Wednesday, 24 July 2013

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?

1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2. கணப் பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)

பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.

பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

7. ராசி அதிபதி

கிரகம் நட்பு சமம் பகை

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்

ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை

இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

8. வசியப் பொருத்தம்

பெண் ராசி பையன் ராசி

மேஷம் சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்

- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜீ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்

10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்

11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இல்லாதது

கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது

அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.

பத்துப் பொருத்தம் பார்க்க ஒரு இணையதளம்

சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர். சோதிடர்கள் இல்லாமலே, தாங்களே மணமகள், மணமகன் ஆகியோரின் நட்சத்திரம், ராசி ஆகியவைகளைக் கொண்டு பத்துப் பொருத்தங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://www.10porutham.com/


திருமண பொருத்தம் தமிழில்
Astrology Horoscope Marriage Matching for Groom (Male, Boy) and Bride (Girl, Female) by Star
திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு

வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2 பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8 திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10 புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11 பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13 மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14 பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15 உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17 அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20 சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22 விசாகம் 4 ம் பாதம் சதயம்
23 அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24 கேட்டை திருவோணம், அனுஷம்
25 மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26 பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27 உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29 திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32 சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35 உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36 ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு


வ.எண் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி -பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2 பரணி -புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் -சதயம்
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் -சதயம்
5 ரோகிணி -மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் -உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் -திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8 திருவாதிரை -பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் -அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10 புனர்பூசம் 4 ம் பாதம் -பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11 பூசம் -ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12 ஆயில்யம் -சித்திரை, அவிட்டம் 1, 2
13 மகம் -சதயம்
14 பூரம் -உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15 உத்திரம் 1 ம் பாதம் -சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் -அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17 அஸ்தம் -பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் -கார்த்திகை 2, 3, 4, மகம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் -கார்த்திகை 1, மகம்
20 சுவாதி -பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் -அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22 விசாகம் 4 ம் பாதம் -அவிட்டம், சதயம், சித்திரை
23 அனுஷம் -கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24 கேட்டை -கார்த்திகை 2, 3, 4
25 மூலம் -உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26 பூராடம் -பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27 உத்திராடம் 1 ம் பாதம் -உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் -உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29 திருவோணம் -அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் -கார்த்திகை 1, மூலம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் -கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32 சதயம் -சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் -மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35 உத்திரட்டாதி -ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36 ரேவதி -மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

_______________________________________________________________________________________________________________________________________

திருமண நட்சத்திரப் பொருத்தம்
திருமண நட்சத்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள் பொருத்தம்


அஸ்வினி (மேஷராசி)
உத்தமம் பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்).


பரணி ((மேஷராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதி.
மத்திமம் சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்).


கார்த்திகை (1வது,பாதம்) (மேஷராசி)
உத்தமம் அஸ்வினி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதி.


கார்த்திகை (2,3,4வது பாதம்) (ரிஷப ராசி)
உத்தமம் அஸ்வினி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - அவிட்டம் - கேட்டை - அஸ்தம் - பூரம் - ரோகிணி.


ரோகிணி (ரிஷப ராசி)
உத்தமம் பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம் - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வினி.


மிருகசீரிஷம் (1 & 2வது பாதம்) (ரிஷப ராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம்.


மிருகசீரிஷம் (3 & 4வது பாதம்) (மிதுன ராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணி.


திருவாதிரை (மிதுன ராசி)
உத்தமம் பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் - உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வினி.


புனர்பூசம் (1,2,3வது பாதம்) (மிதுன ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணி.


புனர்பூசம் (4வது பாதம்) (கடக ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம் - உத்திரட்டாதி - சதயம்.
மத்திமம் ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணி.


பூசம் (கடக ராசி)
உத்தமம் ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி - ரேவதி சதயம்.
மத்திமம் அஸ்வினி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம்.


