Tuesday, 14 May 2013

ஜாதகம் :

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம்.  (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 -  கேந்திர வீடுகள் என்பர்.  ( விஷ்ணு ஸ்தானம் ) 

- 3, 6 , 8 , 12 - மறைவு  வீடுகள் என்று கூறுவர்.  அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர். 

===================

1 ஆம் வீடு  - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது மிக்க பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.    

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வீடு - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வீடுகள் -  நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா  நல்லது பண்ண முடியாது. 

=================================================

ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்....  மறைவு வீடுகளில் இருந்தால்...  பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.


====================================

ஒவ்வொரு லக்கினத்தையும் -  நெருப்பு, நிலம், காற்று ,  நீர் - ராசிகள் என்று கூறுவர். 

மேஷம், சிம்மம் , தனுசு  - நெருப்பு ராசிகள் 
ரிஷபம், கன்னி ,  மகரம்  - நிலம் ராசிகள் 
மிதுனம், துலாம் ,  கும்பம்  - காற்று ராசிகள் 
கடகம் ,  விருச்சிகம் ,  மீனம்  - நீர் ராசிகள்.

இதை ஈஸியா நீங்க ஞாபகம் வைக்கிறதுக்கு ஒரு ஐடியா இருக்கு,.

இங்கிலீஷ் லே - FIRE , LAND , AIR , WATER   ----------  முதல் எழுத்துகளை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க..   FLAW  ...... (எப்பூடி....? )

===========================

லக்கினங்களை -  சரம் , ஸ்திரம் , உபயம்  னு மூணு வகைப் படுத்தலாம்.

மேஷம் , கடகம் , துலாம், மகரம்    -   சர ராசிகள்   
ரிஷபம், சிம்மம் ,  விருச்சிகம் , கும்பம்  - ஸ்திர ராசிகள் 
மிதுனம் , கன்னி , தனுசு ,  மீனம்  - உபய ராசிகள் .

இதனோட , அமைப்பு என்ன ,  ஏதுங்கிறது - பின்னாலே நாம விரிவா , அலசி ஆராயப் போறோம்.. இப்போதைக்கு , இத தெரிஞ்சுக்கோங்க...

============================================

கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு.  அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர  இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....

சரி பார்க்கட்டும்... அதுக்கு என்ன?

உங்க வீட்டுக்கு எதிரிலே நல்ல ஒரு வாத்தியார் இருக்கிறார்.. .. எப்படி இருக்கும்..?  அதுவே ஒரு பேட்டை ரவுடி இருந்தா..?

சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும்.  பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு -  3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.

இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8  - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.

=====================================================

இதை எல்லாம் எதுக்காக இப்போ உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்னா,  நாம் அடுத்த பாடத்திலேயே , ஜாதகம் வைச்சு , ஆராயப் போறோம்.. நான் பாட்டுக்கு குரு  இங்கே பார்க்கிறாரு, சனி இங்கே பார்க்கிறாரு னு சொன்னா ... டக்கு னு புரியணும் இல்லியா..?

=======================================

சரி இப்போ ---  ஓரிரு வார்த்தைகளில், 12 வீடுகளைப் பத்தி பார்ப்போம்..
இது ஒன்னொன்னும் - ஒவ்வொரு கட்டுரை எழுதுற அளவுக்கு - விரிவா பார்க்க வேண்டிய விஷயம்... இப்போதைக்கு , ஷார்ட் அண்ட் ஸ்வீட் ...

லக்கினம் -  முதல் வீடு - ஜாதகரைப் பத்தி சொல்லும். ஆளு பார்க்கிறதுக்கு எப்படி ...தோற்றம்?  குண நலன்கள் ........ ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...

இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்வி

மூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,,,

நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் ..... 

ஐந்தாம் வீடு -  பூர்வ புண்ணியம், குழந்தைகள்,  குல தெய்வம், முற் பிறவி  

ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்

ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவி

எட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்

ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் ...

பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்


பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்

பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்..  அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்... 


இதெல்லாம் சில முக்கிய பலன்கள் பார்க்கிறதுக்கு ... இதை தவிர நிறைய விஷயங்கள் இருக்கு... அதை எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமா ...அப்புறம் பார்ப்போம்.. 
=========================

நவ கிரகங்களில் - ஒவ்வொரு வீட்டுக்கும் - ஒருவர் காரகம் பெறுகிறார்....
நாம் ஏற்கனவே கொடுத்துள்ள நவ கிரகங்களின் காரகத் துவங்களை, ஒரு தடவை திரும்ப பாருங்க...  

===========================


சரி, இப்போ உதாரணத்துக்கு  -  ஒரு ஜாதகர் அவரோட அம்மாவை பத்தி பார்க்கணும்... னு நினைக்கிறார்...

என்ன , என்ன விஷயம் பார்க்கணும்.... சொல்லுங்க பார்ப்போம்...


First   ---- 

ஜாதகர் -  லக்கினத்தில் இருந்து  -   4   ஆம் வீடு  .... என்ன னு பார்க்கணும்..
அந்த வீட்டு அதிபதி யார்? அவரு எங்கே இருக்கிறார்..?  நல்ல வீட்டிலே இருக்கிறாரா..? உச்சம் , ஆட்சி , நட்பு வீடு..? மறைவு வீடு இல்லாம இருக்கிறாரா?  சுப கிரகசேர்க்கை இல்லை பார்வை உண்டா..? 
  நீசம் இல்லாம , பகை இல்லாம?  அவர் கூட எதாவது பாவ கிரகம் இருக்கா...? ஏதாவது பாவ கிரகம் அவரை பார்க்குதா ?

4 ஆம் வீட்டிலே  ஏதாவது - சுப கிரகம் இருக்கா..?  பாவ கிரகம் இருக்கா..? 


4 ஆம் வீட்டின் அதிபதி - எந்த நட்சத்திர சாரம்  வாங்கி இருக்கிறார்..? அவர் நிலைமை யை யும்.. கவனிக்கணும்....


அது மட்டும் இல்லை...   சந்திரன் நிலைமை என்ன னு பார்க்கணும்.. எதுக்கு சந்திரன்...   ???

சந்திரன் தானே மாதுர் காரகன்,...?? மறந்துட்டீங்களா  ...?  மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்  , சந்திரனை வைச்சும் பார்க்கணும்... .. 

இப்போ கோச்சார ரீதியா... கோள்கள் எங்கே இருக்கு...  அதனோட பார்வைகள் எங்கே .. எல்லாம் பார்த்துக்கிடனும்..? 
==================

சரி , அம்மாவோட ஆயுள்.. பார்க்கணும்...  So ,  4 ஆம் வீட்டில் இருந்து - 8 ஆம் வீடு .. பார்க்கணும்..  கரெக்டா..?  அப்படினா..? லக்கினத்தில் இருந்து.. 11 ஆம் வீடு..  திரும்ப மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்.. பாருங்க.. 


ஜாதகம் :

பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , 9 கிரகங்களாகவும், அவை அமரும் வீடுகளையும் தீர்மானிக்கிறது. 


மொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் :  சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன், குரு, சுக்கிரன் , சனி, ராகு , கேது


எந்த ஒரு ஜாதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இவை 12 வீடுகள் என்பர். 12 ராசிகள்என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலிருந்து இடதுகைப் பக்கத்திலிருந்து - இரண்டாம் கட்டத்தை பாருங்கள். அதை முதல் வீடு என்று கொள்ளுங்கள். இப்போது கடிகாரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று  குறியுங்கள். மொத்தம் 12 வீடுகள் வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் 30 டிகிரி . மொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும். 


மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பாதங்கள் உள்ளன.  ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் - 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.  

முதல் வீடான - மேஷத்தில் - அஸ்வினி ( 4 பாதங்கள் ) , பரணி ( 4 பாதங்கள் ), கார்த்திகை (1 பாதம் மட்டும் ) , ஆக மொத்தம் - 9 பாதங்கள் இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் ,  மீதி 3 பாதங்கள்  - ரிஷபத்தில் இருக்கும். ரோஹிணி ( 4 பாதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பாதங்கள் மட்டும் வரும்.
மிருக சீரிஷத்தில் வரும் மீதி 2 பாதங்கள் - அடுத்த ராசியான மிதுனத்தில் வரும். இதைப் போல - மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களையும் - வகைப் படுத்த வேண்டும்.. 




ராசிகள்       நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் 
                              பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 
                             3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் 
                             முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் 
                              முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் 
                            பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் 
                            முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

நட்சத்திர அதிபதிகள் : 


மேலே கூறிய படி , 27 நட்சத்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கள்.
ஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு நவகிரகம் அதிபதியாக இருப்பார்.


ராசி அதிபதிகள் : 

ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.

இதைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

இப்போ நீங்க செய்ய வேண்டியது என்ன னு கேட்டால்...  மேலே சொன்ன படி , ஒன்பது கிரகம், 12 ராசி ,  27 நட்சத்திரம், எந்த நட்சத்திரத்துக்கு எந்த ராசி ? - இதை எல்லாம் , நல்லா மனசிலே உள்ள பதியுங்க.. அப்போ தான் , நமக்கு பின்னாலே வர்ற பாடங்கள் நல்லா புரியும் ..

நல்ல நினைவாற்றல் , எந்த ஒரு சோதிடருக்கும் முக்கியம். அதுக்காக பார்க்கிற ஜாதகம் எல்லாம் மனசிலே பதிய வைக்காதீங்க ... உங்க ஜாதகம் தவிர வேற எந்த ஜாதகமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கக் கூடாது.. 

சரியா..?  ??
-------------------------------------------------------------------------------------------------------------
JOTHIDAM 2
எல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம்  , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான்  அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி. 

இன்னைக்கு நடைமுறைலே யாருக்கும்  அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.


எந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம். 

ராசி அதிபதிகள் :


கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள். 




மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி  - சந்திரன் 
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி

ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .

சரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும்.  இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர். 

சாதரணமா  ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா,  ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும். 

அதைப் போல ,  சில வீடுகள்  - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து  பரிதாபமாக இருக்கும். 

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம்  என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..
அவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.





இதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். 



சூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.
இதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.

நல்லா புரியுதுங்களா? இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

மேலே உள்ள அட்டவணையைப்  பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.
யாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க.  
இது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.





சரி, இப்போ ஒரு - செயல்முறைப் பயிற்சி : ( Practical) 

இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஜாதகம், நமது தற்போதைய முதல்வர் , கலைஞர் அவர்களுடையது :  இதிலே எந்த , எந்த கிரகம் என்ன நிலைலே இருக்குதுன்னு பாருங்க  : 





எப்படி பார்க்கணும் ? 


முதல்லே எடுத்ததும் - நீங்க பார்க்க வேண்டியது , லக்கினம்......


இவருக்கு - என்ன லக்கினம் ?  -   கடகம் ...   (குட்... நீங்களும் கண்டு பிடிச்சு இருப்பீங்க.. இல்லையா? )


இவருக்கு என்ன ராசி ? - சந்திரன் எங்கே இருக்கிறார் ? - ரிஷபத்திலே. So , இவருக்கு  ரிஷப ராசி.



சரி, இப்போ மத்த கிரகங்களைப் பார்க்கலாம்...

சூரியன் - ரிஷபத்திலே . ரிஷபம் அவருக்கு - பகை வீடு. 
சந்திரன் - ரிஷபம் , உச்ச வீடு.  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
செவ்வாய் - மகரம் - உச்ச வீடு  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
புதன் - மிதுனம் - ஆட்சி வீடு ( மூன்று மடங்கு - பலம். )
 குரு - விருச்சிகம் - நட்பு வீடு.
சுக்கிரன் - மிதுனம் - நட்பு வீடு
சனி - துலாம் - உச்ச வீடு  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
ராகு / கேது - பகை வீடு.

மொத்தமா மூணு - உச்ச கிரகங்கள் , ஒரு - ஆட்சி கிரகம் , ரெண்டு கிரகம் - நட்பு ஸ்தானம், ....

மீதி - மூணு கிரகம் - சரி இல்லைன்னு வச்சுக்கலாம். (இப்போதைக்கு நமக்கு தெரிந்த விதிகள் படி.... )

யார் ஒருத்தருக்கு , நீசம் இல்லாம, ஒரு ஒரு கிரகம் ஆட்சியோ, உச்சமோ இருந்தாலே அவங்களுக்கு.. வாழ்க்கை நல்லா இருக்கும். .. மூணு கிரகம் னா அவரு , கிட்டத் தட்ட ராஜா தான்.. இவருக்கு எப்படி னு பாருங்க..  கொடுத்து வைச்ச மனுஷன்..
மத்த அம்சங்களைப் பத்தி , பின்னாலே விரிவா அலசுவோம்.. 

சாமி எல்லாம் இல்லை.  ஜாதகம்லாம்  பொய்யி னு அவர் சொன்னா.. போச்சா?  அவருக்கே ரகசியமா எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறாங்களோ..? 

இன்னொரு விஷயம் நல்ல நோட் பண்ணிக்கோங்க. ....  ராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

சரி, இப்போதைக்கு இந்த ரெண்டு படங்களை தெளிவா , படிச்சு புரிஞ்சுக்கோங்க...
மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்...   OK வா?

யாருக்காவது இந்த பாடங்களிலே சந்தேகம் னா... பின்னூட்டத்திலேயே ( கமெண்ட்ஸ்) கேளுங்க... இதைத் தவிர சந்தேகம் னா... மெயில் லெ கேளுங்க...

------------------------   ( ஓகே.......  ஜூட்  )
-------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..  இன்னைக்கு நம்ம அடுத்த பாடத்தை பார்ப்போம். 

இது வரைக்கும், நாம - 12 ராசிகளையும், அது எந்த கிரகத்தோட வீடு, எந்த கிரகம் எந்த வீட்டுலே -  உச்ச , நீசம், பகை , நட்பு - எல்லாம் பார்த்தோம்.

இன்னைக்கு நாம பார்க்கப் போறது - நட்சத்திரங்களை., நட்சத்திர அதிபதிகளை.

நம்மோட முதல் பாடத்திலே , 27 நட்சத்திரங்களை - பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா? 
அதை கீழே கொடுத்த படி, 9 வரிசைலே எழுதி இருந்தோம்..



இதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.

