Saturday, 15 June 2013

பெண்கள் மொட்டை அடித்து கொள்ளலாமா?

பெண்கள் மொட்டை அடித்து கொள்ளலாமா?


இறை நம்பிக்கையை பொறுத்தவரை மூன்று வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். 

ஓன்று...!

அவனன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். 

இரண்டு...!

சாமியாவது,  பூதமாது...  போய்யா...போய் வேலையை பார். உழைச்சாத்தான் நாட்டில் பிழைக்கலாம் என்று வேதாந்தம் பேசுகிறவர்கள். 

மூன்று...!

முருகனை கும்பிட்டா வழி பிறக்குமா? சிவனை தரிசித்தால் நல்லது நடக்குமா? விஷ்ணுவை வணங்க்கினால் நல்வழி கிடைக்குமா? என்று மாற்றி மாற்றி ஓடுகிறவர்கள். 

கண்ணுக்கு தெரியாத சாமியை கண்மூடித்தனமாக நம்புகிறவர்களை பற்றி கவலை இல்லை. இன்றல்ல நாளை மூடிய கதவு திறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.

இல்லை என்பவர்களை  பற்றியும் கவலை இல்லை. மூளை பலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னுக்கு வர துடிப்பார்கள். 

இரண்டும் கெட்டான் கேஸ் தான் டேஞ்சர். 

பூஜை, வழிபாடு, வேண்டுதல் பிராத்தனை என்று பலவும் செய்து விட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் கடவுள் மேலேயே கடும் கோவம் கொள்பவார்கள்.

நான் என்ன செய்யலை... விரதம் இருந்தேன், அர்ச்சனை செய்தேன், அபிழேகம் செய்தேன், 108 தடவை பிரகாரம் சுற்றினேன். எந்த சாமியும் கண் திறக்கலை.  நான் ஏன் கும்பிடனும்...என்று விரத்தியில் புலம்புவார்கள்.

சரி நாம் விழயத்திற்க்கு வருவோம்.


பலர் பரிகாரம் செய்கிறார்கள். அர்ச்சனை செய்வது, அபிழேகம் செய்வது, அங்கபிரதச்சனம் செய்வது, அலகு குத்துவது, மொட்டை போடுவது என்று பல வகையில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

ஆனால் மொட்டை போடுகிறார்களே இதை பற்றிதான் நம் கட்டுரை.




மொட்டை போடுவதை பற்றி எல்லாம் வழிப்பாட்டு முறையில் எங்கும் சொல்லப்படவில்லை.

கிட்டத்தட்ட நம்மால் ஊகிக்க முடிகிறது. அதாவது.. எல்லாம் வல்ல இறைவனுக்கு எதை கொடுப்பது? தன்னை அவலச்சனம் செய்து கொண்டாலாவது இறைவனை திருப்தி படுத்த முடியுமா என்ற சிந்தனைதான் அது

இது யாரோ ஒரு தனி நபருக்கு உதித்த யோசனை... பின்னால் பரவலாக பரவி இருக்கிறது.  இதுதான் உண்மை.


சரி... ஆண்கள் மொட்டை போடுவதை பற்றி கவலை இல்லை. பெண்கள்... அதுவும் சுமங்கலை பெண்கள் மொட்டை போடலாமா? 



கூடாது. 

பெண்ணை மகாலட்சுமிக்கு  ஒப்பிட்டது ஹிந்து மதம். மகாலட்சுமி என்றால் அழகு என்று பொருள்.

தன்னை அழகு படுத்திக்கொள்ளாத பெண்ணை சூனியம் நிறைந்தவள் என்கிறது. தலை வாராத பெண்ணை தரித்திரம் நிறைந்தவள் என்பார்கள்.  

ஒரு பெண்ணுக்கு அழகே தலை சீவி, பொட்டிட்டு, பூவைத்து சிரித்த முகத்தோடு வருவதுதான். 

அந்த பெண் வேண்டுதல் என்ற பெயரால் மொட்டை அடித்து கொள்வது தவறு.  அதுவும் திருமணம் அனால் பெண்கள் வேண்டுதல் இருந்தால் பூமுடி எடுப்பதுதான் சிறப்பு. 

பூமுடி என்பது கூந்தலின் அடிபகுத்தில் கொஞ்சம் வெட்டி கொள்வது. இதுதான் சுமங்கலி பெண்கள் செய்ய வேண்டியது. 

No comments:

Post a Comment