Monday, 11 February 2013

இளைத்தவனுக்கு எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு


இளைத்தவனுக்கு எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு என கேள்விப்பட்டிருப்போம்.

உடல் இளைத்தவன் எள்ளு சாப்பிட்டால் உடல் தேறுவான்,உடல் கொழுத்து தொந்தி போட்டவன் கொள்ளு சாப்பிட்டால் உடல் இளைப்பான் என்பதே இதன் பொருள்.

கொள்ளுக்கு உடலின் ஊளைச்சதை, கொழுப்பைகரைக்கும் ஆற்றல் உண்டு, சீரணத்திற்கு, வயிற்று உபாதைகளுக்கு ஏற்றது, எலும்புக்கும், நரம்புக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் பருமனால் அவதிப்படுவோர் கொள்ளு சூப்,ரசம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்,கொள்ளு சூப் சளித்தொல்லையை விரட்டும்.

பழங்காலத்தில் இது காணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்து துவையல் செய்து அதை உளுத்தம் களியுடனோ அல்லது அரிசி கஞ்சியுடனோ தொட்டு சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது.

அதனால்தான் நம் முன்னோர்கள் குதிரை சக்தியுடன் இருந்தார்களோ?

1 comment:

  1. kolllu pathiya karuthukal mega payanullavaiya erunthathu

    ReplyDelete