கேது              - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன்       - பரணி, பூரம், பூராடம்,
சூரியன்         - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன்        - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய்    - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு                - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு                 - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி                 - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன்               - ஆயில்யம் , கேட்டை, ரேவதி

இது எதுக்காக இந்த வரிசைனு  கேளுங்க ..? 

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி  வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்.. 

நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் -  நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.

ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.

கேது          - 7 வருடங்கள்
சுக்கிரன்   - 20 வருடங்கள்  
சூரியன்     - 6 வருடங்கள்
சந்திரன்    - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு            - 18 வருடங்கள்
குரு             - 16 வருடங்கள்
சனி             - 19 வருடங்கள்
புதன்           - 17 வருடங்கள்


ஒரு சுற்று முடிய  - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே  சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க... 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = =  திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
 So ,  ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க..  ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம். 

அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.

இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..

சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும். 

புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
 புக்தி
( B x C / A ) =  வருடங்கள்

மொத்த தசை இருப்பு : (A )  - 120 வருடங்கள் 
தசா கிரகத்தோட  மொத்த வருடங்கள் : (B) 
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )







சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.?  ( சிறிய டெஸ்ட் ..) 

சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம்.  B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ;  C = 7 


( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
 நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க.  =  399 வருதா. 13 மாதம் ,  9 நாள் வரும்.

(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா ,  1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள்  னு எடுத்துக்கோங்க.. ) 

பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு  தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....

சரி, இன்னும் கொஞ்ச நாளைக்கு - நோ பார்முலா... ஒன்லி தியரி , ப்ராக்டிக்கல் மட்டும்  தான்.  OK வா...?

மேலே சொன்ன பாடத்தை நல்ல படிச்சு, மனசிலே பதிய வைச்சுக்கோங்க... மீதி , அடுத்த பாடத்திலே பார்க்கலாம்.

=====================

வழக்கமான விதி தான். இந்த பாடத்திலே சந்தேகம் னா., பின்னூட்டத்திலே கேளுங்க. வேற சந்தேகம் னா... மெயில் லெ ப்ளீஸ்... நம்ம ஜோதிட பாடத்தை , ரெகுலரா எத்தனை பேர் , கவனிச்சு வர்றீங்கனே தெரியலை... அடிப்படை லெ இருந்து தெளிவானாதான், பின்னாலே வர்ற பாடங்கள் ஈசியா இருக்கும். ( Followers லிஸ்ட் லெ , subscribers லிஸ்ட் லெ இருக்கிறவங்க மட்டுமே ஜோதிட சம்பந்த பட்ட கேள்விகளை கேட்க முடியும்.. கூடிய விரைவில் இந்த பாலிசி வரப்போகுது...  ) 
-------------------------------------------------------------------------------------------------

நமது ஜோதிட பாடங்களை படித்துக் கொண்டு வரும் அன்பர் ஒருவர், தசா /  புக்தி பாடத்தை படித்துவிட்டு  - புத்தி யைப் பற்றி சற்று விரிவாக , விளக்கம் தர முடியுமா என்று கேட்டு இருந்தார். கண்டிப்பாக விளக்கமாக நாம் கூற இருக்கிறோம் என்பதை வாசகர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துகிறோம்.

ஆனால், இப்போது இல்லை - இன்னும் சில பாடங்களுக்குப் பிறகு. ஏன் என்று கூறுகிறேன்.. நமது பாடங்களைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் , ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள். ஆனால், இப்போதுதான் அவர்களுக்கு அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறோம்.. இதையே இன்னும் சற்று விளக்கமாக கூற, அவர்கள் சுவாரஸ்யம் சற்றுக் குறையக் கூடும். சில அடிப்படை பாடங்களை விவரித்துவிட்டு , அவர்களை ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் நிலைக்கு வர வைத்து விட்டு, பின்பு ஜோதிட விதிகளை அலசி ஆராயலாம்.

இப்போது - இதை  மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 9 கிரகங்களுக்கு - 9 தசா. ஒவ்வொரு தசா விலும் - 9 புத்திகளும் வரும்.
 தசா நல்லா தசையாய் இருந்தாலும் , புக்தி அவருக்குப் பகையாய் இருந்தால் பலன்கள் , அந்த கால கட்டத்தில் நல்லதாய் இராது.   நல்ல சாலையில்  பயணம் போகிறோம்.. வழியில் குண்டும் , குழியுமாய் சில நேரம் படுத்தி எடுக்கும் அல்லவா? அதைப் போல. 
இதைப் பற்றி சிறிது விளக்கமாக பின்னால் , பார்த்துக் கொள்ளலாம்... சரியா?

இன்றைய பாடத்தைப் பார்ப்போம்....
=====================================

நவகிரகங்களில் - சுப கிரகங்கள் , பாவ கிரகங்கள் என்று இரண்டு வகை உள்ளனர்.

குரு, சுக்கிரன், புதன் , சந்திரன் -  சுப கிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது - அசுப கிரகங்கள்.

சந்திரனைப் பொறுத்தவரை  - வளர் பிறை சந்திரன் மட்டுமே , முழு சுபர் ஆவார். தேய் பிறையில் இருந்தால் , அவர் அவ்வளவு நல்ல பலன்களை தருவது இல்லை.

சரி, இப்போது இன்னொரு விஷயமும் தெரிந்து கொள்ளுங்கள். மேல சொன்னது பொதுவான விதி. செவ்வாய் , சனி எல்லாம் பாவ கிரகங்கள் தான். அதுவே உங்களுக்கு அவர்கள் இலக்கின அதிபதிகளாய் இருந்தால் , என்ன செய்வது..? உயிர்  கொடுப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நல்லது தான். ஆனால் இந்த தீய கிரகங்களின் பார்வை படும் இடங்கள், நல்ல பலன்களை தராது.. 
==========================================
வளர் பிறை சந்திரன் , தேய் பிறை சந்திரன் என்று - ஒருவர் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.. எப்படி?

மொத்தம் இருப்பது - 12 ராசிகள். நம் தமிழ் மாதங்களும் - 12 . எதாவது லிங்க் இருப்பது போல தெரிகிறதா?  எஸ்.. யு ஆர் ரைட் .
சித்திரை மாதம் பொறந்தாலே - சூரியன் , மேஷம் ராசிக்குள்ளே வர்றார் னு அர்த்தம். வைகாசி லெ - ரிஷபம். ஆனி யில்  - மிதுனம் ... இப்படியே ... பங்குனி - மாதத்தில் , மீனம் ராசியில் சூரியன் இருப்பார்.

ஜாதகத்தில், சூரியன் இருக்கிற ராசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தால் வளர்பிறை. ... எட்டில் இருந்து - 12 வரை - தேய் பிறை.. இப்போ இன்னொரு விஷயம் பிடிபடணுமே...!!  அதே தான்...  சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதாவது சூரியனும், சந்திரனும் - சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் , அவர் அமாவாசையிலோ  , அமாவாசையை ஒட்டியோ பிறந்து இருப்பார்.  அதே போல - சூரியனுக்கு நேர் எதிரில் - ஏழாம் வீட்டில்  இருந்தால் - பௌர்ணமியை ஒட்டி பிறந்து இருப்பார்.

சித்திரை மாசம் - சூரியன் மேஷத்திலே ; அதுக்கு ஏழாம் வீடு என்ன..? துலாம் - அங்கே சந்திரன் சித்திரை நட்சத்திரத் தில் இருக்கும்போது , பௌர்ணமி யா இருக்கும்.

