Sunday, 10 March 2013

திருமண வாழ்க்கைபொறுப்பு

திருமண வாழ்க்கையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியவர்கள் ஆண்களே , காரணம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைக்கு தலை முறை தலை முறையாக பாதிக்கிறது என்பதே உண்மை , முன்னேற்றம் பெறாத ஜாதக அமைப்பில் எல்லாம் பெண்ணுக்கு செய்த கொடுமையின் காரணமாக , சுய ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்கள் கூட யோகபங்க நிலைக்கு ஆளாகி , விருத்தியை தாராமல் இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம் , மேலும் ஒரு ஜாதகனுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்தாலும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவர்களால் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு , வாழ்க்கை துணைக்கு கண்ணை மூடிக்கொண்டு நன்மையே செய்யுங்கள் , சிறிது காலம் வரை சிரமத்தை தரும், ஆனால் சில கலாங்களுக்கு பிறகு இனிமையான இல்லற வாழ்க்கையாக மாறிவிடும் , இது அனுபவத்தில் பலருக்கு அறிவுறுத்தி நன்மை பெறுவதை கண்ணால் கண்டவன் என்ற முறையில் சொல்கிறோம் , வாழ்க்கை துணையின் இன்னல்களை ஒரு ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது ஜாதகன் செய்த முன்ஜென்ம கர்ம வினை பதிவு கழிந்து , மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது என்பது முற்றிலும் உண்மை .

No comments:

Post a Comment