Sunday, 26 May 2013

தொழில் நிர்ணயம் !?

தொழில் நிர்ணயம் !?
ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று, எங்களது ஜோதிட முறை மூலம்தெளிவாக நிர்ணயம்  செய்துவிட முடியும். மேலும் ஒருவருக்கு தொழில் நிலை பற்றி தெளிவாக சொல்லும் பாவம் 10  ம் வீடு, இந்த ஒரு வீட்டினை வைத்தே ஜாதகருக்கு  அமையும் ஜீவனத்தை பற்றி தெளிவாக சொல்லிவிட முடியும்

இதற்க்கும் வீடும் வீடு 11  ம் வீடு ஆகியவற்றுடன் தொடர்பு செய்து பலன் சொல்ல தேவையில்லை,.

மேலும் இந்த வீடுகள் முறையே  (  2  ம் வீடு ) ஜாதகருக்கு வரும் வருவாய் அது எந்த வழியில் இருந்து வரும் என்பதனையும் ,  ( 6  ம் வீடு ) கடன் பெற்று தொழில் செய்தால் ஜாதகருக்கு நன்மை தருமா ? சிறு அதிர்ஷ்டம் பற்றியும் . ( 11  ம் வீடு ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக நீடித்த அதிர்ஷ்டம் உண்ட, செய்யும் தொழில் அதிர்ஷ்ட வாழ்வினை தருமா ? என தெரிந்து கொள்ளவே இந்த வீடுகளை பயன்படுத்தி பலன் சொல்லலாம்.

 
அது சரி நீங்கள் எப்படி இந்த வீடுகள் எந்த விதமான பலனை தரும் என்று நிர்ணயம் செய்வீர்கள் நண்பரே ?

தொழில் என்றாலே 10  ம் வீட்டை மட்டும் வைத்து 100  சதவிகிதம் ஜாதகருக்கு என்ன தொழில் அமையும் என்று நிர்ணயம் செய்து விட முடியும் என்பது எனது தீர்க்கமான முடிவு 


No comments:

Post a Comment