Thursday, 9 May 2013

சுக்கிர வளையம்


கை ரேகை சாஸ்திரம் --சுக்கிர வளையம்



http://4.bp.blogspot.com/-wdW1Tiqt9mo/TjfohvrohPI/AAAAAAAAALo/z8vyw6YbKUk/s320/images.jpghttp://2.bp.blogspot.com/-0dGgTXi_Kds/TjfoSFb0KHI/AAAAAAAAALg/0ceTTGSZ0mo/s320/imagesCAB7M2SA.jpg

girdle of venus[சுக்கிர வளையம் ]
சுக்கிர வளையம் ஒரு உப ரேகை ஆகும். சுக்கிர வளையம் உள்ளவர்கள் காம வெறி பிடித்தவர்கள் என்று ஒரு வகையான கருத்து உண்டு அது முழுமையான சரியான கருத்தாக இருக்காது . ஆனால் இந்த வகையான ரேகை இருப்பவர்கள் மிக குறைவான தொகையினர் என்று மட்டும் சொல்லலாம். 10 % ஆனவர்களுக்கு மட்டுமே இந்த வகையான ரேகை காணப்படும் . அதுவும் மிகவும் தெளிவான சுக்கிர வளையம் உள்ளவர்கள் மிக குறைவு . அவ்வாறு தெளிவான சுக்கிர வளையம் அவர்கள் அதிஸ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். இந்த மாதிரி ரேகை உள்ளவர்கள் கலை நயம் உள்ளவர்கள் , பல புகழ் மிக்க சத்திர சிகிச்சை நிபுணர்களிடம் இந்த வகையான ரேகையை கண்டு இருக்கிறேன் . எனது தலைமை சத்திர சிகிச்சை ஆசிரியரிடம் கூட இந்த ரேகை இருக்கிறது [முக தாடை அறுவை சிகிச்சை நிபுணர் ] . ஆனால் இந்த சுக்கிர வளையம் அரை குறையாக அமைந்தவர்கள் காம வெறியர்களாகவும் , குற்றவாளிகளாகவும் இருப்பார்கள் . சுக்கிர வளையம் திருமண ரேகையை வெட்டினால் அவர்கள் மணவாழ்க்கை போரட்டம் நிறைந்ததாக இருக்கும் . பொதுவாக சுக்கிர வளையம் அமைய பெற்றவர்கள் மிகவும் உணர்ச்சிவகைப்பட்டவர்களாக இருப்பார்கள் . இந்த வளையத்தை ஏனைய உப ரேகைகள் வெட்டாமல் இருப்பது நல்லது . மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு இந்த ரேகைகள் இருந்ததாக இந்திய சாஸ்திரங்கள் கூறுகின்றன , ஆனால் மேல் நாட்டு கை ரேகை ஆய்வாளர்கள் இந்த ரேகையை மிகவும் அதிஸ்டமில்லாததாக குறிப்பிடுகின்றனர்

No comments:

Post a Comment