Wednesday 24 April 2013

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்??

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்??

பாலில் நெய் மறைந்திருப்பதை போல எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவனை வணங்கலாம் என்பது ஒரு கருத்தாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

ஒரு துணியை வெயிலில் காயப்போட்டால் உலர்ந்து போகும். அதே துணியை ,ஒரு லென்சின் கீழ் வைப்பதால் கருகிவிடும். சூரியக் கதிர்கள் ஒன்றுதான். ஆனால் அது குவியும் போது சக்தி அதிகமாகிறது. அது போல வெளி இடங்களை விட கோயிலில் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

இறை வழிபாட்டுக்கு முக்கியத் தேவையே மன ஒருமைப்பாடு தான்.அந்த சமயத்தில் செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். இது மட்டுமன்றி, கோயிலுகளுக்கு மனசுத்தமுடைய அடியார்கள் பலர் முற்காலத்தில் வந்து சென்றுள்ளனர்.

நல்லவர்களின் பாதம்பட்ட இடத்தில் நின்றாலே, நம் பாவங்கள் கருகிப்போகும். கோயிலில் உள்ள படிகட்டுகள் கூட அடியவர்களின் திருவுருவங்கள் என்று கூறப்படுவதுண்டு. எனவே வெளியிடத்தில் கடவுளை பிராத்தித்தாலும் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்

2 comments:

  1. என்னதான் வீட்டில் விழுந்து விழுந்து குத்துவிளக்கேற்றி வணங்கினாலும், ஆலயத்துக்குச் சென்று வணங்குகிற ஒரு மனதிருப்தியே தனிதான். கிறிஸ்தவத்தில் ஒன்று. எங்கே இரண்டுமூன்றுபேர் எந்தன் நாமத்தில் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் இருப்பேன் என்பவர் நமது தேவன், என்று ஒருபாடல்வரிகள் உண்டு. உண்மை. நாம் கோவிலுக்குச் சென்று, பூஜைகள் செய்து, அங்கு அவர் சந்நிதானத்தில் அத்தனை பேரும் குழுமியிருக்க, அர்ச்சகர் அரச்சனைகள் செய்து, தீபாரதனைகாட்டி, நாம் வணங்கும்போது, உண்மையாகவே, அங்கு நம் நடுவில் பகவான் இருப்பார். அந்த இடமே,ஒரு தெய்வீகமயமாகத் தெரியும் என்பதில் சந்தேகமேயில்லை.

    ReplyDelete
  2. அய்யா! வெ.சாமி அவர்களே! நான் எங்குபோய் சாமி தரிசனம் செய்தாலும், என்னை ஒரு வேடிக்கையாகப் பார்ப்பார்கள். எனக்கு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டால்தான் பிடிக்கும். அப்போ என் பெயரை சொல்வேனா, உடனே ஒரு வித்தியாசமாகப் பார்ப்பார்கள். எனக்கு அந்த சூழ்நிலை பிடிக்கவில்லை. ஆகவே, ஆலயம் செல்வதைக் குறைத்துக் கொண்டேன். நான் தினசரி நெல்லையப்பர் கோவில் சென்று சாமிகும்பிட்டு பழகியவள் என்பது உண்மை. தற்போது ஒருசில காரணங்களால் செல்லாமல் இருக்கிறேன். ஆகவே, மனதிருப்தி இல்லாமல் இருக்கிறேன்.

    ReplyDelete