ஆயில்யம் (கடக ராசி)
உத்தமம் கார்த்திகை - மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதி.
மத்திமம் பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம்.


மகம் (சிம்ம ராசி)
உத்தமம் பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதி.


பூரம் (சிம்ம ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை 3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்) - அவிட்டம் – பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம்.


உத்திரம் (1வது பாதம்) (சிம்ம ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம்.


உத்திரம் (2,3&4 பாதம்) (கன்னி ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம்.


அஸ்தம் (கன்னி ராசி)
உத்தமம் பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&;2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதி.


சித்திரை (1&2வது பாதம்) (கன்னி ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம்.
மத்திமம் ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணி.


சித்திரை (3&4வது பாதம்) (துலாம் ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம்.
மத்திமம் ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் – புனர்பூசம் – பரணி.


சுவாதி (துலாம் ராசி)
உத்தமம் பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்).


விசாகம் (1,2,3வது பாதம்) (துலாம் ராசி)
உத்தமம் அஸ்வினி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்).
மத்திமம் ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம்.


விசாகம் (4வது பாதம்) (விருச்சிக ராசி)
உத்தமம் அஸ்வினி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம்.
மத்திமம் கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி - ஆயில்யம் - ரேவதி.


அனுஷம் (விருச்சிக ராசி)
உத்தமம் ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம் - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்).
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வினி.


கேட்டை (விருச்சிக ராசி)
உத்தமம் கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம்.
மத்திமம் உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணி.


மூலம் (தனுசு ராசி)
உத்தமம் திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம்.


பூராடம் (தனுசு ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) - மகம் – உத்திரம் – சித்திரை - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது – பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) - அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம்.


உத்திராடம் (1வது,பாதம்) (தனுசு ராசி)
உத்தமம் திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் அஸ்வினி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதி.


உத்திராடம் (2,3,4வது பாதம்) (மகர ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதி.


திருவோணம் (மகர ராசி)
உத்தமம் பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் – கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதி.


அவிட்டம் (1&2வது பாதம்) (மகர ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம்.


அவிட்டம் (3&4வது,பாதம்) (கும்ப ராசி)
உத்தமம் கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம்.
மத்திமம் பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வினி - உத்திரட்டாதி.

சதயம் (கும்ப ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம்.
மத்திமம் ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வினி.


பூரட்டாதி (1,2,3வது பாதம்) (கும்ப ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம் - மூலம் – அவிட்டம் - சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம்.


பூரட்டாதி (4வது, பாதம்) (மீன ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம் - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதி.


உத்திரட்டாதி (மீன ராசி)
உத்தமம் கிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் விட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்).


ரேவதி (மீன ராசி)
உத்தமம் ர்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி.
மத்திமம் சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்) - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்).

-------------------------------------------------------

விவாஹப் பொருத்தத்தின் முக்கிய அம்சங்கள் 
பெற்றோர்களின் பொறுப்பு.
திருமணத்திற்குரிய காலகட்டம் வந்ததும், அவரவர்களின் பெண்ணிற்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்துவைப்பது பெற்றோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு உரிய வரனைத்தேடி திருமணம் செய்ய முனைகின்றனர். தகுந்த வரன் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு ஜோசியரை அணுகி சரியான பொருத்தம் அமைந்தால் திருமணம் நடப்பதற்கு வேண்டிய அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. தகுந்த வரனை தேடி எடுப்பது எப்படி? பொருத்தம் எவ்வாறு பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொள்வோமா ?
தகுந்த வரன் தேடுவதில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை. 1. ஜாதி,மதம்,குலம்,கோத்திரம்,உட்பிரிவு,
2. வரன் இருக்கும் ஊர், பூர்வீகம், குடும்ப அந்தஸ்து
3. வயது வித்தியாசம்
4. பெண் அல்லது பையனின் படிப்புக்கு தகுந்தபடி ஜாதகம் எடுப்பது.
5. அரசாங்க வேலையா, தனியார் கம்பெனியா, நிரந்தர வேலையா ?
6. சொந்த பிஸிநெஸ் அல்லது வியாபாரமா ?
7. போதிய வருமானமும், வசதியும் இருக்கிறதா ?
8. வரனின் குணாதிசயங்களை விசாரிப்பது
9. தனது மகள் அல்லது மகனுக்கு ஏற்ற வரனா ?
10.உயரம், நிறம், அழகு. உடல் வாகு ஒத்துவருமா ?
11.நோய், நொடி ஊனம், இல்லாத வரனா ?
12.பெண் அல்லது பையனின் பிறந்த நக்ஷத்திரத்துக்கு பொருந்தக்கூடிய ஜாதகங்களை எடுப்பது.

இந்த 12 விஷயங்களையும் ஆராய்ந்து வரன்களின் ஜாதகங்கள் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஓர் நல்ல ஜோதிடரை அணுகுவது நமது பழக்கத்தில் உள்ளது.

இப்போது திருமணப் பொருத்தம் பார்ப்பதின் விபரங்களைப் பார்ப்போமா ? திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?
திருமணப்பொருத்தம் பார்ப்பது என்றால் அநேக பொருத்தங்களைப் பலவிதமாக பார்க்கலாம்.
உதாரணமாக கீழ்கண்ட பொருத்தங்களைப் ஒரு ஜோதிடரிடம் சென்று பார்க்கலாம்.
1. ஆண்,பெண் ஜாதகங்களின் சுப, பாவ, சம நிலை ?
2. நக்ஷத்திரப் பொருத்தம்.
3. செவ்வாய் தோஷப் பொருத்தம்
4. நாக தோஷம் / காலசா;ப்ப nhதஷம்
5. லக்னப் பொருத்தம்/ லக்னாதிபதிப் பொருத்தம்;
6. ராசிப் பொருத்தம் / ராசியாதிபதிப் பொருத்தம்
7. ஆயுள் பொருத்தம் / நாடிப் பொருத்தம்
8. புத்திரபாவப் பொருத்தம்
9. கூட்டு கிரகப் பொருத்தம்
10. களத்திர தோஷம்/ ஷஷ்டாஷ்டகம் /  பஞ்சநவமம்
11. உறவுப் பொருத்தம் /  விதிவழிப் பொருத்தம்
12. தசா சந்திப்பு
இவ்வாறு பலவித பொருத்தங்களை தனித்தனியாகப் பார்க்கலாம்.

திருமணப் பொருத்தத்தை கீழ்கண்ட முறையிலும் பார்க்கலாம்.
1. நக்ஷத்திரப் பொருத்தம்
2. செவ்வாய் தோஷம்
3. தசா சந்திப்பு
4. பாவ சாம்யம் (தோஷ சாம்யம்)

இந்த 4 வகை பொருத்தங்களும் கட்டாயம் பார்க்கவேண்டும். இவை திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விவாகம் செய்யலாம். இந்த 4ல் ஏதாவது ஒன்று சரியாக பொருந்தாது போனால் திருமணம் செய்யக் கூடாது, மேலும் இந்த முறையில் துல்லியமாகவும், சீக்கிரமாகவும், குறைந்த செலவிலும் முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.

திருமணப்பொருத்தம் பார்ப்பதில் உள்ள விபரங்கள் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.
ஆகையால் நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், தசாசந்திப்பு, பாவசாம்யம் (தோஷசாம்யம்), நாகதோஷம் /  காலசர்ப்ப தோஷம் இவைகளைப்பற்றி விவாஹசங்கமம் இணையதயத்தில் தமிழில் வெளியிட்டுள்ளோம்.

விவாஹப் பொருத்தமும் பாபசாம்யமும் பாபசாம்யம் என்றால் என்ன ? பாபசாம்யம் என்பது ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷம் எந்த அளவில் உள்ளது என்பதை அதற்கான கணக்குகளைப் போட்டு முடிவு செய்ய ஜோதிட சாஸ்திரத்தல் சொல்லப் பட்டுள்ள ஒரு வழி. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண்,பெண் ஜாதகங்களில் உள்ள தோஷங்களை துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்யலாமா கூடாதா என்று தீர்மானம் செய்ய உதவும் ஓர் முக்கியமான அம்சம். இதனை தோஷசாம்யம் என்றும் சொல்வதுண்டு. பாபசாம்யதின் விளக்கம் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன், கெடுதல் செய்யக்கூடிய கிரகங்கள். இந்த ஐவரும் ராசி சக்கரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் இருக்கும் வீடுகளிலிருந்து, 1-2-4-7-8-12 வது இடங்களில் காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு தோஷங்கள் ஏற்படக்கூடும். இந்த 5 கிரகங்களும் 1-2-4-7-8-12 வது இடங்களில், உச்சமா, நீசமா, நட்பா, பகையா, ஆட்சியா, சமமா என்ற நிலையை பொருத்து தோஷங்களின் வலிமை இருக்கும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் கொடுக்கும் தோஷங்கள், யாருக்கு அதிகம், பெண்ணிற்கா, பிள்ளைக்கா என்று பார்க்கும் போது, பெண்ணின் தோஷம் அதிகமாக இருந்தால் பாபசாம்யம் திருப்திகரமாக இல்லை என்று முடிவு செய்யப்படும். ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாக காணப்பட்டால், திருமணப் பொருத்தம் சிபாரிசு செய்யப்படும்.
  பாபசாம்யத்தை ஒரு உதாரணம் மூலம் விளக்கமுடியுமா ?
கண்டிப்பாக விளக்கம் தர முடியும். பாபசாம்யம் கணக்கிட 5 முறைகள் உள்ளன.
1. Equal Points Equal Weightage Method. ( சம புள்ளி - சம மதிப்பு )
2. Equal Points unqual Weightage Method  ( சம புள்ளி - வேறுபாடுடைய மதிப்பு )
3. Unqual Points Equal Weightage Method ( வேறுபாடுடைய புள்ளி - சம மதிப்பு )
4. Unequal Points Unequal Weightage method. ( புள்ளி வேறுபாடு - மதிப்பு வேறுபாடு )
5. Point System considering planetary Friendship and positional strength.

இப்போது ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
Point System considering planetary Friendship and positional strength.

 பெண் ஜாதகம் லக்னத்திலிருந்து ராசியில் கிரகங்கள் ஆண் ஜகதகம் லக்னத்திலிருந்து
தோஷம்; நிலை இடம் இடம் நிலை தோஷம்;
24 உச்சம் 12y; சனி  1 பகை 112
96 உச்சம் 7 ராகு 3 நட்பு ---
96 உச்சம் 1 கேது 9 நட்பு ---
168 பகை 8 செவ்வாய் 9 நட்பு ---
36 சமம் 8 சூரியன் 11 பகை ---
சந்திரனிலிருந்து   சந்திரனிலிருந்து
---- உச்சம் 5 சனி   3 பகை ---
12 உச்சம் 12 ராகு 5 நட்பு ---
--- உச்சம் 6 கேது 11 நட்பு ---
84 பகை 1 செவ்வாய் 11 நட்பு ---
18 சமம் 1 சூரியன் 1 பகை 28
சுக்கிரனிலிருந்து   சுக்கிரனிலிருந்து
--- உச்சம் 3 சனி 5 பகை ---
24 உச்சம் 8 ராகு 7 நட்பு 8
06 உச்சம் 4 கேது 1 நட்பு 8
--- பகை 9 செவ்வாய் 1 நட்பு 12
--- சமம் 9 சூரியன் 3 பகை ---
564 564 ஐ 128 ஆல் வகுக்க

4.4 தோஷம் பெண்ணிற்கு   168ஐ 128 ஆல் வகுத்தால்

 1.31 தோஷம் ஆணுக்கு 168
 
  இந்த முறையில் ஆணின் தோஷத்தை விட பெண்ணிற்கு தோஷம் குறைவாக இருக்க வேண்டும். அல்லது சமமாக இருக்க வேண்டும். அப்போது தான் திருமண வாழ்க்கை நலமாக அமையும். இந்த உதாரணத்தில் பெண்ணுக்கு தோஷம் அதிகமாக இருப்பதால் திருமணம் செய்யக் கூடாது.

விவாஹசங்கமம்,சென்னை,இந்தியா
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராடம்                                   15th March 2009 பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள். ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது.
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
 
1. ஆயில்ய நக்ஷத்திரம்
ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம் சந்திரனின் ஆட்சி வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். மாமியார் மணமகனின் தாய். ஆகவே தாயின் காரகரால் தாயாருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயின் காரகர் தன் தாயாரைக் கொல்ல மாட்டார்.
ஆயில்யத்தின் அதிபதி புதன். ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 10ம் வீடு மாமியார் வீடு. இந்த வீட்டில் புதபகவான் செவ்வாய் அல்லது ராகு கேதுவுடன் சேர்ந்து நின்றாலோ, அல்லது 4 ம் வீட்டில் இவ்வாறு காணப் பட்டாலோ மாமியாருக்கு கெடுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று சுக்கிரனின் சாரம் பெற்று இருந்தால் மாமியாருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

ஆயில்ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.


2. மூலம் நக்ஷத்திரம்.
ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு.

ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும், சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன.
இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது ஆண்மூலம் ஆகியது)

மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது  எதிரிகளையும் நிர்மூலம் செய்து வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம் எனப்படும். எனவே (பின் மூலம் என்பது பெண் மூலம் ஆகியது)

சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே மேற்படி விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் யாருக்காவது ஆபத்து வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது.
லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும் 4 வது 9 வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம். மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும், ஆண்களும் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும், திருப்பதி அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை அருகேயுள்ள கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம் செய்துவருவது நன்மை தரும்.

மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை
உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

கேட்டை நக்ஷத்திரம்
கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ராசி சக்கரத்தில் 5ம் இடத்தில் பாபிகள் இருந்தால் மூத்த மைத்துனருக்கு கெடுதல் ஏற்படலாம். கேட்டையின் அதிபதி புதன். இவருடன் 5ம் வீட்டில், ராகு,கேது,குரு,செவ்வாய், தொடர்பு காணப்பட்டால், மூத்தமைத்துனருக்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம். மற்றபடி எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை.

ஆகையால் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறநத பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், மேற்கண்டவாறு தோஷம் உள்ளதா? மூத்தமைத்துனருக்கு துன்பம் வருமா? என உங்கள் ஜோதிடரை அணுகி முடிவு செய்யவும். சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

விசாகம் நக்ஷத்திரம்.
 
விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப் படுகிறது. ராசி சக்கரத்தில் 9ம் இடத்தைப் பார்த்து இளைய மைத்துனருக்கு இன்னல் வருமா என்று தெரிந்து கொள்ளலாம். 9ம் வீட்டில் ராகு,கேது,செவ்வாய் நின்றால் இளைய மைத்துனருக்கு ஆயுள் குறைவை ஏற்படுத்தலாம்.
விசாகத்தின் அதிபதி குருபகவான். குருவுடன், புதன் சேர்ந்து காணப்பட்டாலோ அல்லது குரு கெட்டு இருந்தாலோ இளைய மைத்துனருக்கு சில இன்னல்கள் ஏற்படலாம். ஆனால் குருபகவான் வலுவாக இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களிடம் வரும் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில் இவ்வாறு உள்ளதா என்று ஜாதகத்தை ஓர் நல்ல ஜோதிடர்டம்  பரிசீலித்து முடிவு செய்யுங்கள். விசாகம் என்ற உடனே ஒதுக்காதீர்கள். சுத்த ஜாதகங்களானால் பாதிப்பு இருக்காது.

பூராடம் நக்ஷத்திரம்   ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் நக்ஷ்ததிரங்களுக்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் போல் பூராடம் நூலாடாது என்பதற்கு ஜோதிடத்தில் ஆதாரம் எதுவும் தென்படவில்லை. ஆகையால் பூராடம் நூலாடாது என்பது பழக்கத்தில் ஏற்பட்டதாக கொள்ளலாம். பூராடம் நூலாடாது என்றால் தாலி நிலைக்குமா என்று பயப்படுகிறோம். ஆனால் பூராடம் நூலாடாது என்றால் திருமாங்கல்யம் ஆடிப்போகாமல் நிலைத்து நிற்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆண் பெண் இருவருக்கும் ஆயுள் பாவம் பலமாக இருந்தால் எந்தவித பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.

பூராடம் நக்ஷத்திரஙகளின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவருடைய ஆயுள் பாவங்கள் நன்றாக இருக்கின்றனவா என உங்கள் ஜோதிடர் மூலம் தெரிந்துகொண்டு முடிவு செய்யவும்.
   
இந்த கட்டுரை சில ஜோதிட நூல்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டது. இதன் நோக்கம் ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம், பூராடம் நக்ஷத்திரத்தில் பிறநத ஆண் பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், ஓர் நல்ல ஜோதிடரிடம் காண்பித்து முடிவு செய்யலாம் என்பதே.
தோஷமுள்ள ஜாதகர்கள் பரிகாரம் செயது கொள்வது நலம். சுத்தமான ஜாதகங்களானாலும் எப்போதும் போல திருமணப்பொருத்தம் பார்த்த பிறகுதான் சேர்க்க வேண்டும்.

____________________________________________________________________________________
உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரம் என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதி
7 ஆம் பாவத்தின் நட்சத்திராதிபதி
7 ஆம் அதிபதி, 7 ஆம் பாவம் இவைகள பார்க்கும் கிரகங்களின் நட்சத்திராதிபதி.
இதுவே உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரமாக அமையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு வரப்போகும் மனைவியின் இராசி என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
1. ஜாதகரின் இராசி, நவாம்ச இராசி அல்ல அதற்கு 5 - 9 வது இராசி
2. ஜாதகரின் லக்கணம், நவாம்ச லக்கணம் அல்ல அதற்கு 5 - 9 வது இராசி
3. ஜாதகரின் இராசி, லக்கணத்திற்கு 7 வது இராசி அல்ல 7 - வது இராசிக்கு 5 - 9 வது இராசி
4. லக்கணாதிபதியின் பாகையையும், சுக்கிரனின் பாகையையும் கூட்டி வரும் இராசி அல்லது லக்கணாதிபதி, 7 ஆம் அதிபதி இருவரின் பாகையை கூட்டிவரும் இராசியே மனைவி (அ) கணவரின் இராசியாகும்.
--------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு வரப்போகும் மனைவியின் திசை என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
7 ஆம் அதிபதி, சுக்கிரன் இருவரின் பாகையைக் கூட்டி வரும் ராசிக்குரிய நவாம்சம் சரமானால் - அதிக தூரத்திலும்,
ஸ்திரமானால் - அருகிலும் (20.கி.மீ)
உபயமானால் - 50 கி.மீக்குள்ளும், அமைவார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம்:
திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.
"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.
பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.
ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

பிள்ளையார் வழிபாடு:
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

முகூர்த்தக்கால் நடுதல்:
முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.

மஞ்சள், மருதாணியின் சிறப்பு:
1. குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2. மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3. மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4. கை, கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.
அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
கணவன், கொழுநன்:
கண் அவன். பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்திச் செல்லும் கண்ணைப் போல் பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.
கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:
மனைவி, துணைவி, இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

கொழுந்தனார்:
கொழுநன் அன்னார்= கொழுந்தனார். கொழுந்தனார் கணவனின் தம்பியைக் குறிப்பது. உன் கண்ணைப்போல் இக்குடும்பத்தில் உரிமை உடையவன் என்பதாகும்.

விளக்கு வகைகள்:
1. வெண்கல விளக்கு ஏற்றினால்- பாபம் போகும்.
2. இரும்பு விளக்கு ஏற்றினால்- அபமிருத்யுவைப் போக்கும்.
3. மண்விளக்கு ஏற்றினால்- வீரிய விருத்தியை அளிக்கும்.

குறிப்பு: மண்ணால் செய்யப்பட்ட அகல் அல்லது வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆன விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்ததாகும். பஞ்சலோகமானது தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு ஆகும். ஐம்பொன் என்றும் சொல்வதுண்டு.

தீபங்களும் திசைகளும்:
1. கிழக்குத்திசை: கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும்.
2. மேற்குத்திசை: மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
3. வடக்குத் திசை: வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
4. தெற்குத்திசை: தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது!

முகங்களுக்குரிய பலன்கள்:
1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன்.
2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும்.
3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும்.
4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும்.
5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.
குறிப்பு: விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.

தீப வழிபாடு:
அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

புரோகிதர், புரோகிதம்:
புரோகிதர் என்றால் முன் நின்று நன்மையைச் செய்கின்றவர் என்று அர்த்தம். புரோ= முன், கிதம்= நன்மை.

ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள்:
தங்கம், வெள்ளி நகைகள் அணிவதால் உடல் நலம் சிறக்கும். தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும். வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.

ஆலத்தி எடுத்தல்:
* மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.
* மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.
* மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:
1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.
____________________________________________________________________________________


_____________________________________________________________
பணீரெண்டாம் பொருத்தம்


பத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா...
ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின் பின் பாதி அவர்களது மகப்பேறுகளால் காப்பாற்றப்படும் சூழ்நிலைகள் உருவாகி மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி எல்லோருடைய திருமணங்களும் அவர்கள் விருப்படியே நடந்து விடுகின்றனவா என்றால் ‘இல்லை’ என்றே கூற வேண்டியுள்ளது.
ஒருவரது திருமணம் நிச்சியிக்கப்படும்போது ஆண் பெண் இருவர் ஜாதக ரீதியாகவும் திருமண பொருத்த விஷயத்தில் நான்கு இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகின்றது. களத்திரஸ்தானம் எனப்படும் 7ம் இடம், ஆயுள்ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும்.
8ம் இடம், புத்திரஸ்தானம் எனப்படும் 5ம் இடம் மற்றும் குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடம். பொதுவாக எல்லா ஜோதிடர்களும் இந்த நான்கு ஸ்தானங்களுக்கு மிகவும் முக்யத்துவம் கொடுத்து ஜாதகப் பொருத்தங்களைப் பார்த்து தோஷ சாம்யங்களை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கின்றார்கள்.
பெரும்பாலான ஜாதகர்கள் நல்வாழ்க்கைத் தொடங்கினாலும் சிலரின் அன்னோன்யம், மகிழ்ச்சி இன்மை அவர்களது குடுமப வாழ்க்கையை நரகமாகவும் ஆக்கிவிடுகின்றது.
மேற்சொன்ன நான்கு இடங்களின் பொருத்தம் இருப்பதைத் தவிர மிகவும் முக்யமாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தானம் 12ம் இடம்.
இந்த இடம் ஸயனஸ்தானம்,மோஷ ஸ்தானம், விரயஸ்தானம் என்று பலவாறாகவும் கூறப்படுகின்றது.பொதுவாக களத்திர அன்னோன்யம் என்பதே
ஸயன அன்னோன்யத்தில் அடிப்படையில் அமைந்த ஒன்று என்றே கூறலாம். ஸயன அன்னோன்யம் இல்லாத தம்பதியர்களிடம் களத்திர அன்னோன்யத்தை எதிர்பார்க்க இயலுமா என்பதை பெரும்பாலான ஜோதிடர்கள் கருத்தில் கொள்வதில்லை. சொல்லப்போனால் திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சயன அன்னோன்ய பாவமான 12ம் இடமே. சயனஸ்தானம் சரியில்லாதவர்களுக்கு களத்திர அன்னோன்யம் இருக்காது. களத்திர அன்னோன்யம் இல்லாத போது புத்திர சௌக்யமும் (5ம் பாவம்) சரியாக இருக்காது. புத்திர ஸ்தானம் இல்லாத போது குடும்பம் (2ம் பாவம்) எப்படி உருவாகும் எனவே இனிமையான இல்லற வாழ்க்கை அமைய சயனஸ்தானம் சரியாக இருந்தால்தான் மற்ற பாவங்களின் பலங்களும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.எனவே 2,5,7,8 ம் இடங்களில் தோஷ சாம்யம் இருந்தாலும் 12ம் இடத்தின் பொருத்த விஷயம் இருவர் ஜாதக ரீதியாகவும் சரியாக இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி இன்றியே தான் இருக்கும்.
ஆக அன்னோன்யமான.. தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்க இதன் அடிப்படையான ஸயன பாவத்தை (12ம் இடம்) ஆராயாமல் மற்ற பாவங்களைப் பார்த்து முடிவு செய்யும் ஜோதிட அன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது என்று புரிந்துகொண்டால் சரி..
களத்திர அன்னோன்யத்தை எந்த எந்த கிரகங்கள் முக்கியமாக பாதிக்கின்றன என்று பார்க்கலாம்.
12ம் இடமான சயனஸ்தானத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி, ராகு, கேது இருப்பது.
சயனஸ்தானத்துக்கு மேற்சொன்ன பாபிகளீன் பார்வை இருப்பது.
களத்திர ஸ்தானம் என்ப்படுன் 7ம் இடத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி இருக்கும் நிலை.
7ம் இடத்துக்கு செவ்வாய், சூரியன் சனி பார்வை இருக்கும் நிலை.
8ம் இடத்தில் பெண்ணுக்கு செவ்வாய்,ராகு இருக்கும் நிலை.
பூர்வ புன்ய ஸ்தானாதிபதி (5க்குடைய கிரகம்) களத்திரஸ்தானம் (7ம் இடம்) அடையும் நிலை. இதே போல் 7க்குடைய கிரகம் 5ம் இடம் அடையும் நிலை.
குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது இருக்கும் நிலை.
இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு அன்னோன்யமான வாழ்க்கை பொதுவாக இருப்பதில்லை என்றாலும் இதே போன்ற கிரக நிலை இருவர் ஜாதக ரீதியாகவும் அமைந்துவிட்டால் அன்னோன்யமான தாம்பத்திய வாழ்க்கை நிச்சியம் இருக்கும் என்பது உண்மை. “தோஷ சாம்யாத் தம்பதி பாக்யவான்” என்ற ஜோதிட சாஸ்திர வாக்யத்தின் படி தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் தோஷங்களை ஏற்படுத்தும் கிரக நிலைகள் ஒத்துப்போனால் அந்த தம்பதிகள் இணைபிரியாத தம்பதிகளாகவே என்றும் இருப்பர்கள் என்பதும் உண்மை.சகல நன்மைகளையும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
அருகில் இருந்த என் நண்பர் சொன்னார், எனக்கு இந்த கவலை எல்லாம் இல்லை...
ஏன்... என்றேன். எனக்குதான் திருமணமே ஆகவில்லையே... என்றார். அதற்கும் இந்த 12ம் பாவம் தான் காரணம். என்றேன். எப்படி சொல்கின்றீர்கள்... என்னுடைய ஜாதகம் சுத்தமான தோஷமே இல்லாத ஜாதகம் என்று அல்லவா நினைத்துக் கொண்டும் இருக்கின்றேன். என்றார்.
12ம் இடத்தில் உமது ஜாதகத்தில் கேது பகவான் இருக்கின்றார். சன்பாயோகம் உடைய நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா...
இந்த கருத்துகள் அவரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த தொடங்கியதை பார்த்த அடியேனது மனம் சற்று கனக்கத்தான் செய்தது. 

No comments:

Post a Comment