Monday, 18 March 2013

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்


காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.
அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.
இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

1 comment:

  1. ஏழு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு கோழி முட்டையிடும். தினசரி, முட்டை பச்சையாக உடைத்து, வாயில் கொட்டிக்கொண்டு, அரைமயில் ஓடிவருவோம். இதில் எத்தனை முட்டை என்பது கணக்கில் கிடையாது. நமக்கு தேவையானவற்றை உடைத்து சாப்பிட்டு, ஜீரண சக்திக்காக, எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும், ஓடலாம். எங்கள் வீட்டில் கோழிகள், வான்கோழிகள், பிரியத்துக்காக கூஸ் என்று ஏகப்பட்ட செல்லங்கள் உண்டு. ஆகவே, முட்டை விற்பனைக்கல்ல. வீட்டு உபயோகத்திற்கும், இனப்பெருக்கத்திற்கும் மட்டுமே. கோழி கறி சாப்பிடமாட்டோம். காரணம், குழந்தைகளாகப் பழகும் என்பதே. ஆகவே, பச்சைமுட்டை சாப்பிடுகிறவர்கள், மாதம் ஒருமுறையோ, (R) இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ,வேப்பங்
    கொழுந்து அரைத்து குடிக்கவேண்டும். இல்லையேல், வயிற்றில் புழு உற்பத்தியாகும். கை, கால் உடைந்தவர்களுக்கு, முட்டைப்பத்து போட்டால், உடைந்தவைகள் ஒன்று சேரும். முட்டை அரைவேக்காடு(ஆப் ஆயில்) மிளகு, உப்பு பவுடர் பண்ணி சேர்த்து, சாப்பிட்டால், சளி, தொண்டை இறுமல், தொண்டை கரகரப்புக்கு மிகவும் நல்ல மருத்துவம். முட்டையில், அநேக மருத்துவக் குணங்கள் உண்டு. ஆனால், அவை நாட்டுக்கோழி முட்டையாக இருக்கவேண்டும் என்பது தான் அதி முக்கியமான ஒன்று.

    ReplyDelete