Monday, 11 February 2013

குங்குமப் பூவின் சிறப்பு!

குங்குமப் பூவின் சிறப்பு!



விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான்.
இதோ சில குங்குமப் பூ அழகு, மருத்துவக் குறிப்புகள்...
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.
மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ- வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.
ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்' அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

No comments:

Post a Comment