Thursday, 2 May 2013

கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்து

நம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு. 

பெரிய எழுத்தாக எழுதுவோர்: 
பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். 

சிறிய எழுத்தாக எழுதுவோர்:
எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள்.

வலப்பக்கம் சாய்த்து எழுதுவோர்:
எதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள்.

இடப்பக்கம் சாய்த்து எழுதுவோர்:
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள்.

எழுத்துக்களை நீட்டி எழுதுவோர்:
எதிலும் பற்றற்று இருப்பார்கள்.

எழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்:
எந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.

கிறுக்கலாக எழுதுவோர்:
குழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர்.

கட்டமாக எழுதுவோர்:
ஆடம்பரப்பிரியர்கள். சோம்பேறிகள்.

வட்டமாக முடிப்பவர்கள்:
பயந்த சுபாவமுள்ள திறமைசாலிகள். 

No comments:

Post a Comment