Monday, 11 February 2013

திருமணம்


திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
தவறான நம்பிக்கை-1
மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை - அப்படியில்லை. நீங்கள் ஒருவரை சட்டப்பூர்வமாக மணந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்றுதான் பதிவு செய்து கொள்வது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மற்றும் உங்கள் பெயருடன் உங்கள் கணவர் பெயரையும் சேர்த்துப் பயன்படுத்தப் போகிறீர்கள் எனும்போது திருமணச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
தவறான நம்பிக்கை - 2
ஹிந்து திருமண முறைப்படி திருமணம் நிச்சயமாகியிருந்தால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் பதிவு செய்து கொள்ள முடியும்.
உண்மை - இது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயத் திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் மணமகன் இருந்து திருமணமான சில நாட்களிலே மணமகள், அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வசதி.
தவறான நம்பிக்கை - 3
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்கு திருமணம் நடத்தித் தரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் நின்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பதிவாளரின் கடமை.
உண்மை - அப்படியில்லை. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தேவை. ஏற்கெனவே திருமணம் செய்து கொள்ளாதவராக (அல்லது திருமணம் ஆகியிருந்தால் உரிய முறையில் விவாகரத்து பெற்றவராக) இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தால் துணைவர் இறந்திருக்க வேண்டும். மனநிலை சரியாக உள்ளவர்களுக்குத்தான் (அதாவது புத்திசுவாதீனம் உள்ளவர்கள்) திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் இருவரும் ஏற்கெனவே ரத்தவழி உறவுக்காரர்கள் என்றால் அவர்களுக்கு இடையே திருமணம் நடப்பது தடை செய்யப்பட்டிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஹிந்துக்களில் சகோதரர்களின் குழந்தைகள், சகோதர சகோதரிகள்தான். பெரியப்பா மகனை சித்தப்பா மகள் திருமணம் செய்துகொள்ள சம்பிரதாயத்தின்படியும், சட்டப்படியும் அனுமதி கிடையாது.
தவறான நம்பிக்கை - 4
உரிய சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிட்டால் காதலர்கள் அடுத்த நாளே பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு விடலாம்.
உண்மை - ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின்கீழ் நடக்கும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அறிவிப்பை மணமக்களில் ஒருவர் திருமண அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பை பதிவாளர் அலுவலகத்தில் பளிச் சென்று தெரியக்கூடிய ஓர் இடத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைப்பார்கள். இதிலிருந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் அந்தத் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் திருமணம் நடந்து அங்கேயே பதிவு செய்யப்படும். அப்படி ஆட்சேபணை கிடைக்கப் பெற்றால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
கூடுதல் செய்தி:
இப்போதெல்லாம் திருமண மண்டபத்துக்கே வந்து கூட திருமணத்தை பதிவுசெய்கிறார்கள். இதற்கான தனிக்கட்டணம் உண்டு. என்றாலும் கையோடு சான்றிதழையும் சத்திரத்திலேயே கொடுத்துவிட மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். பதிவுசெய்த அன்றேகூட இந்தச் சான்றிதழைப் பெறமுடியும்.
படிவம் 1ம் மணமக்களோடு, திருமணத்க்கு வந்திருந்த வேறு இரண்டுபேரும் சாட்சி அளிக்கவேண்டும்.
இந்தக் காலத்தில் பெரியவர்களின் ஆசி, மணமக்களின் விருப்பம் இவற்றைப் போலவே சட்டத்தின் துணையும் மிக அவசியம் என்றாகிவிட்டது. எனவே சட்டம் அளிக்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும்' என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும்.
அதாவது, ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்லச் செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது. ஆக, பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்கு காரணம் நமக்கு வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான்!
ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?
இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், `நான் கண்டுபிடித்துவிட்டேன்' என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர்.
நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது. `ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ணிலிலிறி புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.
முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும். ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.
பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர்.
இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.
மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.
`என்றும் பதினாறு' மார்க்கண்டேயனைப் பற்றி படித்திருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, ஒருவேளை மார்க்கண்டேயனின் ELLP புரதங்கள் அவனுடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதமடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது!
பித்தம்
நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, சக்தியாக மாற்றுவதும் பித்தத்தின் பணியாகும். நாம் உண்ணும் உணவை சரியானபடி செரிக்கவைத்து, தேவையற்ற கொழுப்புகள் அங்குமிங்கும் படியாமல் பாதுகாக்கும்
உணவுகள் பித்தசமனி என்று அழைக்கப்படுகின்றன. சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகள் பித்தத்தை சமப்படுத்தும் உணவுகளாகும். பித்தம் சரியாக இயங்காவிட்டால் நமது உணவு செரிமானமாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பித்தத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலின் ஆற்றலை தடை செய்கின்றன.
நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் ஒருவிதமான எரிச்சல் வயிற்றில் ஏற்பட்டு, உணவு உண்ணும் வேட்கை அதிகமாகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள பல்வேறு வகையான சத்துகள் உடலின் எடையையும் பருமனையும் அதிகப்படுத்துகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவின் அளவை குறைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடற்பருமன் அதிகமாவதுடன், உடற்பருமன் சார்ந்த சர்க்கரை நோய். ரத்தக்கொதிப்பு, மிகு கொழுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பருமனின் காரணமாக மூச்சு வாங்குதல், உடலின் அங்கமைப்புகள் மாறுபடுதல், முழங்கால், கணுக்காலில் வலி உண்டாதல், தொண்டை வறட்சி, கழுத்து, புட்டம் போன்ற சதைப்பகுதிகள் தொங்கி காணுதல், நடக்கும்பொழுது அதிக உடல் எடையின் காரணமாக அசைந்து செல்வது போன்ற தோற்றம், பிறரின் கேலிக்கு ஆளாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
உண்ணும் உணவின் அளவை நமது வேலை மற்றும் எடைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். கூடுதல் கலோரிகள் கொண்ட உணவை தவிர்த்து, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நாம் உண்ணும் உணவுடன் பசியை கட்டுப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் எடை குறையும். உணர்ச்சிவசப்பட்ட பசி என்ற எமோசனல் பசியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நமக்கு பிடித்தமான உணவுகள் என்றால் அதிகமாக சாப்பிடுவதும், பிடிக்காத உணவுகள் என்றால் தவிர்ப்பதும் உடலின் செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, பல்வேறு உடற்கோளாறுகளை உண்டாக்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல நோய்கள் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தவும் அதிக பசியினால் உண்டாகும் நாப்புளிப்பு மற்றும் சுவையின்மை ஆகியவற்றை நீக்கவும் பயன்படுவதுடன், செரிமான ஆற்றலைநிலைநிறுத்தும்
அற்புதமூலிகை கள்ளி முளையான். கேரலுமா பிம்பிரியேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த கள்ளி செடிகளின் தண்டுகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. எழுமான்புளி என்ற வேறு பெயர் கொண்ட இந்த மூலிகையின் புளிப்புச் சுவையானது ஊறுகாய்,துவையல் போன்றவை தயார் செய்ய உதவுகிறது. இதன் தண்டுகளிலுள்ள ஸ்டார்வோசைடுகள் மற்றும் பிரக்னின் கிளைக்கோசைடுகள் தேவையற்ற கொழுப்பை நீக்கி, பித்தத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான அளவு மட்டுமே பசியை உண்டாக்கு கிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் தருவதால்பஞ்சகாலத்தில்உட்கொள்ளக்கூடிய உணவாகவும் முற்காலத்தில் இவை பயன் பட்டன.
கள்ளிமுளையான் தண்டை மேல்தோல், நார், கணு நீக்கி, நல்லெண்ணெய் விட்டுவதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு, கடுகை சிவப்பாக வறுத்து, இத்துடன் வதக்கிய கள்ளிமுளையான், தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைத்து, துவையல் போல் செய்துகொள்ள வேண்டும். இதனை உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட உடலில் தேங்கிய அதிகப்படியான கொழுப்பு கரையும். உடற்பருமன் நீங்கும். கள்ளிமுளையானை தோல் நீக்கி, நார், கணு நீக்கி, நல்லெண்ணெய்விட்டு வதக்கி மைய அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் நல்லெண்ணெயில் கடுகை போட்டு பொரித்து, அத்துடன் வதக்கிய கள்ளிமுளையான் மற்றும் பொடிகளை கலந்து, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்துக்கொள்ள வேண்டும். இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட தேவையற்ற பசி குறையும். பித்தம் தணியும்.

No comments:

Post a Comment