Wednesday, 24 April 2013

திருமந்திரம்

திருமந்திரம் :: உபதேசம்::

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

கருவிகள் முப்பத்தாறனுள்ளும் ஆன்மா கட்டுண்டு தன்னியல்பை அறியாது அவையே தானாக மயங்கி நிற்கும். அந்நிலை முழுவதும் கழிதலே முத்தி அல்லது விடுதலை..
சிவசித்தர் மாய விஷயங்கள் அறுத்து முக்தி பெறுகின்றார்.


தத்துவங்கள் 36ல் ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவதத்துவம் 5.

ஆன்மதத்துவம் -
பஞ்ச பூதம் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்த கரணங்கள் 4. ஆக மொத்தம்: 24


1. பஞ்ச பூதம் 5 :: மண் , நீர் , தீ , காற்று , ஆகாயம்

2. தன்மாத்திரை -5 :: ச்ப்தம் , ஸ்பரிசம் , ரூபம் , ரசம் கந்தம்

3. கன்மேந்திரியம்- 5 :: வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்

4. ஞானேந்திரியம் -5 :: செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்

5. அந்தக்கரணம் -4 :: மனம், அகங்காரம், புத்தி, சித்தம்

6. வித்தியா தத்துவம் -7 :: புருடன், அராகம், வித்தை, கலை, நியதி, காலம், மாயை


இவற்றில்: காலம்: சென்றது, நடப்பது, வருவது
நியதி : அவரவர் வினையை அவரவர்களை நுபவிப்பது
கலை: ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்: ஆசையை எழுப்பும்
புருடன்: விஷயங்களில் மயங்கும்

7. சிவதத்துவம் -5 :: சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம்

No comments:

Post a Comment