ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.
No comments:
Post a Comment