நம்ம மனசிலே பதிஞ்ச சில நாட்களைப் பாருங்க : 
வைகாசி - விசாகம் ;  ஆவணி - அவிட்டம் ; திருக் கார்த்திகை ; மார்கழி - திருவாதிரை ; தைப் பூசம்   ; மாசி -மகம் ..... இது எல்லாமே பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்றை யொன்று நேர் எதிர் நோக்கி தழுவிக் கொண்டு இருப்பார்கள். 


ஒவ்வொரு கிரகமும் - ஒவ்வொரு வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கும் - ? எப்படி கணக்கு பார்க்கிறது..?  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க..

சூரியன் - ஒரு மாதம்  - ஒரு ராசி னு பார்த்தோம்.. மொத்தம் 12 வீட்டுக்கும் , ஒரு வருடம் ஆகுது. கீழே பூமி னு போட்டு இருக்கோம் பாருங்க...
அதை பன்னி ரெண்டாலே    வகுத்தால் - ஒரு வீட்டுக்கு வரும்..
சந்திரன் - ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரம் - so , இரெண்டே கால் நாளிலிருந்து - மூன்று நாள்கள் - ஒரு ராசிக்கு.
புதன் -( 88 / 12 )  - சுமார் 7 நாள்கள் / ஒரு ராசிக்கு 
செவ்வாய் - (687 /12 ) - சுமார் 57 நாட்கள் 
குரு - ஒரு ராசிக்கு  சுமார் - ஒரு வருடம்
சுக்கிரன் - சுமார் - 20 நாட்கள்
சனி - ராசிக்கு - சுமார் இரண்டரை வருடங்கள்
ராகு - கேது - சுமார் - ஒன்றரை வருடங்கள்.. 






இப்போ , பஞ்சாங்கப்படி - குரு - மீன ராசி இலே இருக்கிறார். இல்லையா? பன்னிரண்டு வருஷம் முன்னாலே - இதே மாதிரி - மீனம் ராசிலே இருந்து இருப்பார். (1999 , 1987 , 1975 இப்படி ) .. நீங்க பிறந்த வருஷம் உதாரணத்துக்கு - 1976 னு வைச்சுக்கோங்க.. அனேகமா அவர், மேஷம் ராசிலே இருக்கணும். இல்லை , மீனம் இலே இருந்து கெளம்ப ரெடி யா இருக்கணும். அதை விட்டுட்டு, கடகம், சிம்மம், துலாம் னு அவங்க சவுகர்யத்துக்கு போட்டு இருந்தா ... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

இதே மாதிரி - சனி - ஒரு சுற்று முடிக்க 30 வருஷம் ஆகும். ராகு, கேது - 18 வருஷம் ஆகும். இப்போ அவங்க இருக்கிற ராசி பார்த்துக் கிட்டு , அதை யொட்டி அவங்க ஜாதகத்திலே இருக்கானு ஒரு தடவை , சரி பார்த்துக்கிட்டு -  பலன் சொல்லணும்.

இல்லைனா, நம்ம மனோபாலா சார் சொல்ற மாதிரி பொழப்பு - சிரிப்பாப் போயிடும்.. 

=======
சரி , இன்னொரு விஷயம் - ஜாதகம் பார்க்கிறப்போ , சில கிரகங்களுக்கு (வ)  அப்படின்னு போட்டு இருப்பாங்க.   அப்படினா வக்கிரம் னு அர்த்தம். அதாவது முன்னாலேயே போக வேண்டிய கிரகம் , கொஞ்சம் பின்னாலே சுத்த ஆரம்பிக்குதுன்னு பொருள். அந்த நேரத்திலே , அந்த கிரகங்களுக்கு - பலம் கம்மியா இருக்கும்.  பலன் அளிக்கும் 
 சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் வரும்போது - கிரகங்கள் (பொதுவா) வக்கிரம் அடையும்.  ராகு, கேது, சந்திரன் தவிர எல்லா கிரகங்களும் - வக்கிரம் அடையும்.

அதி சாரம் னு ஒன்னு இருக்கு. வக்கிரத்துக்கு நேர் எதிர். அதாவது ஒரு இடத்திலே நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்டெப்  தாண்டி முன்னாலே  போகிறது. போன தடவை , கும்பத்திலே நிற்க வேண்டிய குரு - மீனத்துக்கு அதி சாரம் ஆனார். திரும்ப கும்பத்துக்கு  - சிறிது நாட்கள் வக்கிரமானார். ... அப்போ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பார்.

சரி, மேலே சொன்ன பாடங்கள் புரியுதா உங்களுக்கு .....? 

இன்னைக்கு - மேலும் ரெண்டு பாடங்கள் எழுத முடியும் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்...

இதுக்கு மேல நாம் பார்க்க விருப்பது -  கிரகங்களின் காரகத்துவம், கிரகங்களின் பார்வைகள் , .... அப்புறம்.... 12 வீடுகளின் அமைப்புகள்..

இந்த ரெண்டும் தெரிஞ்சுகிட்டா, உங்களுக்கு எந்த கேள்விக்கு என்ன என்ன பார்க்கணும் ? அப்படி னு தெரிய வரும்...
தினசரி யிலோ, இல்லை நாட்காட்டிகளிலோ, கிரகம் எங்கே எங்கே இருக்கு னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஒரு பாவ கிரகம்,  வில்லங்கமா உட்கார்ந்து இருக்குதுனா, அப்போ நீங்க ஜாக்கிரதையா, அடக்கி வாசிக்கணும்னு அர்த்தம்.. 

சரி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்...  இந்த பாடம் பற்றி .. பின்னூட்டங்களில் எழுதுங்கள்... 
-------------------------------------------------------------------------------------------

    ஜோதிடம் பார்க்கிற எல்லோரும், பஞ்சாங்கம் னு ஒன்னு வச்சு இருப்பாங்க.. இல்லையா?
பஞ்சாங்கம் னா என்ன? பஞ்சாங்கம்னா ஐந்து  அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1.வாரம் / நாள்  2   திதி     3. நட்சத்திரம்        4. யோகம்            5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி

விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்  விரும்புவது தசமித் திதி

3. திருமணம்,  இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி  மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச்  செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.


---------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ  அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.
மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?

 ==========================================================
கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும். 
கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

===========================================================
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம். 




நல்ல நாளா , இல்லையா? னு ஜோசியரைப் பார்த்து நாள் குறிக்கிறப்போ, இதை எல்லாம் பார்த்துத் தாங்க சொல்லணும்.


யார் வர்றாங்களோ, அவருக்கு லக்கினத்தில் இருந்து 9 ஆம் வீட்டுக்கு அதிபதி யாரோ, அவருக்கு உரிய கிழமை தேர்ந்து எடுத்து , நல்ல நேரம் பார்த்து சொன்னா, சிறப்பா இருக்கும்.

சில நாட்களை காலண்டரில் பார்த்தாலே போட்டு இருப்பார்கள்  - சித்த யோகம், மரண யோகம், அமிர்த யோகம் என்று...

===========================================
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

ஞாயிறு:  அவிட்டம், கார்த்திகை
திங்கள்  :  அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: 
கார்த்திகை, திருவாதிரை, உத்திரம், சதயம், அனுஷம்
வெள்ளிக்கிழமை: ரோகிணி , 
ஆயில்யம், மகம்,திருவோணம்,
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று  ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.
பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். (நம்ம ஏங்க சார் கடன் கொடுக்கிற நிலைமை லெ இருக்கோம் னு கேக்கிறீங்களா ? ஒன்னு பண்ணலாம்.. ... நீங்க வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.. .)

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர , கழட்டி விட வேண்டும்  என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

இதற்கு எதிரிடையாக , சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

ஞாயிறு: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கள் : சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்: உத்திரம், மூலம்
புதன் : உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழன்  : சுவாதி, மூலம்
வெள்ளி : அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனி: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி


அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......
  

மேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது  , இல்லேன்னா கூட பரவா இல்லை.

சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.

மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

================================
சரி, இந்த பாடத்திலே  இவ்வளவு போதும்... ... மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்.
===============================

நமது வாசகர் எடப்பாடி சிவம் - போன பதிவிலே இருந்து , ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.. கிரகங்கள் வக்கிரம் அடைவது பற்றி..

ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு,  அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. பலனே தராது  என்று அர்த்தம் அல்ல.
ஒருவருக்கு சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வக்கிரம் ஆகி இருந்தால்...அவருக்கு கிடைக்க வேண்டிய முழு பலனும் தராது  ... நீசம் ஆகி , வக்கிரமும் இருந்தால் சற்று கடுமையாகவே இருக்கும்.

4 கிரகங்கள் வக்கிரமடைந்திருந்தால், ஜாதகன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பான். பின்லேடனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் வக்கிரம் அடைந்துள்ளதாக யாரோ சொல்லி இருந்தார்கள்.
கிரகங்களின் காரகத்துவம் பார்க்கும் போது, சற்று விரிவாக இதைப் பற்றி காண்போம்

--------------------------------------------------------------------------------------------

வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று , நமது இணையத்தில் வெளியான - பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட கட்டுரையை படித்து , நமது வாசகர்களில் நிறைய பேர், கண்டனக் குரலே எழுப்பி இருந்தார்கள். பெரும்பாலானோரின் எண்ணம், இது போன்ற சினிமா , அரசியல் போன்ற சாக்கடைக்கு ஒப்பான சமாச்சாரங்களைப் பற்றிய கட்டுரைகளை , நமது இணைய தளத்தில் தவிர்க்கலாமே யென்று .  

நமது தளத்தில் நிச்சயமாக சர்வ சாதாரணமாக  இருக்கும் எந்த ஒரு விஷயங்களும் , பிரசுரிக்கப் பட மாட்டது. குடும்பம் , கணவன் - மனைவி , என்கிற ஒரு அமைப்பே சமீப காலத்தில் கேலிப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. மது ,  மாது என்கிற விசயங்கள் - சமூகத்தில் மெல்ல மெல்ல அங்கீகாரம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இது , சமூக நலன் எண்ணமுள்ள எல்லோராலும், நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

பஞ்ச பூதங்களை சாட்சியாகக் கொண்டு , கரம் பிடிக்கும் வாழ்க்கைத் துணை - குழந்தைகள் பெற்று, ஒரு 10 வருடம் மனம் ஒருமித்து வாழ்ந்து.. பிறகு  திடீரென இன்னொரு தகாத தொடர்பு ஏற்பட்டு , மன முறிவு ஏற்பட்டு , அந்த குடும்பமே சீரழியும் நிலை இப்போது , சர்வ சாதாரணமாக அடித்தட்டு மக்களிடமும் , கிராமங்களிலும் கூட 
ஏற்படுகிறது..(பிரபு தேவா - நயன் தாரா விஷயமும் கிட்டத்தட்ட இதே கதி தான்.)
கேட்டால், மனது ஒத்துப் போகவில்லை யென்று சொல்கிறார்கள்.  
எத்தனை பேர்தான் "சதி லீலாவதி - கல்பனா" போல் இருக்க முடியும்?  திட்டமிட்டே சில பேர் இது போன்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.

நேற்று வரை , மனைவி , குழந்தைகள் என்று நிம்மதியாக இருந்த ஒருவரது வாழ்க்கை, இப்போது  பல குடும்பங்களின், அருவருப்புக்கு ஆளாகி உள்ளது.  வசதி இருப்பவர்கள் ஓரளவுக்கு தப்பித்து விடுகிறார்கள்..இல்லாதவர்களுக்கு.. பட்டினி, திருட்டு, தற்கொலை, விபச்சாரம்  ..  கொஞ்சம் , கொஞ்சமாய் மனிதம் செத்துப் போகும்..


நமது இணையத்தின் தீவிர வாசகர்களில் , திரையுலகை  சேர்ந்த சில பிரபலங்களும், குடும்பங்களும் உண்டு..  எத்தனையோ மனைவி மார்கள், ஒரு சில பெண்களால் எங்கே கணவர் தம்மை ஒதுக்கி விடுவாரோ என்கிற பயமும்.. கேட்டாலே பிரச்னை வந்துவிடுமோ என்று மருகுவதுமாக உள்ளனர்.  சில கணவன் மார்களுக்கும் இதே நிலைமை தான். .. பொறி வைத்து குடும்ப பெண்களாகவே பார்த்து பழகும் சில பேர்களால்... 

குடும்பம் சிதறாமல் பாது காப்பாய் இருக்க வேண்டிய பொறுப்பு - கணவன் , மனைவி இருவருக்குமே உண்டு..


ஆன்மீக தேடல் இருப்பவர்கள் ஒவ்வொருவரும், பிரம்மசாரிகளாய் இருந்தால் பரவா இல்லை. குடும்பம் என்று வந்து விட்டால் , குடும்ப கடமைகளே முடித்து விட்டே , இறை தேடல் இருக்க வேண்டும்.. மனைவியையும், குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு.. ஞான தேடலில் ஈடுபடுங்கள்.. வருங்கால சந்ததி வளமுள்ளதாகட்டும்.. 


ஆசிரியர் என்கிற முறையில், இனிமேல் இதைப் போன்ற கழிசடை சமாச்சாரங்கள் நிச்சயம் வராது என்கிற உறுதி மொழி அளிக்கிறேன். நமக்கு பிரதானம் ஆன்மிகம் மட்டுமே. ஆனால், சமூக பிரக்ஞை , அக்கறை கொண்ட கட்டுரைகள் ஒன்றிரண்டு வந்தால், அது நிச்சயம் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே..  உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்..  என்றும் உங்கள் ஆதரவை நோக்கி....
ரிஷி (ஆசிரியர்)
==================================
சரி, இன்றைய ஜோதிட பாடம் பார்க்கலாம்..  இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது .. விருட்சங்களை பற்றி.. நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு  விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , ..... இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும்.  மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை  அறிவதே வாழ்க்கை.  நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க , நாம் நம்மை அறியாமலேயே நிறைய ஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அது பல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்கு உணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதக பலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள் Ph D செய்து தான் ஆக வேண்டும்..   .. 


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..  உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில்  , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு 
4 ம் பாதம் - நிரிவேங்கை 

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா


உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை 

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா 
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா 

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். 

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 

எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்

-------------------------------------------------------------------------------

ஒருவர் ஜாதகத்தை ஆராயும்போது , எந்த பலன்களுக்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.  இந்த காராகத்துவங்களை , நீங்கள் கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்...



1 . சூரியன் :

உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.

ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது. 

ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.

ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!

கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!

2. சந்திரன்

'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! 

ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. 

தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர். 

விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். 

மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. 

முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்!


3. செவ்வாய்
அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன்.

சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். 

கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. 

வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். 

4. புதன்

வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே.

வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம்.

விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம்.

5. குரு

பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். 

குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை  விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம்.
ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.  

வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

6. சுக்கிரன்

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.

கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்.

7. சனி

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 

சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 

எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.

இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 

மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்.


8. ராகு

சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். 

அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.

தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். 

9. கேது

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.

விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.

சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம். 

இனி வரும் பாடங்களில், நாம் 12 வீடுகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்... அந்த பாடங்கள் - சற்று விரிவாக பார்க்க வேண்டியவை. கிரகங்களின் காரகம் பார்த்தது போல, முதலில் சுருக்கமாக பார்த்து விட்டு  - கொஞ்சம் , கொஞ்சமாக விரிவாக பார்க்கலாம்..


இதுவரை , ஜோதிட பாடங்களை படிக்கும் நண்பர்கள், நமது subscribers லிஸ்டிலோ ,   அல்லது , followers லிஸ்டிலோ - உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...  பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளவும். ஜோதிட பாடம் மட்டும் , ரெகுலராக படிக்கும் அன்பர்கள் - முடிந்தால் , சிரமம் பாராது editor @livingextra .com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். ரீடர்ஸ் எண்ணிக்கையை தோராயமாக அறிந்து கொள்ள மட்டுமே. மின்னஞ்சல் முகவரிகளின் ரகசியம் பாதுகாக்கப்படும். 



ஜோதிட பாடம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களில் பதிவு செய்யுங்கள் ;  அது எங்களுக்கு பெரிய ஊக்கியாக இருக்கும். 

7 comments:

  1. நட்சத்திர சாரம் எப்படி பார்ப்பது ?

    ReplyDelete
  2. எனக்கு சுக்கிர தசை -சுக்கிர புத்தி நடக்கிறது

    வேலை இல்லை,பண விரையம் ,திருமண வாழ்வில் மனைவியுடன் சண்டை

    விருச்சிகம் ராசி ,கன்னி லக்கினம் ,அனுஷம்-1 பாதம்

    என்னுடைய நிலைமை எப்போது மாறும்

    ReplyDelete
  3. Thu. 18, Jan. 2024 at 10.45 pm.

    *ஜாதகம் :*

    *விருட்சப் பொருத்தம் :*

    *விருட்சப் பொருத்தம் அல்லது மரப் பொருத்தம் :*

    விருட்சத்தை மரப் பொருத்தம் என்று கூறுவார்கள். காரணம், மரத்தை இருவகையாகப் பிரித்துள்ளனர். அவை : *பாலுள்ள மரங்கள் , வயிரம் பாய்ந்த மரங்கள்.*

    பாலுள்ள மரங்கள் எவை எவை ? வயிரம் பாய்ந்த மரங்கள் எவை எவை என பார்க்கலாம்...!

    * ஒவ்வொரு ஜெனன நட்சத்திரத்திற்கும், ஒவ்வொரு வகையான மரப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    1. அசுவனி : பாலுள்ள மரம்
    வயிரம் பாய்ந்த மரம் : எட்டி

    2. பரணி : பாலுள்ள மரம்
    வயிரம் பாய்ந்த மரம் : நெல்லி

    3. கிருத்திகை : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : நெல்லி

    4. ரோகிணி : நாவல்
    வயிரம் பாய்ந்த மரம் : நெல்லி

    5. மிருக சீரிஷம் : நாவல்
    வயிரம் பாய்ந்த மரம் : கருங்காலி

    6. திருவாதிரை : நாவல்
    வயிரம் பாய்ந்த மரம் : செங்கா

    7. புனர் பூசம் : நாவல்
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    8. பூசம் : அரசு
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    9. ஆயில்யம் : புன்னை
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    10. மகம் : ஆல்
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    11. பூரம் : பலா
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    12. உத்திரம் : அலரி
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    13. அஸ்தம் : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : மூங்கில்

    14. சித்திரை : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : வில்வம்

    15. சுவாதி : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : மருதம்

    16. விசாகம் : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : விளா

    17. அனுஷம் : அத்தி
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    18. கேட்டை : பராய்
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    19. மூலம் : மரா
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    20. பூராடம் : வஞ்சி
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    21. உத்திராடம் : பலா
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    22. திருவோணம் : எருக்கு
    வயிரம் பாய்ந்த மரம் : மகிழ்

    23. அவிட்டம் : எருக்கு
    வயிரம் பாய்ந்த மரம் : வன்னி

    24. சதையம் : எருக்கு
    வயிரம் பாய்ந்த மரம் : கடம்பு

    25. பூரட்டாதி : தேமா
    வயிரம் பாய்ந்த மரம் : கடம்பு

    26. உத்திரட்டாதி : தேமா
    வயிரம் பாய்ந்த மரம் : வேம்பு

    27. ரேவதி : இலுப்பை
    வயிரம் பாய்ந்த மரம் : வேம்பு.

    * இவற்றில்.... ஆண் − பெண் இருவரும் பால் மரமாணில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    * ஆண் வயிரமாகவும், பெண் பால் மரமாகவும் இருந்தால் புத்திரருண்டாகும்.

    * ஆண் பால் மரமாகவும், பெண் வயிரமாகவும் இருந்தால் மலடாவார்.

    * ஆண் − பெண் இருவரும் வயிரமாகில், புத்திர சேதமும், மனக் கவலைகளும் பெருகும்... என்று அறிக.
    *மீண்டும் சந்திக்கலாம்..!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  4. Tue. 23, Jan. 2024 at 11.13 am.

    *ஜாதகம் :*

    *இந்திய ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகளும் + தேவதைகளும் :*

    *இந்திய ஆண்டின் பெயர் + வருடம் + தேவதை :*

    1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஶ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11 ஈஸ்வர 12. பகுதான்ய
    13. பிரமாதி 14. விக்ரம 15. விஷீ 16. சித்ரபானு 17. சுபானு 18. தாரண 19. பார்த்திவ 20. வியய 21. ஸர்தஜித் 22. ஸர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விஸ்வாவச 40. பராபவ 41. பிலவங்க 42 கீலக 43. செளம்ய 44. சாதாரண 45. விரோதிகிருது 46. பரீதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ரா௯ஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தார்த்தி 54. ரெளத்ரி 55. துர்மதி 56. துந்துபி 57. ருதிரோத்காரி 58. ரக்தா௯ஷீ 59. குரோதன 60. (அ)௯ஷய.

    *ஆண்டுகள் −60 :*
    *1867 − 1926 வரை 60 ஆண்டுகள்*

    *அதாவது, 1. பிரபவ ஆண்டு 1867 இவ்வாண்டு முதல் 60−வது (அ)௯ஷய ஆண்டான 1926வரை 60−ஆண்டுகள்.*

    *60− ஆண்டுக்கு இணையான ஆங்கில வருடம் :*

    1. 1867 = 1927+1987 = பிரம்மா
    2. 68 = 1928+1988 = விஷ்ணு
    3. 69 = 1929+ 1989 = மகேசன்

    இவ்வாறு வரிசையாக ஆண்டுகளையும், தேவதைகளையும் அறிந்து கொள்ளுங்கள். தேவதைகள் கீழே அளித்துள்ளேன்.

