Thursday 13 June 2013

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?

தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள் தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.  மேலும் ஒருவரது ஜாதகத்தில் நான்காமிடம் தாயையும், சொத்து மற்றும் வண்டி வாகனங்களையும் குறிக்கும் ஆகவே நாம் நம் தாயாரை நன்றாக பார்த்துக் கொண்டால் நமக்கு சொத்துக்களும் வண்டி வாகனங்களும் தாயின் ஆசிர்வாதத்தாலும்  நம்மை வந்தடையும்.

No comments:

Post a Comment