LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் 1800-425-247-247 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி வேலை நாட்களில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கேஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இதுவரையில் இருந்தது. இனி இந்த நிலை மாற்றப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.
கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் அந்த பகுதியின் மெக்கானிக்கிடம் உடனடியாக தகவல் கொடுக்கப்படும். அவர் வந்து பார்த்ததன் அடையாளமாக உடனடியாக கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று மாலையில் தொடங்கி வைக்க உள்ளார்.
No comments:
Post a Comment