Monday, 18 February 2013

நான்காவது பாவம்


நான்காவது பாவம்

நான்காவது பாவம்
சரி அடுத்து ஒவ்வொரு பாவக அதிபதியும் நான்காவது பாவத்தில் நின்ற பலன்
  1. லக்னாதிபதி நாலில் நின்றாள் ஜாதகன் சுகவாசி, வாகன யோகமுடையவன், தாய் மீது ஜாதகருக்கு மிகுந்த அன்பு இருக்கும்,அதிக உறவினர் உடையவன்
  2. இரண்டுகுடையவன் நாலில் நின்றாள் தாயாரின் கையில் நிதி நிர்வாகம் இருக்கும்,வாகனத்தின் மூலம் பணம் வரும், குடும்ப ஒத்தழைப்பு ஜாதகருக்கு கிடைக்கும்,
  3. மூணாம் அதிபதி நாலில் நின்றாள் தாயார் செலவு செய்வார், வீட்டு செலவு அதிகம் இருக்கும், சகோதிர உதவி தாயாருக்கு கிடைக்கும்
  4. நாலாம் அதிபதி நாலில் நின்றாள் தாயாரின் செல்வாக்கு அதிகம் இருக்கும்,வாகன யோகம் உண்டு ,ஜாதகர் வீடு வாசல் உண்டு
  5. ஐந்தாம் அதிபதி நாலில் இருந்தால் ஜாதகரின் தாயார் செல்வாக்கு பணம் உடையவர், வாக்கு வன்மை உண்டு, வாகனத்தின் மூலம் பணம் கிடைக்கும்
  6. ஆறாம் அதிபதி நாலில் நின்றாள் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு உண்டு, சித்தி,பெரியம்மாவின் ஆதரவு தாயாருக்கு உண்டு, வாகன செலவு ஏற்படும், வீட்டினால் பிரச்சனை ஏற்படும்
  7. தாயார்  சுகவாசி ,(நாலாம் பவகத்துக்கு சுக ஸ்தானம் ஏழாம் இடமாகும்)
  8. சொந்த வீடு வசதி உண்டு ,வசதியான வீடு ஜாதகருக்கு கிடைக்கும்
  9. நாலாம் பாவத்தில் எட்டுகுடையவன் நின்றாள் ,கல்வி தடை ஏற்படும், மை வாங்குவதில் பிரச்சனை வரலாம், உறவினர் பகை வரலாம், சுக குறைவு வரலாம்,
  10. ஒன்பதுகுடையவன் நின்றாள் ,தாயார் மீது தகப்பனாருக்கு அன்பு இருக்கும்,தாயாரின் உடல் நிலை பாதிப்பு வரும்,வாகனத்தில் நீண்ட தூர பயணம் ஏற்படும்,
  11. பத்தாம் அதிபதி நின்றாள், தாயார் கெளரவமானவர், தொழில் மூலம் வீடு வசதி ஜாதகருக்கு கிடைக்கும், உறவினர் மத்தியில் அந்தஸ்து ஏற்படும், மனைவியின் அன்பு தாயாருக்கு கிடைக்கும்,
  12. பதினோராம் அதிபதி நின்றாள் தாயாருக்கு அவமானம் வரும், (நாலாம் பாவகத்துக்கு எட்டாம் பாவ அதிபதி) பல வழிகளில் வாகனத்தின் மூலம் பணம் வரும்
  13. பன்னிரண்டாம் அதிபதி நின்றாள் தாயார் தெய்வ அருள் பெற்றவர், மனை வாங்குவதில் செலவு ஏற்படும்,கல்வி செலவு உண்டு, தாயார் நீண்ட பயணம் செல்வார்
அன்பு ஜோதிடர்களே இபோது புரிகிறதா ?இல்லை புரியவில்லையா
புரியாவிட்டால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள், வெட்கபடாதீர்கள்,

நமக்கு புரிந்து கொள்கின்ற கூடுதலான அறிவை ஆண்டவன் நமக்கு அருள வேண்டுமாய் அன்போடும்,பணிவோடும்,ஆத்மா உள்ளத்தோடும் வேண்டிகொள்வோம், அதற்க்கு நமது குல தெய்வம் காக்கும்
சரி நாம் இன்னொரு வகையில் ஆய்வு செய்வோம்
  1. நாலாம் அதிபதி லக்னத்தில் நின்றாள் ஜாதகரை தேடி நிறைய உறவினர்கள் வருவார்கள்,வாகன,வீடு யோக உண்டு,ஜாதகர் நன்றாக படிப்பார்
  2. நாலாம் அதிபதி இரண்டில் நின்றாள் ,தாயாரின் அன்பு ஜாதகரின் குடும்பத்துக்கு கிடைக்கும், தனம் சம்பாதிக்கும் வழி உண்டு,வாகன மூலம் வருமானம் உண்டு
  3. நாலாம் அதிபதி மூனில் நின்றாள் ,தாயார் நிறைய செலவு செய்வார், அலைச்சல் இருக்கும்,சகோதிரன் அவர்களுக்கு தாயாரின் அன்பு கிடைக்கும்,
  4. நாலாம் அதிபதி நாலில் நின்றாள் தாயார் சுய கௌரவம் உடையவர், வீடு வாகன வசதி ஜாதகருக்கு கிடைக்கும்
  5. நாலாம் அதிபதி ஐந்தில் நின்றாள் தாயாருக்கு பண ஆசை இருக்கும்,பேரன் பேத்தி மீது அன்பு இருக்கும், பூர்வீக இடதிதில் வாசிப்பார்,பூர்வீக வீடு ஜாதகருக்கு கிடைக்கும்,
  6. நாலாம் அதிபதி ஆறில் நின்றாள் ,தாயார் நோய் வை படுவார், வீட்டினால் பிரச்சனை வரும்
  7. நாலாம் அதிபதி ஏழில் நின்றாள் தாயார் சுகவாசிஜாதகருக்கு மனைவி வந்துடன் மனை ஏற்படும்,
  8. நாலாம் அதிபதி எட்டில் நின்றாள் கல்வி தடை ஏற்படும், வீடு வாங்கினால் விற்க நேரிடும், உறவினர் பகை வரும்
  9. நாலாம் அதிபதி ஒன்பதில் நின்றாள் ,தாயார் சண்டை இடுவார்,கலக பிரியர்,
  10. பத்தில் நின்றாள் ,தயார் சமூக அந்தஸ்து உடையவர், தொழில் தாயாரின் உதவி கிடைக்கும், கெளரவமானவர்.
  11. பதினொன்றில் நின்றாள் தாயார் அவமானம் படுவார், ஜாதகர்  வீடு இழப்பு வரலாம்,
  12. பன்னிரண்டில் நின்றாள் ஆன்மீக உணர்வு தாயாருக்கு வரும், நீண்ட கால சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் 
அன்பு மாணவர்களே நாலில் ராகு ,கேது சேர்கை அவ்வளவு நல்லது அல்ல,இதனால் தாயாரின் உடல்நிலை பாதிப்பு,கல்வித்தடை, மனை வாங்குவதில் சிக்கல்,உறவினர் பிரச்சனை , சுக குறைவு, போன்ற பிரச்சனை வரலாம்,

இந்த பாவகத்தை யோகர்கள் பார்வை இருந்தால் இந்த பிரட்சனயிளிருந்த தப்பிவிடலாம்.
இதை பற்றி விளக்க ஒரு நாள் கூட ஆகலாம், ஏநவே நாம் ஒரு விதியை புரிந்துகொண்டு நடந்தால் சுலபமாக கற்றுகொள்லாம்
.
அன்பு மாணவர்களே இந்த நான்காம் பாவகத்தை தொடர்ந்து ஒரு சில விசயங்களை நாம் ஆராய்வோம்
இன்றைய சிறப்பு பாடமாக கோட்சார நிலைகளில் சனிஸ்வர பகவான் எப்படிபலன்களை தரபோகிறார் என்று பாப்போம்

ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்! 

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.



பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.
இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.

எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப
போட்டு விடுவார்.

விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!
உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?

உண்டு!

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.

அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?
80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?
இல்லை! வேறுபடும்!

முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!


இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.


ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.


அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.

அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்

சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.


இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான்.
அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

No comments:

Post a Comment