Saturday, 23 February 2013

கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது…


கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது…


* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

No comments:

Post a Comment