Thursday 11 April 2013

பில்லி சூனியம், திருஷ்டியை தடுக்கும் ஆகாய கருடன் கிழங்கு


 பில்லி சூனியம், திருஷ்டியை தடுக்கும் ஆகாய கருடன் கிழங்கு விற்பனை ஜோராக நடக்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில், 60 வயதான முதியவர் ஒருவர் கையில், சிறிய கூர்மையான கம்பியுடன், கைகளில் வித்தியாசமான கிழங்குகளை வைத்துக்கு கடைகளில் தோறும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.சலூன் கடைகள் முதல், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் வரை, ஆர்வமுடன் அந்த பெரியவரிடம் கிழங்கினை காசு கொடுத்து வாங்கி, கடையின் முன் பகுதியில் கட்டித் தொங்க விட்டனர்.
கிழங்கு விற்பனை செய்த அந்தியக்கவுண்டர் கூறியதாவது: எனது சொந்த ஊர் அந்தியூர். 50 ஆண்டாக, அந்தியூர் மலைப்பகுதியில் விளையும், ஆகாய கருடன் கிழங்கு தோண்டி எடுத்து, விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளேன். வெள்ளை எருக்கன் செடியை போல, ஆகாய கருடன் கிழங்கும் சிறப்பு பெற்றதாகும். வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் முன்புறம் ஆகாய கருடன் கிழங்கை வாங்கி கட்டித் தொங்க விடுவது வழக்கமாகும். தொங்கிய நிலையில் கிழங்கு தானாவே வளரக்கூடும். முற்றத்தில் ஆகாய கருடன் கிழங்கை கட்டினால், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, காத்து கருப்பு போன்றவை அண்ட விடாமல் செய்துவிடும். கிழங்கு ஒன்று, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரெகுலர் கஷ்டமர்கள் புதுவீடு, கடை வைத்தவர்கள் ஆர்வமுடன் வாங்குவர். இக்கிழங்கை உணவுக்கு பயன்படுத்த முடியாது, எனக்கூறினார்.

No comments:

Post a Comment