    அவரவர் பிறந்த வருடத்திற்கு தேவதைகளை அறிந்து கொள்ளுங்கள்.

    உதாரணமாக : ஆங்கில வருடம் 1991−ல் பிறந்த ஜாதகருக்கு தமிழ் வருடமான 1871க்கு தமிழ் பெயர் பிரஜோத்பத்தியான தேவதை கணபன். இவ்வாறு அவரவர் பிறந்த வருடத்திற்கான தேவதையையும், தமிழ் வருடத்தையும், அதற்கு இணையான ஆங்கில வருடத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.*

    *ஆண்டுகள் 60−க்கு தேவதைகள் :*

    1. பிரம்மா 2. விஷ்ணு 3. மகேசன் 4. கணேசன் 5. கணபன் 6. ஷடானனன் 7. வல்லீ 8. கெளரீ 9. ப்ராம்ஹீ 10. மகேஸ்வரி 11. கெளமாரீ 12. வைஷ்ணவி 13. வாராஹி 14. இந்திராணி 15. சாமுண்டி 16. அரோகன் 17. பிராஜன் 18. படரன் 19. பதங்கன் 20. ஸ்வர்ணரன் 21. ஜ்யோதிஷ்மான் 22. விபாஸன் 23. கச்மபன் 24. ரவி 25. சூர்யன் 26. பானு 27. ககன் 28. பூஷா 29. ஹிரண்யகர்பன் 30. மரீசி 31. ஆதித்யன் 32. ஸவிதா 33. அருக்கன் 34. பாஸ்கரன் 35. அக்கினி 36. ஜாதவேதன் 37. ஸஹோஜஸன் 38. அஜிராபிரபு 39. வைஸ்வாநரன் 40. நர்யாபஸன் 41. பங்க்திராதஸன் 42. விஸர்பி 43. மத்ஸ்யமூர்த்தி 44. கூர்மமூர்த்தி 45. வராஹமூர்த்தி 46. நரசிம்மமூர்த்தி ?47. வாமணமூர்த்தி 48. ஶ்ரீராமன் 49. பரசுராமன் 50. பலராமன் 51. கிருஷ்ணன் 52. கல்கி 53. புத்தர் 54. துர்க்கை 55. யாதுதானன் 56. பைரவர் 57. ஹனுமான் 58. சாரதை (சரஸ்வதி) 59. தா௯ஷாயணி 60. ல௯்ஷமி.

    *ஒவ்வொரு ஆண்டிற்கான ஸ்வரூபம் + பலன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.*

    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    sivajansikannan@gmail.com











    ReplyDelete
  5. Sat. 27, Jan. 2024 at 8.52 pm.

    *கை ரேகை :*

    *கை ரேகையில் இன்று நாம் காண இருப்பது... முக்கோணம் + வட்டம்.*

    * கை ரேகையில் முக்கோண ரேகை அமைந்திருப்பது நல்லது. புத்தியாகிய மூன்று ரேகைகளும் நன்கு அமையும் போது, உள்ளங்கையில் ஒரு முக்கோணம் ஏற்பட்டால், ஆயுள், ஆரோக்கியம், அறிவாற்றல் சிறந்திருக்கும்.

    * ஆயுள் ரேகையின் மீது முக்கோணம் இருப்பின் *பூர்வீக சொத்து* எதிர்பாராது கிடைக்கும்.

    * புத்தி ரேகையின் மீது இருந்தால், தாய்வழி, அல்லது அவ்வழி உறவினரின் உதவியும், பொருளும் கிடைக்கும்.

    * களத்திர ரேகையின் மீது காணப் பட்டால், மனைவி மூலமாக பொருள், வரவு உண்டாகும்.

    *அடுத்து வட்டம் :*

    *வட்டம் அல்லது வளையம். இது எந்த ரேகை மேட்டிலும் இருப்பது நல்லதல்ல. காரணம் கெடு பலன்களையே அளிக்கும்.*

    * சந்திர மேட்டில் இருக்குமானால், நீரினால் கண்டம் ஏற்படும்.

    சூரியமேட்டில் விதிவிலக்காக இருந் தால், அறிவியல் துறையில் உயர்வும், புகழும் இருக்கும். இதைத் தவிர வேறு இடத்தில் இருப்பது நல்லதல்ல.

    *கைரேகையில் நாம் இதுவரை பார்த்து வந்தது... தீவுக்குறி, உடுக்கைக் குறி, பாய் ரேகை, சதுக் குறியீடு, கிரகமேடு முக்கோணம், வட்டம், புள்ளிகள் இவை யாவும் பார்த்துவிட்டோம்.*

    *அடுத்த பதிவில், நட்சத்திரக் குறி பற்றி பார்க்கலாம்.*

    *மீண்டும் சந்திப்போமே !*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  6. Sun. 4, Feb. 2024 at 7.57 am

    *அஷ்ட வர்க்கம்  :*

    *இன்று அஷ்டவர்க்கம் பற்றி பார்க்கலாம் !*

    *அஷ்ட வர்க்கம் என்றால் என்ன ?*

    * என்னவென்றால், அஸ்வினி முதலிய 27−நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் கிரகங்களின் அவ்வப்போது நேரும் சுப, அசுப பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு உள்ள ஒரு வழிகாட்டியே அஷ்டவர்க்கம் என்பது.

    *அஷ்ட வர்க்கம் என்பது, சூரியன் முதல் சனி முடிய உள்ள மொத்த கிரகங்கள் −7.  இவற்றோடு லக்னத்தையும் சேர்த்தால் மொத்தம் எட்டு என்ற கணக்காகிவிடும்.  இந்த எட்டு என்பதையே அஷ்டவர்க்கம் என்கிறோம்.*

    *செவ்வாய்   அஷ்ட வர்க்கம்.* __________________________________________
    ல.சுக்  சூரியன்  புதன்சந்   
    ௦௦௦        ௦௦௦          ௦௦௦      ௦௦௦
    |||||    |||||       |||||         ||||| 
    மீனம்     மேஷம்   ரிஷபம்   மிதுனம் ____________________________________________
    குரு
    ௦ ௦ ௦                                           ௦ ௦ ௦ ௦
    | | | | | | | |
    கும்பம் ராசி வீடுகள் கடகம்
    _____________ அங்காரக        ____________
    செவ்வாய்  அ.வர்க்கம் 
    |  |  |                                          |  |  |
    ௦  ௦  ௦  ௦  ௦                             ௦  ௦  ௦  ௦  ௦
    மகரம்                                        சிம்மம் ____________________________________________
    சனி
    ||||||  |||||||  ||| ||||||
    ௦  ௦             ௦      ௦ ௦ ௦ ௦ ௦ ௦௦
    தனுசு     விருச்     துலாம்      கன்னி
    ____________________________________________
    Explain  :
    −−−−−−−
    *  மேஷத்தில் 5 ரேகைகளும் (கோடுகள்) ,

    3−பிந்துகளும் (சுழிகள்)  வருகின்றன அல்லவா..?  

    *  அவற்றுள் 3−பிந்துக்களையும், 3−ரேகை களையும் நீக்கிவிட்டால், மீதம் 2 ரேகைகள் இருக்கும்.

    •  இவ்விதமான யோகத்தில் ஜனித்த ஜாதகனுக்குச் செவ்வாய் கோசார ரீதியாக, மேஷத்தில் வரும்பொழுது, கால் பங்கு அசுபத்தைத் தருவான்..என அறிந்து கொள்ளுங்கள்.

    *  அடுத்து, விருஷத்தில், 5−ரேகைகளும், 3−பிந்துக்களும் இருக்கின்றன அல்லவா?

    அவற்றுள், 3−ரேகைகளையும்,  பிந்துக்களையும் நீக்கிவிட்டால் மீதம் 2−ரேகைகளே மீதமிருககும்  எனவே,  அங்காரகன் கோசர ரீதியாய் விருஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது, கால் பங்கு அசுபத்தைத் தருவான்.

    *  மேலும், மிதுனத்தில் 3−பிந்துக்களும், 5−ரேகைகளும் இருக்கின்றன.

    *  இவற்றுள் 3−பிந்துக்களையும், 3−ரேகைகளையும் நீக்கினால், இருப்பது 2 ரேகைகள்.  எனவே, அங்காரகன் மிதுனத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது கால் பங்கு அசுபத்தைத் தருவான்.

    *  அடுத்து, கடகத்தில் 4−ரேகைகளும் 4−பிந்துக்களும் இருக்கின்றன.  இவ்விரண்டையும் எடுத்துவிட்டால், மீதம் ஏதுமில்லை.  

    •  ஆதலால், கடகத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது, சுபத்தைக் கொடுப் பவனாகவோ, அல்லது  அசுபத்தைக் கொடுப்பவனாகவோ ஆவதில்லை.

    •  அடுத்ததாக, சிம்மத்தில் 3−ரேகைகளும், 5−பிந்துக்களும் இருக்கின்றன.  3−ரேகைகளையும், 3−பிந்துக்களையும் நீக்கினால், மீதி 2−பிந்துக்கள் இருக்கின்றன.  எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் சஞ்சரிக்கும் பொழுது, கால் பங்கு சுபபலனைத் தருவான் என அறிக.

    அடுத்து, கன்னியில் 2−பிந்துக்களும், 6−ரேகைகளும் இருக்கின்றன.  இதில், 2−பிந்துக்கள், 2−ரேகைகள் நீக்கினால், மீதம் இருப்பது 4−ரேகைகள்.  எனவே, அங்காரகன் கோசர ரீதியாக கன்னியில் சஞ்சரிக்கும்போது, 1/2 பங்கு அசுபனாவான்.

    *கவனியுங்கள்  :*  அசுபன் + சுபன்.*

    •  துலாம்−ல் 3−ரேகைகளும், 5−பிந்துக்களும் உள்ளன.  3−ரேகைகள், 3−பிந்துக்களை நீக்கினால் 2−பிந்துக்கள் மீதமுள்ளன.  ஆகவே, அங்காரகன் கோசர ரீதியாக துலாமில் சஞ்சரிக்கும்போது, கால் பங்கு சுபனாவான்.

    •  அடுத்ததாக, விருச்சிகத்தில் ஒரு பிந்துவும், 7-ரேகைகளும் இருக்கிறது.  ஒரு பிந்துவையும், ஒரு ரேகையையும் நீக்கினால், மீதம் 6−ரேகைகள் மீதமுள்ளன.

    எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்போது, 3/4 பங்கு அசுபனாவான்.

    •  அடுத்து தனுசுவில் 6−ரேகைகளும், 2−பிந்துக்களும் இருக்கிறது.  2−ரேகை, 2−பிந்துவை நீக்கினால், மீதம் 4−ரேகைகள், ஆகவே, கோசர ரீதியாக தனுசுவில் அங்காரகன் சஞ்சரிக்கும்போது, 1/2 பங்கு அசுபனாவான்.

    •  அடுத்து, மகரத்தில்  3−ரேகைகளும், 5 பிந்துக்களும் இருக்கிறது. 3+3ஐ இரண்டிலும் நீக்கினால், மிதமிருப்பது, 2−பிந்துக்கள் மீதி இருக்கும்.  எனவே அங்காரகன மகரத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும்போது, கால் பங்கு சுபனாவான்.

    ReplyDelete
  7. அடுத்ததாக... கும்பத்தில் 4−ரேகையும், 3−பிந்துவும் உள்ளன.  இவற்றுள் 3+3−ஐ நீக்கினால், 1−ரேகை மீதமாகும்.  எனவே, கும்பத்தில் அங்காரகன் கோசர ரீதியாகச் சஞ்சரிக்கும் பொழுது, அரைக்கால் பங்கு அசுபனாவான்.

    •  இந்தக் கும்பம், சந்திரன் இருக்கும் விருஷத்திலிருந்து, 10−வதாக வருவதாலும், மேற்படி ஸ்தானம், சுபஸ்தன மாகவோ, அசுபஸ்தானம் ஆகவோ ஆவதில்லை.  இருப்பினும் 4−வதாக ஒரு பிந்து சேர்க்கப்படவில்லை.  ஆதலால் தான் 3−பிந்துக்கள்..என தெரிந்து கொள்க.

    •  அடுத்து, மீனத்தில்,  5−ரேகைகளும், 3− பிந்துக்களும் இருக்கிறது.  இவற்றுள் 3+3−ஐ நீக்கினால், 2− ரேகைகள் மீதப்படும்.

    எனவே, செவ்வாய் மீனத்தில், கோசர ரீதியாய் சஞ்சரிக்கும்பொழுது, 1/4 பங்கு அசுபனாவான்.

    •  சரி... அடுத்து, ஒவ்வொரு கிரகத்திற்கும், அஷ்டவர்க்கம் எடுத்தால், ஒவ்வொரு ஸ்தானத்திலும், ரேகைகளும், பிந்துக்களுமாகச் சேர்ந்து, மொத்தம் 8− பரல்கள் வருகிறது.

    •  இவற்றில், சுப−அசுபங்களை கழித்து, மீதம் வருவதை, ரேகை, பிந்து இவற்றிற்கு தக்கபடி, சுபமாகவும், அசுபமாகவும் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    •  மட்டுமின்றி...எந்த இடத்தில் 4− ரேகைகளும், 4−பிந்துக்களும் வருகிறதோ அந்த இடத்தில் கிரகம் நடுநிலையையே வகிக்கும்.

    •  8−ரேகைகள் வந்தால், அங்கு கிரகங்கள் மிகுந்த அசுபங்களாகும்.

    •  8− பிந்துக்கள் எங்கு வருகிறதோ.. அங்கு மிகுந்த சுபங்களாகிறது...என்று அறிந்து கொள்ளுங்கள்.

    *மேலும் கவனியுங்கள்..*

    ஒரு கிரஹத்தின் ஸ்தானத்தினின்று, மற்றொரு கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்குமானால்... சுபம், அசுபம் ஆகிய இரண்டு பலன்களையும் தருகிறது.

    விரும்புவோர், இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.  அடுத்த பதிவில், இதன் பரல்களின் எண்ணிக்கையை அனைவரும் புரிந்து கொள்வதற்காக அளிக்கிறேன்.
    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete