Friday, 7 June 2013

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?
Temple images
சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இது ஆன்மிக காரணம். அறிவியல் காரணமும் இதற்கு உண்டு. தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவி யிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும்.  வாழை மரத்திற்கு எத்தனையோ மருத்துவகுணங்கள் உண்டு. வாழைப்பட்டைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. பாம்பு கடிக்கு அந்தக்காலத்தில் வாழைத்தண்டு சாறை மருந்தாகக் கொடுப்பர். பற்கள் ஒன்றோடொன்று கிட்டிக் கொண்டு சிலர், திறக்க முடியாமல் சிரமப்படுவர். இதற்கு வாழைத்தண்டு சாற்றைக் கொடுத்து குணப்படுத்துவர்.  வாழைப்பூ, காய், பழம், நார், பட்டை, தண்டு என்று அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகின்றன. வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் வளரும். இலையில் இருக்கும் சத்துக்கள், சூடான உணவோடு கலந்து உடம்புக்குள் செல்வதால், தோலில் திரை( சுருக்கம்) ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment