Thursday, 13 June 2013

இந்து லக்கினம்

இந்து லக்கினம்

நமது வாசக அன்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இன்று நாம் இந்து லக்கினம் பற்றி பார்க்க விருக்கிறோம்.

விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த  அம்பிகையின் அனுக்கிரகம் பூரணமாகப் பெற்ற ,  மகா கவி காளி தாசரின் மூலம் இந்த உலகுக்கு கிடைத்த , பல அரும்பெரும் பொக்கிஷங்களில் ஜோதிடமும் ஒன்று. . அவரால் கிடைக்கப் பெற்றதே இந்த இந்து லக்கினம் பற்றிய குறிப்பு. 


அவரது "உத்தர காலமிர்தம் " - நிஜமாகவே ஒரு அமுதம் தான். சமஸ்கிருதத்தில் உத்தர் என்றால் பதில் . KBC நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா?   " சஹி உத்தர். " அப்படினா சரியான பதில்.

உத்தர காலமிர்தம் என்றால் - காலா காலத்திற்கும் பொருந்தும் , அமுதம் போன்ற - கேள்வி  பதில்  தொகுப்பு என்ற பொருள் கொள்ளுங்கள், 

சரி, இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
இதைப் பற்றி , நிறைய ஜோதிடர்களுக்கு தெரியாது என்பது என் அனுபவக் கருத்து. அது போன்ற , ஒரு அரிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி. 

உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை  தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது. 

சரி, இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..


உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :

லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :


ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள்  என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சூரியனுக்கு       - 30 
சந்திரனுக்கு      - 16 
செவ்வாய்க்கு   - 6 
புதனுக்கு             - 8 
சுக்கிரனுக்கு     - 10 
 குருவுக்கு          - 12 
சனிக்கு                - 1 

ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது. 

உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.

அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .

இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும்.   வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...

இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும்  பொருளும், புகழும் குவியும்... 

ஒரு உதாரணத்திற்கு  - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.

விருச்சிகத்திற்கு  - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .

சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.


இரண்டையும்  கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .

12 ஆல் வகுக்க மீதி வருவது  ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும். 

ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.

அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது.  உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும்  அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்  இல்லையா? அதே மாதிரி ...

இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும். 

அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார்.  

 இதைத் தவிர சில நுணுக்கமான விதிகளும், விதி விலக்குகளும் உண்டு. அதை எல்லாம் நீங்கள் - தனியே , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது - ஆராய்ச்சி 
செய்து கொள்ளுங்கள்.

16 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.
    ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகமும் 3,6,9,12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கக் கூடாது என்பது காளீதாசரின் கருத்து..எனப் படித்துள்ளேன். இதைப்பற்றியதான தங்களின் விளக்கம் அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன். அடியேன் வாட்ச்அப் நம்பர் மூலம் தெரிவியுங்களேன். வாட்ச் அப் எண் : 91 9994704606

    ReplyDelete
  2. இது சமஸ்கிருதத்திலே ஸார்த்தூல விக்ரீடிதம் .இது ஒரு "பா" வகை. அந்தவிதமான செய்யுள் அமைப்பில் இந்த உத்தர காலாமிர்தம் ஆக்கப்பட்டுள்ளன. காளிதாசர், காளியை பிரதான தெய்வமாகக் கொண்ட, "சாக்தம்" என்ற சமயத்தைச் சேர்ந்தவர்.

    சமயங்கள் ஆறு அல்லவா ! செளரம், காணாபத்தியம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம். இந்த சாக்த சமயத்தில், சிவனின் பெயர்... காமேஸ்வரன். அம்பிகை காமேஸ்வரி. இந்த காமேஸ்வரியே... மகாகாளி
    . அடியேனுக்கு பூர்வ காலாமிர்தம் கிடைக்கவில்லை..இதுவரை. அதிலே அனைத்து, வரைவிலக்கணமும் உண்டு என்கிறார்கள்.

    ReplyDelete
  3. 12−ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் மட்டுமே, சயன சுகமும், நல்ல யோகமும் ஏற்படும். இல்லையேல், இந்த ஜாதகனுக்கு அதாவது, 12, 3, 6, 8 ஆகிய இடங்களில், அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரெனில், அச்சாதகனுக்கு ஆயுள் குறையும். (பீசத்தில் நோயுறும். ) மர்ம உறுப்புகளில் நோயுறுவதோடு, வாழ்மனையும் நஷ்டம்.

    ReplyDelete
  4. Sun. 21, Jan. at 4.57 pm.

    *ஜாதகம் :*
    *நாழிகை + விநாடி :*

    * 2 ௯ஷணம் = 1 இல்லம்
    * 2 இல்லம் = 1 காஷ்டை
    * 2 காஷ்டை = 1 நிமிஷம்
    * 2 நிமிஷம் = 1 துடி
    * 2 துடி = 1 துரிதம்
    * 2 துரிதம் = 1 தற்பரை
    * 10 தற்பரை = 1 பிராணன்
    * 6 பிராணன் அல்லது 60 தற்பரை = 1 விநாடி
    * 60 விநாடி = 1 கடிகை அல்லது நாழிகை
    * 60 நாழிகை = 1 நாள்.

    *இப்போ இங்கு ஒரு நாளைய சுவாசக் கணக்கைக் கவனியுங்கள் :*
    1 விநாடிக்கு 6−பிராணன் வீதம் 60 விநாடிக்கு (60×6= 360) 360 பிராணன்.

    1 நாழிகைக்கு 360 பிராணன் வீதம் 60 நாழிகைக்கு ( 360 × 60 = 21600) 21600 பிராணன். இதுவே, நமது ஒரு நாளைய சுவாசம்.
    *மீண்டும் சந்திக்கலாமே..!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  5. Sun. 21, Jan. 2024 at 8.49 pm.


    செ வ் வா ய் அ ஷ் ட வ ர் க் க ம்
    _____________________________________________
    ல.சுக் சூரியன் புதன் சந்
    ௦௦௦ ௦௦௦ ௦௦௦ ௦௦௦
    | | | | | | | | | | | | | | | | | | | |
    _____________________________________________

    | | | | குரு
    ௦ ௦ ௦ ௦ ௦ ௦ ௦
    | | | |
    _____________ அங்காரக ____________
    செவ்வாய் அஷ்ட வர்க்கம்
    | | | | | |
    ௦ ௦ ௦ ௦ ௦ ௦ ௦ ௦ ௦ ௦
    _____________________________________________
    | | | | | | | | | | | | | சனி | | | | | |
    ௦ ௦ ௦ | | | ௦ ௦
    ௦ ௦ ௦ ௦ ௦
    _____________________________________________

    Explain :
    −−−−−−−

    * மேஷத்தில் 5 ரேகைகளும் (கோடுகள்) ,
    3−பிந்துகளும் (சுழிகள்) வருகின்றன அல்லவா..?

    * அவற்றுள் 3−பிந்துக்களையும், 3−ரேகை களையும் நீக்கிவிட்டால், மீதம் 2 ரேகைகள் இருக்கும்.

    • இவ்விதமான யோகத்தில் ஜனித்த ஜாதகனுக்குச் செவ்வாய் கோசார ரீதியாக, மேஷத்தில் வரும்பொழுது, கால் பங்கு அசுபத்தைத் தருவான்..என அறிந்து கொள்ளுங்கள்.

    * அடுத்து, விருஷத்தில், 5−ரேகைகளும், 3−பிந்துக்களும் இருக்கின்றன அல்லவா?
    அவற்றுள், 3−ரேகைகளையும், பிந்துக்களையும் நீக்கிவிட்டால் மீதம் 2−ரேகைகளே மீதமிருககும் எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் விருஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது, கால் பங்கு அசுபத்தைத் தருவான்.

    * மேலும், மிதுனத்தில் 3−பிந்துக்களும், 5−ரேகைகளும் இருக்கின்றன.

    * இவற்றுள் 3−பிந்துக்களையும், 3−ரேகைகளையும் நீக்கினால், இருப்பது 2 ரேகைகள். எனவே, அங்காரகன் மிதுனத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது கால் பங்கு அசுபத்தைத் தருவான்.

    * அடுத்து, கடகத்தில் 4−ரேகைகளும் 4−பிந்துக்களும் இருக்கின்றன. இவ்விரண்டையும் எடுத்துவிட்டால், மீதம் ஏதுமில்லை.

    • ஆதலால், கடகத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது, சுபத்தைக் கொடுப் பவனாகவோ, அல்லது அசுபத்தைக் கொடுப்பவனாகவோ ஆவதில்லை.

    • அடுத்ததாக, சிம்மத்தில் 3−ரேகைகளும், 5−பிந்துக்களும் இருக்கின்றன. 3−ரேகைகளையும், 3−பிந்துக்களையும் நீக்கினால், மீதி 2−பிந்துக்கள் இருக்கின்றன. எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் சஞ்சரிக்கும் பொழுது, கால் பங்கு சுபபலனைத் தருவான் என அறிக.

    அடுத்து, கன்னியில் 2−பிந்துக்களும், 6−ரேகைகளும் இருக்கின்றன. இதில், 2−பிந்துக்கள், 2−ரேகைகள் நீக்கினால், மீதம் இருப்பது 4−ரேகைகள். எனவே, அங்காரகன் கோசர ரீதியாக கன்னியில் சஞ்சரிக்கும்போது, 1/2 பங்கு அசுபனாவான்.

    *கவனியுங்கள் :* அசுபன் + சுபன்.*

    • துலாம்−ல் 3−ரேகைகளும், 5−பிந்துக்களும் உள்ளன. 3−ரேகைகள், 3−பிந்துக்களை நீக்கினால் 2−பிந்துக்கள் மீதமுள்ளன. ஆகவே, அங்காரகன் கோசர ரீதியாக துலாமில் சஞ்சரிக்கும்போது, கால் பங்கு சுபனாவான்.

    • அடுத்ததாக, விருச்சிகத்தில் ஒரு பிந்துவும், 7-ரேகைகளும் இருக்கிறது. ஒரு பிந்துவையும், ஒரு ரேகையையும் நீக்கினால், மீதம் 6−ரேகைகள் மீதமுள்ளன.
    எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்போது, 3/4 பங்கு அசுபனாவான்.

    • அடுத்து தனுசுவில் 6−ரேகைகளும், 2−பிந்துக்களும் இருக்கிறது. 2−ரேகை, 2−பிந்துவை நீக்கினால், மீதம் 4−ரேகைகள், ஆகவே, கோசர ரீதியாக தனுசுவில் அங்காரகன் சஞ்சரிக்கும்போது, 1/2 பங்கு அசுபனாவான்.

    • அடுத்து, மகரத்தில் 3−ரேகைகளும், 5 பிந்துக்களும் இருக்கிறது. 3+3ஐ இரண்டிலும் நீக்கீனால், மிதமிருப்பது, 2−பிந்துக்கள் மீதி இருக்கும். எனவே அங்காரகன மகரத்தில் கோசர ரீதியாக சஞ்சரிக்கும்போது, கால் பங்கு சுபனாவான்.

    • அடுத்ததாக... கும்பத்தில் 4−ரேகையும், 3−பிந்துவும் உள்ளன. இவற்றுள் 3+3−ஐ நீக்கினால், 1−ரேகை மீதமாகும். எனவே, கும்பத்தில் அங்காரகன் கோசர ரீதியாகச் சஞ்சரிக்கும் பொழுது, அரைக்கால் பங்கு அசுபனாவான்.

    • இந்தக் கும்பம், சந்திரன் இருக்கும் விருஷத்திலிருந்து, 10−வதாக வருவதாலும், மேற்படி ஸ்தானம், சுபஸ்தன மாகவோ, அசுபஸ்தானம் ஆகவோ ஆவதில்லை. இருப்பினும் 4−வதாக ஒரு பிந்து சேர்க்கப்படவில்லை. ஆதலால் தான் 3−பிந்துக்கள்..என தெரிந்து கொள்க.


    • அடுத்து, மீனத்தில், 5−ரேகைகளும், 3− பிந்துக்களும் இருக்கிறது. இவற்றுள் 3+3−ஐ நீக்கினால், 2− ரேகைகள் மீதப்படும்.
    எனவே, செவ்வாய் மீனத்தில், கோசர ரீதியாய் சஞ்சரிக்கும்பொழுது, 1/4 பங்கு அசுபனாவான்.


    ReplyDelete
  6. அடுத்து, மீனத்தில், 5−ரேகைகளும், 3− பிந்துக்களும் இருக்கிறது. இவற்றுள் 3+3−ஐ நீக்கினால், 2− ரேகைகள் மீதப்படும்.
    எனவே, செவ்வாய் மீனத்தில், கோசர ரீதியாய் சஞ்சரிக்கும்பொழுது, 1/4 பங்கு அசுபனாவான்.


    • சரி... அடுத்து, ஒவ்வொரு கிரகத்திற்கும், அஷ்டவர்க்கம் எடுத்தால், ஒவ்வொரு ஸ்தானத்திலும், ரேகைகளும், பிந்துக்களுமாகச் சேர்ந்து, மொத்தம் 8− பரல்கள் வருகிறது.

    • இவற்றில், சுப−அசுபங்களை கழித்து, மீதம் வருவதை, ரேகை, பிந்து இவற்றிற்கு தக்கபடி, சுபமாகவும், அசுபமாகவும் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    • மட்டுமின்றி...எந்த இடத்தில் 4− ரேகைகளும், 4−பிந்துக்களும் வருகிறதோ அந்த இடத்தில் கிரகம் நடுநிலையையே வகிக்கும்.

    • 8−ரேகைகள் வந்தால், அங்கு கிரகங்கள் மிகுந்த அசுபங்களாகும்.

    • ~8− பிந்துக்கள் எங்கு வருகிறதோ.. அங்கு மிகுந்த சுபங்களாகிறது...என்று அறிந்து கொள்ளுங்கள்.


    மேலும் கவனிக்க...

    ஒரு கிரஹத்தின் ஸ்தானத்தினின்று, மற்றொரு கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்குமானால்... சுபம், அசுபம் ஆகிய இரண்டு பலன்களையும் தருகிறது.

    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    jansikannan@gmail.com

    ReplyDelete
  7. அய்யா..வெ.சாமி அவர்கள் பதம் பணிந்து மன்னிப்பு கோருகிறேன். குருவுக்கு மிஞ்சின சீடன் இல்லை. ஏதும் தவறுகள் இருப்பின் அடுத்த பதிவில் பிழைகளைத் தெரிவித்து விடுவீர்கள் என்ற நோக்கிலேயே இவ்வாறு அனுப்பப்படுகிறது.

    ReplyDelete
  8. Mon. 22, Jan. 2024 at 10.49 am.

    *திருவருட்பயன் :*

    *குறள் : 79*

    *குறளுக்குள் போகுமுன்....*

    * எந்த ஒரு அனுபவத்திலும்... *அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள்* என்ற மூன்று பொருள்கள் இருக்கும்.

    * உலக ரீதியாக நோக்குங்கால்...
    *அறிபவன் ஞாதிரு அல்லது ஞாதா.
    அறிவு என்பது ஞானம். அறியப்படும் பொருளானது ஞேயம்.*

    எனவே, *ஞாதிரு, ஞானம், ஞேயம் ஆகிய இம்மூன்றிற்கின் பெயர் "திரிபுடி" ஆகும்.*

    * நான், அறிபவன் ஆகிய ஞாதாவாக எப்போது இருக்கிறேன் என்றால்...
    உதாரணமாக, ஒரு மலரை எடுத்துக் கொண்டால், அந்த மலரின் மணத்தை நுகர்கிறேன் எனும் போது அறிபவனாகிய ஞாதா ஆகிறேன்.

    * அதை நுகர்வதற்கு கருவியாக எனது அறிவு துணை செய்கிறது. எனவே, இது ஞானம் ஆகிறது.

    * அந்த மலரின் மணம் அறியப்படும் பொழுது, அது ஞேயம் ஆகிறது.

    * இவ்வாறு, அறிகின்ற தான், தனது அறிவு, அறியப்படும் பொருள் ஆகிய இம் மூன்றையும் அறிந்து நிற்றலே திரிபுடி ஞானம் ஆகும்.

    * ஆகவே, திரிபுடி என்பதற்கு சுருக்கமான வார்த்தை *மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாதிருப்பது* என்பதே.

    * இந்த மூன்றின் தன்மை, தமக்குள் ஒன்றாக அடங்கி, வேறுபடாது இருப்பதே மிகச் சிறந்த இன்பம். அதாவது, காண்பவன், காட்சி, காணப்படும் பொருள் இம் மூன்றும் ஒன்றாவதே இன்பம்.

    *இப்போ குறளுக்குள் வருவோம் :*

    *குறள் : 79*

    மூன்றாயதன்மை அவர் தம்மின் மிக முயங்கித்
    தோன்றாத இன்பம் அது; என் சொல் ?

    * சிறுவர்கள் என்னோடு அமர்ந்து இருக்க, நான் ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது அறிவோ, படத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.

    * எவ்வாறென்றால்... நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காட்சியை, வேறு விதமாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ! இவருக்கு நடிப்பே வரவில்லை. இவரை எப்படித் தேர்வு செய்தார்கள், இயக்குநர் இதைக் கவனித்திருந்தால் நன்றாய் இருக்குமே என, எனது சிந்தனை ஓட்டம் இவ்வாறாக இருக்கிறது.

    * இது எதை விளக்க முன் வந்தேன் என்றால்.. நானும், எனது அறிவும் படத்திற்கு வேறாக இருக்கிறது. படக் காட்சியோடு ஒன்றும்போது மட்டுமே அதனால் கிடைக்கும் முழு இன்பத்தைப் பெற முடியும்.

    * எனவே, நானும், எனது அறிவும் படத்திற்கு வேறாக நிற்பதனால், காட்சி எனும் இன்பத்தை நான் முழுமையாகப் பெறவில்லை என்று தெளிவாகிறது.

    * ஆனால், என்னோடு அமர்ந்திருந்து காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு, அந்த ஆராய்ச்சி பற்றியதான சிந்தனை இல்லை. அவர்கள் காட்சியோடு, அதாவது படத்தோடு ஒன்றிப்போய் விடுகிறார்கள். எனவே மகிழ்ச்சியின் மிகுதியால், கை தட்டி, ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியோடு அக்காட்சியோடு ஒன்றிப்போய்விடுகிறார்கள். எனவே அதனால் வரும் இன்பத்தை முழுமையாக அடைகிறார்கள் என்பது புலனாகிறது.

    * இவ்வாறு... முத்தி நிலையில், ஆன்மா அடையும், சிவானுபவத்திற்கும் இது பொருந்தும்.

    * ஆன்மா எப்போது திரிபுடி ஞான நிலையில் இருக்கும் என்றால்... நான் சிவத்தை அறிந்து அனுபவிக்கிறேன் என்று உணருமாயின், தான், தன் அறிவு, அறியப்படும் பொருளான இறைவன் அதாவது பதி ஆகிய முப்பொருளையும் அந்நிலையில் உணர்கிறது. இதுவே, திரிபுடி ஞானம் உள்ள நிலை.

    இந்த ஆன்மாவானது, ஒன்றை அறியுங்காலத்து, மற்றொன்றை அறியமாட்டாது எனில், முத்தி நிலையில் தன்னையும், தனது அறிவையும் மட்டுமே அறிந்து, சிவத்தை அறியாது போனால், அது சிவானந்தம் இல்லை.

    * ஆன்மாவானது, சிவம் ஒன்றை மட்டுமே அறிந்து, அதில் அழுந்துபோதே, பேரின்பம் கிடைக்கும்.

    ReplyDelete
  9. சிவத்தை அன்றி, பிற பொருளையும் அறியுமானால், ஆன்மாவிற்கு பேரானந்தம் எவ்வாறு கிடைக்கும் ?

    * ஆகவே, ஆன்மா, தன்னையும், தனது அறிவையும் அறியாது, சிவம் ஒன்றையே அறிந்து நிற்றல் வேண்டும்.

    *இதையே நமது ஆசிரியர் உமாபதி சிவம் மூன்றாய தன்மை தோன்றாத இன்பம் எனக் குறித்தார்.*

    * மேற்கண்டபடி, ஆன்மா தன்னை மறந்து, தனது ஞானத்தை மறந்து, சிவம் ஒன்றையே அறிந்து, அதில் அழுந்தி நிற்கும் நிலையை, உடம்பு உள்ள காலத்தில் அடைவதே... *நிட்டை* எனக் கூறுகிறார்கள்.

    ReplyDelete
  10. குறளில் "சொல் என்" என்று வந்துள்ளது.*

    * இந்த "சொல் என்" என்பதற்கு இரண்டு வகையாக அர்த்தம் கொள்ளலாம்.

    * ஒன்று, பேச்சற்ற மெளனமாக உள்ள அநுபூதி நிலை.

    * மற்றொன்று அவ் இன்ப அனுபவத்தைச் சொல்லால் வெளியிட்டு உரைப்பது எவ்வாறு இயலும் ? அச்சோ ! நான் என்னென்று சொல்வேன்..என்கிற ஆனந்த பரவச நிலை.

    * இவ்விரண்டிலும், சிறந்தது..இந்த ஆனந்த நிலையான இரண்டாவது பொருள்.

    *காரணம், இது, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட செயல்.*

    * இறைவனால் பெறுகின்ற இன்ப அனுபவம், பக்குவம் இல்லாதவர் களுக்குத் தெரியாத ஒன்று. அதனைச் சொல்லிக் காட்ட முடியாது. அவ்வாறு சொன்னாலும், தெரிந்து கொள்ள முடியாது.

    * வாதவூரடிகள் தனது சொல்ல வொண்ணா அளப்பரிய பேரின்பத்தை, தமது உள்ளத்திலும், உடலிலும் ஒருசேர நிறைந்து, ததும்பி நின்ற அதிசய நிலையைக் குறித்து, *சொல்லுவது அறியேன் வாழி முறையோ* என்றார்.

    நமது ஆசிரியரான உமாபதி சிவம், இவற்றையெல்லாம் உள்ளடக்கியே.. *சொல் என்* என்றார்.

    *மீண்டும் சந்திப்போம்...!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  11. Mon.22, Jan. 2024 at 4.35 pm.

    *ஜோதிடம் :*

    *புதையல் அறிய :*

    படுகிடையாக 5− கோடுகள் வரை. அதில்
    8 − செங்குத்தான கோடு வரைக. இப்போது 28 −சதுரங்கள் கிடைக்கும்.

    28 − சதுரங்களையும் (அபிஜித் உட்பட) பகிர்ந்து கொடுக்கணும்.

    *நிதிச் சக்கரத்தைக் கவனியுங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.*


    *நி தி ச் ச க் க ர ம்.*
    """"""""""""""""""""""""""""""

    _____________________________________________
    ரேவ அஸ் பரணி கிருத் மகம் பூரம் உத்தி
    _____________________________________________உத் பூர சதயம் ரோகி ஆயில் பூசம் அஸ்த் _____________________________________________
    அபி திரு அவிட் மிருக திருவா பு.பூ சித்தி
    _____________________________________________
    உத் பூரா மூலம் கேட்டை அனு விசா சுவா
    _____________________________________________


    • சூரியன் ஒரு நட்சத்திரத்தைக் கடக்கத் தோராயமாக 810−நாழிகை அல்லது 13−நாள் 30−நாழிகை எடுத்துக் கொள்ளும்.

    • சந்திரன், ஒரு நட்சத்திரத்தைக் கடக்க சுமார் 56− நாழிகை முதல் 67− நாழிகை வரை எடுத்துக் கொள்ளும்.

    இது கொஞ்சம் கடினமான கணிதம். "எனவே, இதனை எளிதாகச் செய்ய "பஞ்சாங்கம் அல்லது கிரக சஞ்சார நிலைலைக் குறிப்பு (எபிமெரிஸம்) கொண்டு எளிதாக கணிக்கலாம்.

    *மீண்டும் அடுத்த பதிவில்...!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  12. Fri. 26, Jan. 2024 at 4.25 pm.
    <¢குருபாதம ¢>

    *லக்னம் :*

    * லக்னம் என்றால் என்ன ?
    ஜாதகரானவர் பிறந்த ஊரில், பிறந்த நேரத்தில், வானத்தின் கிழக்கே, அந்த ஊரின் மேல் உதயமாகும் ராசி லக்னம் ஆகும்.

    * ஒரு ஜாதகரின் லக்னம் அறிய, பிறந்த ஊர், பிறந்த நேரம், அச்சமயம் கிழக்கே உதயமாகும் ராசி ஆகியவற்றை அறிய வேண்டும்.

    * ஏனென்றால், இந்த லக்னத்தின் அடிப்படையிலே தான் ஜாதகருடைய கல்வி, வேலை, மனைவி, மக்கள், லாப−நஷ்டம், பிறப்பு−இறப்பு, புண்ணியம் என இவைகள் கணிக்கப்படுகிறது.

    * எனவே, லக்னம் அறிந்தால் மட்டுமே ஜாதகரின் முழு வாழ்க்கையும் அறிய முடியும்.

    *எவ்வாறு என இப்பதிவில் பார்க்கலாம்...!*

    *ஜாதகரின் பிறந்த ஊரை குறிக்கும்போது, அது, எந்த மாவட்டம், எந்த வட்டம், எந்த நாடு, இவையெல்லாம் குறித்தால் தான் ஜாதகம் கணிக்க முடியும்.*

    * ஒரு ஜாதகர் பிறந்த நேரத்தை, காலையா, மாலையா, இரவா எனக் குறிக்க வேண்டும். அவ்வாறு குறிக்கும்போது, இரவு நேரம் ஆனால், முறைப்படி இரவு 12− மணிக்கு மேல் குழந்தை பிறந்தால், அது அடுத்த நாள் கணக்கில் குழந்தை பிறந்ததாக குறிக்க வேண்டும்.

    * உதாரணமாக... 24 / 2 / 1957 இரவு திங்கள் 12.30க்கு குழந்தை பிறந்தால், இரவு 12−மணிக்கு மேல் பிறந்துள்ளதால்.. 25 /2 / 1957 அன்று பிறந்த குழந்தை.

    * ஆனால், ஜாதகம் கணிக்க நாம் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு, 24 / 2 / 1957 சூரிய உதயத்தில் இருந்து இரவு முடிந்து, மறுநாள் காலை சூரிய உதயம் வரை 1−நாள் எனக் குறிக்கிறோம்.

    * எனவே, இரவு 12−மணிக்கு மேல் பிறந்த குழந்தைக்கு 25 / 2 / 1957 எனக் குறித்து, திங்கள் இரவு 12.30க்கு, விடிந்தால் செவ்வாய் எனக் குறிக்க வேண்டும்.

    * இப்போ.... திங்கள் கிழமை விடியற்காலை 5−மணிக்கு குழந்தை பிறந்தது என்றால், குழந்தையின் பிறப்பு *ஞாயிற்றுக் கிழமை* என அறிந்து கொள்ள வேண்டும்.

    *இந்த லக்னத்தில் முக்கியமான கருத்து இது தான். காரணம், இது சரியாக குறிக்கப்படாவிடில், ஜாதகங்கள் தவறாக எழுதப்படும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.*

    *லக்னம் அறிய பிறந்த ஊர், பிறந்த நேரம், சூரிய உதயம், பிறந்த ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை கொண்டு அறியலாம்.*

    * இந்த பூமியின் மேல், கிழக்கு மேற்காக ஒரு படுக்கைகோடு வரைந்தோமானால், 0−டிகிரி பாகைக்கு வடக்கு உள்ளது.

    * இது வடக்கு அட்சாம்சம் எனவும், தெற்கே உள்ளது தெற்கு அட்சாம்சம் என்றும் அழைக்கப்படும்.

    இவ்வாறு, ஒரு குழந்தை பிறந்த ஊரை, அந்த குழந்தை பிறந்த ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை கொண்டு அறியலாம்.

    * பூமியானது உருண்டை வடிவம் ஆனது. எனவே, 360டிகிரி பாகை கொண்டது.

    * அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 1நாள் −24−மணி நேரம் அதாவது, 24 × 6 = 1440 நிமிடங்கள் ஆகும். ஃ = பூமி 360டிகிரி பாகை சுற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் = 1440 நிமிடங்கள்.

    * 1 பாகை சுற்ற ஆகும் நேரம் =
    1440 × 1/360டிகிரி = 4 நிமிடங்கள்.

    * அவ்வாறு மேற்கிலிருந்து, கிழக்காக சுற்றும்பொழுது.. *முதலில் சூரிய ஒளி 180டிகிரி (360/2=180) பட்டபின்பு, 179, 178, 177 −ன் மேல் படும்.

    * 180டிகிரி பாகையில் உள்ள ஊரில், காலை 6−மணியாக இருக்கும்போது, 179 பாகையில் காலை 5.56 அதாவது 1பாகைக்கு 4−நிமிடம் குறைவாக இருக்கும்.

    *இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்...!*

    * சென்னையின் அட்சரேகை 13; தீர்க்க ரேகை 80:15 என எடுத்துக் கொள்வோம்.

    * எப்போதுமே, குழந்தை பிறந்த நேரத்தை எல்லா நாடுகளிலும், அந்த நாட்டின், பொது நேரத்தில் தான் குறிப்பார்கள். அவ்வாறாக நமது இநதியாவின் குழந்தை பிறந்த நேரத்தை இந்தியாவின் பொது நேரமாகிய 82.30 தீர்க்க ரேகை நேரத்தை குறிக்கிறோம். எனவே, குழந்தை பிறந்த ஊரின் நேரத்தை, 82.30 கிழக்கு தீர்க்க ரேகையை பொது நேரமாகக் கொண்ட இந்தியாவின் 82.30 பாகை கொண்ட ஊர்கட்கு, 1பாகைக்கு 4 நிமிடம் வீதம் கூட்டியும், 82.30 பாகையை விட குறைவாக பாகை கொண்ட ஊர்கட்கு 1 பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் குறைக்க வேண்டும்.

    * இவ்வாறு, தீர்க்க ரேகையின் உதவியால், குழந்தை பிறந்த ஊரில் எந்த நேரத்தில் பிறந்தது என்று பிறந்த நேரத்தை அறியலாம்.

    * பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இவ்வாறு தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரமாகிறது.

    * சூரியனைச் சுற்ற 365 1 / 4நாள் ஆகிறது. இது 1ஆண்டு ஆகும். எனவே, சூரியன், பூமியை விட்டு ஒவ்வொரு நாளும் 1 பாகை விட்டு விலகுவது போல் தெரியும்.

    ReplyDelete
  13. *கொஞ்சம் கவனமாக கவனியுங்கள்..!*

    *மார்ச் 21−ம்; செப்டம்பர் 21−ம் உலகம் முழுவதும் இரவு, பகல் சமம்.*

    *மார்ச் 21ல் பூமி மேலுள்ள சென்னையில் பகல் 12−மணிக்கு சூரியன் செங்குத்தாக பிரகாசிக்கிறான். மார்ச் 22−பகல் செங்குத்தாக பட, பகல் 12−மணி நேரம் 4−நிமிடம் ஆகிறது.*

    *ஏனெனில், மார்ச் 22ஆம் தேதி பூமி தன்னைத்தானே சுற்றி, 1பாகை முன்னே வந்துவிட்டது. எனவே, சூரியன் செங்குத்தாக பட 12மணி4நிமிடம் ஆகும். மார்ச் 23−ஆம்தேதி 12மணி 8 நிமிடம் ஆகும்.

    * இவ்வாறு, ஓர் ஊரின் மேல் செங்குத்தாக பட்ட சூரியன் ஒளி மீண்டும் அவ்வூரின் மேல் செங்குத்தாக பட ஆகும் நேரம் நட்சத்திரமணி எனப்படும்.

    * ஆகவே, மார்ச் 22−ஆம் தேதி செங்குத்தாக பட, சூரியனுடைய ஒளிக்கற்றைகள் 1பாகை தள்ளி, பூமியின் மேல் படுவதால் 12மணி4நிமிடம் ஆகும். மார்ச் 23−ஆம் தேதி 12 மணி 8−நிமிடம் ஆகும்.

    ReplyDelete
  14. * இவ்வாறு மார்ச் 22−ஆம் தேதியிலிருந்து 1நாளைக்கு, கடிகார மணியைவிட 4நிமிடம் அதிகமாகீக் கொண்டு செல்வது, நட்சத்திர மணி எனப்படும்.

    *இவ்வாறு, இதை, குழந்தை பிறந்த ஊரின் மேல்படும், இம்மாற்றத்தை *ரேகாம்சம் திருத்தம்* என்கிறோம்.

    *இதன்படி கணக்கிட்டால் 1 நாளைக்கு வேறுபாடு 4 நிமிடங்கள்
    360 பாகைக்கு வேறுபாடு கணக்கிட ..

    1பாகைக்கு வேறுபாடு = 1 × 240/360= 2/3 நொடி ஆகும்.

    *எனவே, 82.30−ஐ விட அதிகமாக உள்ள ஊர்கட்கு 2/3 நொடி வீதம் கூட்ட வேண்டும். குறைவாக உள்ள ஊர்கட்கு 2/3 நொடி வீதம் குறைக்க வேண்டும்.*

    *இக்கணக்கு தங்களுக்கு எளிய கணக்காக அளித்துள்ளேன் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக.*

    * ஒருவர் பிறந்த நேரத்தை அறிய, தீர்க்க ரேகை திருத்தம், மேலும் ரேகாம்ச திருத்தம் இரண்டையும் இணைத்து, பிறந்த நேரத்தை அறிய வேண்டும்.

    இதை ஒரு எடுத்துக்காட்டோடு, அனைவரும் புரியும் வண்ணம் கூறுகிறேன்...!

    *கலைஞர் கருணாநிதி*
    பிறப்பு               =  3 / 6 / 1924
    பிறந்த ஊர்     =  தஞ்சை
    அட்சரேகை      =  10.47
    தீர்க்கரேகை    =  79 .10

    இதிலே கலைஞரின் பிறப்பு நேரம் காலை 9.27.

    இந்திய பொது ரேகை  =  82.30
    தீர்க்க ரேகை  =               =   79.10   −
                                                     −−−−−−
         வேறுபாடு                      =  3.20
                                                      −−−−−−

    பிறப்பு 82.30ஐ விட குறைவாக இருப்பதால் 1 பாகைக்கு 4நிமிடங்கள் வீதம் கழிக்க வேண்டும்.

    1 பாகைக்கு  வேறுபாடு  =  4 நிமி.
    3. பாகைக்கு வேறுபாடு = 4×3 =12 நிமி.

    1 பாகைக்கு  4 × 60  =  240 நொடி

    240 நொடி  = 1 பாகை அல்லது 60 நிமி

    20 × 240
    −−−−−−−
      60    =  80 நொடி அல்லது 1.20 நொடி.

    3 பாகைக்கு வேறுபாடு  =  12
    20 நொடிக்கு வேறுபாடு  =  1.20 
    12 + 1.20  =  13. 20.

    *ரேகாம்ச திருத்தம் :*

    82.30 பாகை விட குறைவாக உள்ள 79.10 ல் கலைஞர் பிறந்துள்ளதால் 1 பாகைக்கு 2/3 நொடி வீதம் கழிக்க வேண்டும்.

    ReplyDelete
  15. 1   =  2 / 3 நொடி

    79 . 10 பாகைக்கு  79 × 2
                                      −−−−−−− =
                                              3

    79  ×  2  =  158 / 3  =  53

    அதாவது தஞ்சைக்கு ரேகாம்ச திருத்தம் 53 நொடி.

    எனவே...

    *தீர்க்க ரேகை
    திருத்தம்  =  13 . 20
    ரேகாம்ச திருத்தம்                 53
                                                      −−−−−−−
                                                       14 .  13
                                                    −−−−−−−


    அவரது பிறந்த நேரத்திலிருந்து  14 நிமிடம் 13 நொடி ஐக் கழித்தால் அதுவே கலைஞர் பிறந்த நேரம் ஆகும்.


    அவர் பிறந்த இந்திய பொதுநேரம் : காலை 9.15.0
    கழிக்க வேண்டியது           14. 13

    ஃ கலைஞர் தஞ்சையில் பிறந்த நேரம் = 9 . 15.0  −  14. 13  =  9.0.4

    இதற்கான  லக்னம்  =  கடகம்.


    *இவ்வாறு லக்னங்களை பல முறைகளில் அறியலாம். அந்த நேரத்திற்குறிய லக்கனத்தை ... உடனடி முறை, கடிகார மணி முறை, வாக்கிய பஞ்சாங்க முறை, திருக்கணித பஞ்சாங்க முறை, நட்சத்திர மணி முறை என 5−முறைகளில் லக்னத்தை அறியலாம்.

    *முக்கியமாக கவனிக்க வேண்டியது....!*

    * 82.30 பாகைக்கு அதிகமாகி உள்ள ஊர்கட்கு நிமிடங்கள், விநாடிகளைக் கூட்டியும், குறைவாக உள்ள ஊர்கட்கு கழித்தும் பிறந்த நேரத்தை அறிய வேண்டும்.

    இச் ஜாதகப் பதிவின் நோக்கம், நமது குழந்தைகளின் ஜாதகத்தை கணிக்க பிறரை நாடாமல், நாமாகவே கணித்துக் கொள்வதற்காகவே, இப்பதிவை அடியேன் விரும்பி அளிக்கிறேன்.  

    இன்று *லக்னம்* பற்றி பார்த்துள்ளோம் .     

    இப்போதெல்லாம் உடனடி முறை தான் பெரிதும் உதவியாக இருக்கிறது. காரணம்.. இந்திய பொது நேரத்திலிருந்து கழிக்க வேண்டியது, அட்ச ரேகை, தீர்க்க ரேகை யாவுமே..அட்டவணை பார்த்தே அறிந்து கொள்ளலாம். ஆனால், அச்சுப் பிழை இருக்கலாமல்லவா ? ஆகவே, இவ்வாறு கணிக்கும் முறையை அளித்துள்ளேன்.   

    தங்களின் பிறந்த ஊர், மாவட்டம் தெரிவித்தால், தங்களது ஜாதகத்தை தாமே பார்த்து கற்றுக் கொள்ள, அட்ச ரேகை, தீர்க்க ரேகை கழிக்க வேண்டியவை அடியேன் அளிக்கிறேன். அவரவராகவே, தங்களது ஜாதகத்தை முயற்சி செய்து கற்றுக்  கொள்ளலாம்.    

    *இது தங்களுக்கு ஒரு செய்முறை பயிற்சி அவ்வளவே..*   
    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  16. Fri. 02, Feb. 2024 at 9.27 am.

    *சகுனம் :*

    *இன்று சகுனம் பற்றி பார்க்கலாம்..!*

    *சகுனம் பார்த்து செயல்படுபவர்களுக்கான பதிவு இது.*

    *சகுனங்கள் : ஆந்தை, கழுகு, உடும்பு, கருடன், கீரி, வலியன், குரங்கு, கட்டுக்காடை இவை வலமிருந்து இடமாக போக வேண்டும்.*

    *காக்கை, ஓணான், செண்பகம்(செம்போத்து) , நாரை, மயில், புலி, நரி, கோழி, கொக்கு, கிளி, மான் இவைகள் இடமிருந்து வலமாக போக வேண்டும்.*

    *பாம்பு, பூனை, முயல் குறுக்கிடலாகாது.*

    *சர்வ சகுன பலன் :*

    *பசுக்கூட்டம், பட்சிக் கூட்டம், புஷ்பம், மணக்கோலம், மங்கள வாத்தியம், பழங்கள், யானை, தாசி, தேள், பால், செந்தணல், கரும்பு, கள், கன்னிகை, குதிரை, சலவை வஸ்த்திரம், சாதம், சுமங்கலி, இரட்டை பிராமணர், சாமரை, கொடி, குடை.*

    *மூஞ்சுரியின் சத்தம் (எலி வகை), வேத ஓசை, கழுதை, குதிரை கனைத்தல், நாய் உதறல், ஆந்தைகிளை கூட்டல் உத்தமம்.*


    *சர்வ சகுன பலனில் ஆந்தை கதறல்..*

    *பாடலை நன்கு உற்று நோக்குங்கள்..!*

    *ஓருரை யுரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.*

    *ஈருரை யுரைக்குமாகில் எண்ணிய கருமம் நன்றாகும்.*

    *மூவுரை யுரைக்குமாகில் மோகமா மங்கை சேர்வாள்.*

    *நாலுரை யுரைக்குமாகில் நாழியிற் கலகஞ் சொல்லும்.*

    *ஐந்துரை யுரைக்குமாகில் அங்கொரு பயணம் சொல்லும்.*

    *ஆருரை உரைக்குமாகில், அடுத்தவர் வரவு சொல்லும்.*

    *ஏழுரை உரைக்குமாகில் சிறந்த பண்டங்கள் போகும்.*

    *எட்டுரை உரைக்குமாகில் திட்டெனச் சாவு சொல்லும்.*

    *ஒன்பது பத்துமாகில் உத்தமம். மிகவும் நன்றே.*

    *அசுப சகுனங்கள் அடுத்த பதிவில்.*
    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete