Wednesday, 3 April 2013

செல்போன்


செல்போனுக்கு இன்று பிறந்தநாள்...வயது 40 !!


the cellphone is 40 years old today
ஆம் நண்பர்களே! இன்று நம்மால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும் செல்போனுக்கு பிறந்தநாள்! வயதும் 40ஐத் தொட்டது...
சரியாக ஏப்ரல் 3, 1973ல், மோட்டோரோலாவைச் சேர்ந்த பொறியாளரான மார்ட்டி கூப்பர் என்பவரால்தான் செல்போன் மூலமாக முதல் காலானது செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
40 வருடங்களுக்கும் முன் கூப்பர், ஜோயல் எங்கெல் என்ற பெல் லேப்ஸில் ஆராய்ச்சியாளராக இருந்தவருக்கு போன்செய்து இப்படிச் சொன்னாராம். "ஜோயல் நான் தான் மார்ட்டி. நான் இப்பொழுது செல்போன் வழியாகவே உன்னிடம் பேசுகிறேன். இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாகவும், நன்றாகவும் உள்ளது." என்றார்.
அதற்காக அவர் பயன்படுத்திய போன், மோட்டோரோலா டைனா TAC 8000x. இந்த போனின் எடை 2.5 பவுண்டுகளாம்!!
செல்போனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment