Monday, 11 February 2013

மல்லிகை


மல்லிகை

கள்மூலிகைகளைஅறிவோம்:மல்லிகை!
மணமணக்கும்மல்லிகைபூக்களையும்,மல்லிகை செடிகளையும் அறியாதவர்கள் இருக்க முடியாது. மல்லிகை மலர்கள் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. தமிழகம் முழுவதும் மல்லிகை பயிர் செய்யப்படுகிறது . வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கிறார்கள் .
மல்லிகைப் பூக்கள் குடல் புழுக்களை வெளியேற்றும்.வீ க்கத்தைக் கரைத்து குணப்படுத்தும். சிறுநீரை பெருக்கும். மாதவிடாயை தூண்டும். தலை நோய், உடல் வெப்பம், கண் நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்கள பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும். தினமும் மாலையில் 3 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும். 20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம்.
தொடைப்புண் குணமாக மல்லிகைப் பூக்களை அரைத்து , புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும்.
காட்டு மல்லிகை, சாதி மல்லிகை, ஊசி மல்லிகை, குடமல்லிகை என்று மல்லியில் பல வகைகள் உள்ளன.
இவைகளின்மருத்துவப்பயன்கள் பெரும்பாலும்ஒன்றாகத்தான் இருக்கும். காட்டு மல்லிகை இலைகளை அரைத்து பூசினால் வெண்குஷ்டம் கட்டுப்படும்.குடல் புழுவை வெளியேற்றும்.
மல்லிகை!
மணம் கமழும் ல்லி, மதுரை ல்லி ன்றெல்லாம் தெரியும். ஆனால் மருத்துவ ல்லியைப் ற்றிஉங்களுக்குத் தெரியுமா?
தலை‌‌யில் சூடுவதற்கும், மாலை அலங்காரங்களு க்கும் பயன்படும் ல்லிகையின் மருத்துவ குணங்களை ப்போது பார்ப்போம்.
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப்புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாகவெளியேறி விடும்.
புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள் , சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாகஇருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து,காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்காணாமல் போகும்.
பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள் . இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலேபோதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கும்.
இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டுதினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்

No comments:

Post a Comment