Wednesday, 24 April 2013

முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்க‌ளும், நார்ச்சத்தும் நிறைந்துள்ள‌தால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது. மேலும் அவை நெஞ்செரிச்ச‌லைக் குறைக்கவும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு. அதனால், உடல் எடையைக் குறைத்து அழகான உடலமைப்பு பெற விரும்புகிறவர்களுக்கு ஏற்ற பழமாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்தது. இதனால், இதயம் தொடர்பான நோய்களையும், புற்றுநோயையும் தடுக்க ஏற்றதாகவும் உள்ளது. இப்போது இந்த பழத்தில் வேறு என்ன நன்மைகள் எல்லாம் நிறைந்துள்ளது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதிகம் சாப்பிடுங்கள்.

புற்றுநோய் முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயைத் தடுக்கவும், நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்கவும் உதவுகிறது

இதய நோய் முலாம் பழத்தில் உள்ள அடினோசைன் இரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுக்கின்றது. இதனால், மாரடைப்பும், இதய நோய்களும் வராமல் காக்கின்றது

செரிமானம் முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தன்மை நிறைந்தது. அதனால், அஜீரனம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஜீரனத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமிலத்தன்மையை அகற்றுகிறது

அழகான சருமம் முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்னு புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகக்கிறது. மேலும், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணப்படுத்தவும், தோலின் உறுதித்தன்மையைக் காக்கவும் கொலாஜென் உதவுகிறது. இதனால், முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறண்டதாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது.

சிரங்கு மற்றும் சிறுநீரக நோய் முலாம் பழத்தில் சிறுநீர் பிரிப்புத் தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், கீல்வாதத்தையும் குணப்படுத்தும்.

எனர்ஜி முலாம் பழத்தில் வைட்டமின் பி உள்ளது. இது உடலின் சக்தி உற்பத்தியைத் தூண்டுகிறது.

எடை குறைய இந்த பழத்தில் குறைந்த சோடியம், கொழுப்பு இல்லாமை மற்றும் குறைந்த கலோரி உள்ளதால், அவை உடல் எடை குறைப்புக்கு ஏற்றவை. மேலும், அதிக நீர்ச்சத்து உள்ளதால், விரைவாக பசி எடுக்காது. ஏனெனில் இதில் உள்ள இயற்கை இனிப்புக்கள், வேறு தின்பண்டங்களின் பக்கம் போகும் ஈர்ப்பைக் கட்டுப்படுத்தும்

கண் ஆரோக்கியம் கண்களுக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். முலாம் பழத்தில் பீட்டா கரோட்டின் வடிவில் இந்த வைட்டமின் உள்ளது. உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி, தினமும் மூன்று கப் அல்லது அதற்கு அதிகமாகவோ பீட்டா கெராட்டின் நிறைந்த பழங்களைத் சாப்பிடுபவர்களுக்கு, தினமும் 1.5 கப் அல்லது அதற்கும் குறைவாகவோ சாப்பிடுபவர்களை விட‌, மாகுலர் சீரழிவு எனப்படும் நிலை ஏற்படுவது 36% குறைவு என்று கூறுகிறது. இந்த மாகுலர் சீரழிவு நிலை, பிற்காலத்தில் குருட்டுத்தன்மையை விளைவிக்கும்.

கண் ஆரோக்கியம் கண்களுக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். முலாம் பழத்தில் பீட்டா கரோட்டின் வடிவில் இந்த வைட்டமின் உள்ளது. உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி, தினமும் மூன்று கப் அல்லது அதற்கு அதிகமாகவோ பீட்டா கெராட்டின் நிறைந்த பழங்களைத் சாப்பிடுபவர்களுக்கு, தினமும் 1.5 கப் அல்லது அதற்கும் குறைவாகவோ சாப்பிடுபவர்களை விட‌, மாகுலர் சீரழிவு எனப்படும் நிலை ஏற்படுவது 36% குறைவு என்று கூறுகிறது. இந்த மாகுலர் சீரழிவு நிலை, பிற்காலத்தில் குருட்டுத்தன்மையை விளைவிக்கும்.

நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் குறைந்த சர்க்கரை, குறைந்த கலோரி உணவு உண்பதால், எப்பொழுதும் சோர்வை உணர்வார்கள். அவர்களுக்கு முலாம் பழ ஜூஸ் மிகவும் சிறந்தது. இதனால் தான், வல்லுநர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு முலாம் பழ ஜூஸை பரிந்துரைக்கிறார்கள்.

மூளைச்சோர்வு முலாம் பழ ஜூஸில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்பை இயல்பாக்கி, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச்சோர்வைக் குறைக்கும்.

No comments:

Post a Comment