திரன்

சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்....
சிக்கல்(நாகப்பட்டினம் மாவட்டம்)

 ஆண்டான் அடிமை மார்க்கத்தில் சிவனைப் பாடியவர்...
திருநாவுக்கரசர்

 மாணிக்கவாசகர் முக்திபெற்ற சிவத்தலம்...
சிதம்பரம்

மது,கைடபர்களை வதம் செய்து வேதத்தை மீட்டவர்....
ஹயக்ரீவர்

நைவேத்தியப் பிரியராக விளங்கும் தெய்வம்.........
விநாயகர்

 வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகங்கள்....
24,000

 கோபுரக்கலசங்களில் நிரப்பிவைக்கும் தானியம்...
வரகு

 ஓரங்க நமஸ்காரம் என்பது ......
தலை தாழ்த்தி இறைவனை வணங்குதல்

வடமாநிலங்களில் உள்ள கழுதை வாகன அம்பிகை
சீதளமாதா



தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
ஸ்வர்பானு

 பார்க்கவன் எனக் குறிப்பிடப்படும்கிரகம் .......
சுக்கிரன்

 பார்கவி எனப்படும் பிருகுமகரிஷியின் மகள்.....
லட்சுமி

மூதேவி என்பதன் பொருள்......
முதலில் தோன்றியவள்(மூத்ததேவி என்பதன் சுருக்கம். திருமகளுக்கு மூத்தவள்)

அஷ்டமாசித்திகளில் அணிமா என்பது .........
உடலை சிறிய அணுவாகமாற்றுதல்

அடியார்களுக்கு ஆடை வழங்கித் தொண்டு செய்தவர்......
நேசநாயனார்

 சிவன் மீது சேந்தனார் பாடிய பாடல்...
திருப்பல்லாண்டு

பன்னிருதிருமுறை பாடல்களைப் பாடியவர்கள்.....
27

 மங்களவாரம் எனக் குறிப்பிடப்படும் கிழமை....
செவ்வாய்

செல்வவளம் தரும் தனஆகர்ஷண சக்கரம் உள்ள கோயில்......
திருவானைக்காவல்


ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
கதாதரர்

திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள்....
4,5,6

ராமாயணத்தில் ...... பாராயணம் செய்வது சிறப்பு.
சுந்தரகாண்டம்

திருவருட்பாவை பாடிய அருளாளர்...
வள்ளலார்

 நம்மாழ்வார் மீது பாசுரம் பாடிய ஆழ்வார்.....
மதுரகவியாழ்வார்

"சுமித்ரா' என்பதன் பொருள்....
நல்ல நட்புடையவள்

ஸ்ரீவிருட்சம் என்று போற்றப்படும் மரம்....
வில்வம்

யானை சிவபெருமானை பூஜித்த தலங்கள்.....
திருவானைக்காவல், திருவாடானை

சிவனால் திருமணத்தை நிறுத்தி ஆட்கொள்ளப்பட்டவர்.....
சுந்தரர்

சீதைக்கு உதவிய அரக்கர் குலப்பெண்...
திரிசடை(விபீஷணன் மகள்)

திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
ராமானுஜர்

ஆண்டாள்கோயிலில் திருப்பணிசெய்த நாயக்க மன்னர்...
திருமலை நாயக்கர்

 தெலுங்கு மொழியில் ஆண்டாளைப் போற்றும் நூல்...
ஆமுக்த மால்யதா

 வடபத்ரசாயி என்பதன் பொருள்....
ஆலிலையில் துயில்பவன்

ஆண்டாள் பாடிய பாசுரங்கள்......திருப்பாவை (30), நாச்சியார்
திருமொழி(143 பாசுரங்கள்)

ரங்கநாதரை ஆண்டாள் மணம் செய்த நாள்....
பங்குனி உத்திரம்

வேதாந்ததேசிகர் ஆண்டாள் மீது பாடிய நூல்....
கோதாஸ்துதி

திருமணத்திற்காக ஆண்டாள் நேர்ச்சை செய்த கோயில்........
அழகர்கோவில்

 ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனப்பெயர்....
செண்பக வனம்

 கல்வெட்டுகளில் ஆண்டாள் கோயிலை .... என்று குறிப்பிட்டுள்ளனர்.
சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில்




விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
1863, ஜனவரி 12

 அவரது நிஜப்பெயர் என்ன?
நரேந்திரன்

 விவேகானந்தரின் பெற்றோர் யார்?
விஸ்வநாததத்தர்-புவனேஸ்வரி தேவி

 விவேகானந்தரின் ஆன்மிக துவக்கம் நிகழ்ந்தது எந்த வயதில்?
14

 குருதேவர் ராமகிருஷ்ணரை அவர் சந்தித்தது எப்போது?
1881 நவம்பர் (18 வயதில்)

 கன்னியாகுமரி கடலின் நடுவிலுள்ள பாறையில் விவேகானந்தர் தியானம் செய்தது எப்போது?
1892 டிசம்பர் 25,26,27.

விவேகானந்தருக்கு பிடித்தமான நிகழ்ச்சி
ராமாயண சொற்பொழிவு கேட்டல், ராமாயணப் பாடல்களை ரசித்தல்.

சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய அரங்கின் பெயர்
கொலம்பஸ் ஹால்

சிகாகோ கொலம்பஸ் ஹாலில் விவேகானந்தரின் பேச்சைக் கேட்க கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை...
7000.

 விவேகானந்தர் சர்வமத மகா சபையில் பேசிய முதல் வார்த்தை....
சகோதரர்களே! சகோதரிகளே!


ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
மேற்குவங்க மாநிலம் காமார்புகூர்

ராமகிருஷ்ணரின் பெற்றோர் யார்?
அப்பா க்ஷுதிராம், அம்மா சந்திரமணி

ராமகிருஷ்ணர் பிறந்த இடம் எத்தகையது?
நெல் வேக வைக்கும் அடுப்பு இருந்த சிறிய அறை

ராமகிருஷ்ணர் பிறந்த நாள்...
1836, பிப்ரவரி 17

 ராமகிருஷ்ணர் யாருடைய அம்சமாகப் போற்றப்பட்டார்?
ஸ்ரீமன் நாராயணன்

ராமகிருஷ்ணரை அவரது தாய் பிரசவித்த போது <உதவியவர்....
கொல்லர் இனத்தைச் சேர்ந்த "தனி' என்ற பெண்மணி.

 ராமகிருஷ்ணரின் இளமைப் பெயர்...
கதாதரன்

ராமகிருஷ்ணரின் செல்லப் பெயர்...
கதாயீ

 ராமகிருஷ்ணர் வழிபட்ட தெய்வம்...
தட்சிணேஸ்வரம் காளி

 ராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்...
விவேகானந்தர்.


ஐந்தாவது வேதமாக கருதப்படும் நூல்.....
மகாபாரதம்

கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய பாடல்......
கீதகோவிந்தம்

மயில் வாகன மயூரேச விநாயகர் எங்கிருக்கிறார்?
மகாராஷ்டிராவிலுள்ள மோர்காம்

அர்ஜுனன் மகன் அபிமன்யு...அபிமன்யுவின் மகன் யார்?
பரீட்சித்து

கபீர்தாசருக்கு பாத தீட்சை வழங்கிய மகான்...
ராமானந்தர்

புத்தரின் இளமைக்கால பெயர்.....
சித்தார்த்தர்

 கண்ணில் கண்ட 24பேரை குருவாக ஏற்றவர்....
தத்தாத்ரேயர்

சீடர்கள் குருவிடம் பணிவாக நடப்பதை ....என்பர்
நைச்யபாவம்(தன்னை தாழ்வாக நினைப்பது)

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.....
ராமானுஜர்

 என் கடன் பணி செய்து கிடப்பதேஎனபாடியவர்.....
திருநாவுக்கரசர்


வாமனரின் பெற்றோர்........
அதிதி, காஷ்யபர்

 அதிதி மகப்பேறு வேண்டி மேற்கொண்ட விரதம்...
பயோவிரதம்

 திருவோணத்திற்குரிய நட்சத்திர தேவதை....
மகாவிஷ்ணு

மகாபலி யாருடைய வம்சத்தில் பிறந்தவன்?
பிரகலாதன்வம்சம்

இந்திரபதவிபெற மகாபலி நடத்திய யாகம்.....
அஸ்வமேத யாகம்

 யக்ஞோபவீதம் என்னும் பூணூலை வாமனருக்கு வழங்கியவர்....
தேவகுரு பிருகஸ்பதி

மகாபலி அஸ்வமேதயாகம் நடத்திய நதிக்கரை.....
நர்மதா

மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க முயற்சித்தவர்....
அசுரகுரு சுக்ராச்சாரியார்

 மகாபலி சக்கரவர்த்தியின் மனைவி....
விந்தியாவளி

வாமனசரித்திரம் கேட்டதன் பலன்....
மழை பொழியும்


வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படுபவர்..........
நம்மாழ்வார்

 பல ஹோமங்கள் நடத்திய பாண்டிய மன்னன்.....
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

 வேதங்களை "ஸ்ருதி' என்று அழைப்பது ஏன்?
எழுதிப் படிக்காமல், காதால் கேட்டு மனப்பாடம் செய்வதால்!

விஷ்ணுவுக்குரிய சாளகிராமக்கல் ..... நதியில் கிடைக்கிறது.
நேபாளத்தில் ஓடும் கண்டகி

ராமன் என்பதன் பொருள்.........
ஆனந்தமாக இருப்பவன்

13 எழுத்து கொண்ட ராமநாமம்.....
ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

"உடையவர்' என்று அழைக்கப்படுபவர்.....
ராமானுஜர்

சுவாமி என்பதன் பொருள்........
சொத்துக்கு உரிமையானவர்

சுவாமி என்பதற்கு நேரான தமிழ்ச்சொல்.....
உடையவர்

 "சுவாமி' என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
சுப்பிரமணியர்



திருமலைக்கு நடந்து செல்லும் மலைப்பாதையின் பெயர்..........
சோபன மார்க்கம்

சோபனமார்க்கம் தொடங்கும்மலையடிவாரப்பகுதி......
அலிபிரி

 திருப்பதி கோயிலுக்கு ......... என்று பெயர்
ஆனந்தநிலையம்

ஆனந்தநிலைய விமானத்திற்கு தங்கமுலாம் பூசியவர்......
கிருஷ்ணதேவராயர்

திருப்பதியில் அன்றாடம் வரவுசெலவைக் கேட்பவர்......
கொலுவு சீனிவாசர்

 தோமாலா சேவையில் மூலவர்வெங்கடேசருக்கு........ சாத்துவர்
துளசிமாலை

திருப்பதி உற்சவரின் திருநாமம்......
மலையப்பசுவாமி

அதிகாலையில் சுப்ரபாதசேவை தொடங்கும் நேரம்..........
2.30மணி

திருப்பதி சீனிவாசரின் சகோதரராகக் கருதப்படுபவர்....
கீழ்திருப்பதி கோவிந்தராஜர்

 பத்மாவதியை சீனிவாசர் திருமணம் செய்த இடம்.....
ஸ்ரீநிவாசமங்காபுரம்


வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்....
திருநாவுக்கரசர்

காரணம் இல்லாமல் உயிர்கள் மீது இறைவன் காட்டும் கருணையை ...... என்பர்
அஹைதுக கிருபா

ஷாண்மாதுரர் என்பதன் பொருள்....
ஆறுதாயார்களைக் கொண்டவர்(முருகனை கார்த்திகைப்பெண்கள் ஆறுபேர் வளர்த்ததால்)

 பக்திசாரர் என்று குறிப்பிடப்படும் ஆழ்வார்.....
திருமழிசையாழ்வார்
மும்மூர்த்திகளில் பரிபாலனமூர்த்தியாக இருப்பவர்.....
விஷ்ணு(பரிபாலனமூர்த்தி- காப்பாற்றுபவர்)

பிரம்மாவின் மூன்று மனைவியர்....
சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி

 நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

வேதாந்ததேசிகர் ராமானுஜர் மீது பாடிய நூல்....
யதிராஜ ஸப்ததி

ஆழ்வார்களில் ராமன் மீது பக்தி கொண்டவர்....
குலசேகராழ்வார்

ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்


மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
13

ஆலிநாடன் என்று குறிப்பிடப்படுபவர்... ...
திருமங்கையாழ்வார்

கண்ணனுக்கு எட்டுவித மலர்களைச் சூட்டி அழகுபார்த்தவர்.....
பெரியாழ்வார்

ஏழுபிரகாரங்கள் கொண்ட திவ்யதேசம்.....
ஸ்ரீரங்கம்

திவ்ய தேசங்களில் 108வது திருத்தலம்....
பரமபதம்

தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர்.....
விப்ரநாராயணன்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்....
நாதமுனிகள்

எழுந்திருக்க முயலும் கோலத்தில் பள்ளி கொண்ட பெருமாள் எங்கிருக்கிறார்?
கும்பகோணம் சாரங்கபாணி

முதலாழ்வார் மூவரும் பெருமாளை தரிசித்த தலம்......
திருக்கோவிலூர்

நேபாளத்தில் உள்ள திவ்யதேசம்.....
முக்திநாத்

சரஸ்வதி மீது அந்தாதிப்பாடல் பாடியவர்....
கவிச்சக்கரவர்த்தி கம்பர்

ஆள்காட்டி விரலை நீட்டிய கோலத்தில் சரஸ்வதி அருளும் தலம்......
கங்கை கொண்ட சோழபுரம்

அம்சவல்லி என்ற பெயரின் பொருள்.....
சரஸ்வதி (அன்னவாகனத்தில் வீற்றிருப்பவள்)

 மயிலில் வீற்றிருக்கும் சரஸ்வதிக்கு ..... எனப் பெயர்.
வர்ஹவாகினி

சரஸ்வதி அருளால் இந்தி பேசும் அருள்பெற்றவர்......
குமரகுருபரர்

சரஸ்வதிக்குரிய திதி, நட்சத்திரம்....
நவமி, மூலம்








திபெத்தியர்கள் சரஸ்வதியை ... என அழைப்பர்.

யங்சன்ம

 ஞானபீடம் விருதின் சின்னமாகத் திகழ்பவள்......
வாக்தேவி(சரஸ்வதி)

ராமானுஜருக்கு சரஸ்வதி அருளிய பட்டம்......
பாஷ்யக்காரர்

ஒட்டக்கூத்தர் சரஸ்வதியை எவ்வாறு குறிப்பிடுகிறார்...
சொற்கிழத்தி


சேக்கிழாரின் இயற்பெயர்.....
அருண்மொழித்தேவர்

சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

 உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

 கிருஷ்ணருக்கு சிவதீட்சை வழங்கியவர்.....
உபமன்யு

நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

தாருகாவனத்து ரிஷிகளை மயக்க விஷ்ணு எடுத்த கோலம்.....
மோகினி

தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

 உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

 கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

 பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்


சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

 சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்


பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது.....
மதுரை

சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

தேவாரம் என்பதன் பொருள்......
தெய்வத்திற்கு சார்த்தும் மாலை

 சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

 பன்னிருதிருமுறைகளில் உள்ள பாடல்கள் எத்தனை?
18,350

திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடத்தப்படும் தலம்.....
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்




"எல்லா புகழும் இறைவனுக்கே..."

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.

சிவனின் அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில்

யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக:

புருசோத்தம:

சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச

விம்சாதிகம் ப்ரபோ:

பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன.

இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள்.

மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது.

பிரம்ம புராணம்

பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

2. பத்ம புராணம்

காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

3. பிரம்ம வைவர்த்த புராணம்

கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.



அணில் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

ஆமை - திருமணஞ்சேரி

யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு, பெண்ணாடகம், திருக்கானப்போர்.

  - ஈங்கோய்மலை

எறும்பு - திருவெறும்பூர்

கரிக்குருவி - மதுரை, வலிவலம்

 கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்

கருடன் - சிறுகுடி

கழுதை - கரவீரம்

காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

குதிரை - அயவநீதி

குரங்கு - குரங்குக்கா, குரங்காடுதுறை, குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

சிங்கம் - திருநல்லூர்



திருவுருவங்கள்

பாலகணபதி

தருண கணபதி

 பக்த கணபதி

வீர கணபதி

சக்தி கணபதி

 துவஜ கணபதி

சித்தி கணபதி

 உச்சிஷ்ட கணபதி

விக்கினராஜ கணபதி

 ஷிப்ர கணபதி

ஹேரம்ப கணபதி

லட்சுமி கணபதி

. நிருத்த கணபதி

ஊர்த்துவ கணபதி

ஏகாட்சர கணபதி

 வர கணபதி

 திரியட்சர கணபதி

18. ஷிப்ரப்பிரசாத கணபதி

19. ஹரித்திரா கணபதி

20. ஏகதந்த கணபதி

21. சிருஷ்டி கணபதி

22. உத்தண்ட கணபதி

23. ரிணமொச்சக கணபதி

24. துண்டி கணபதி

25. துவிமுக கணபதி

26. திரிமுக கணபதி

27.


Thiruneeru pathigam

                          திருச்சிற்றம்பலம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம் தருவது நீறு புண்மைதவிர்ப்பது நீறு

ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே.


Feedback

No comments:

Post a Comment