Monday, 22 July 2013

ராகு

ராகு

ராகு 8 இல் இருந்தால் அப்பாவுக்கு
      3 இல் இருந்தால் அம்மாவுக்கு
      6 இல்  இருந்தால் மனைவிக்கு
     12 இல் இருந்தால் தனக்கு
வாழ்க்கையில் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு  வாய்ப்பு

ராகு நான்கில் இருந்தால்
சொந்த ஊரில் தங்காமல்
பல ஊர்களை சுற்றித் திரிவர்.
முறையான வருமானமும்
இருக்காது.

லக்னத்தில் சூரியன் அல்லது
லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்

ராகு பத்து அல்லது பதினொன்றில்
இருந்து சூரியனும் செவ்வாயும்
பலம் பெற்று இருந்தால் அந்த
ஜாதகர் அரசியலில் ஈடுபடுவார்

லக்னத்திற்க்கு நான்கில் ராகு
இருந்து நான்காம் அதிபதியை
சுப கிரகம் பார்த்தால் சொந்தமாக
வீடு வாங்கி விற்றுவிடும்
அமைப்பாகும்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு
ராகு கேது தோஷம் உள்ளவர்களை
திருமணம் செய்விக்க்க்கூடாது.
அப்படிச் செய்தால் அந்த ஜோடிகள்
என்றென்றும் நிம்மதி இல்லாது தவிப்பர்

ராகு/கேது திசையில்
புதன் புக்தி
அல்லது
புதன் திசையில்
ராகு/கேது புக்தி
வரும் போது
வேத ரகசியங்களை
வேத நுண்கலைகளை
படிக்க ஆர்வம் ஏற்படும்.



லக்னத்தில் செவ்வாய் மற்றும்
ஐந்து அல்லது ஒன்பதில்
குரு பார்க்காத ராகு இருப்பின்
அந்த ஜாதகிக்கு மாதவிடாய்
பிரச்சனை உண்டு (குறிப்பாக
அதிக ரத்த சேதம்)

லக்னத்தில் ராகு
நான்கில் சுக்ரன்
ஐந்தில் சந்திரன்
இந்த அமைப்பு உள்ளவர்கள்
வாழ்க்கையை அனுபவிக்க
பிறந்தவர்கள்.

சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால்
அவர்களது தசா புக்தியில் ஜாதகரை
அம்மாவை விட்டு தூரத்தே பிரித்துவிடும்.


ராகுவிற்கு ஐந்தில்
சனி இருந்தால்
ராகு திசை சனி
புக்தி கடுமையான
பாதிப்பை தரும்

லக்னத்திற்க்கு ஆறில்
ராகு இருந்தால்
அந்த ஜாதகருக்கு
விஷ பயம் இல்லை.


லக்னத்தில் ராகு இருந்தால் நீண்ட முடி மற்றும் வாசனை
பொருட்களின் மீது ஆர்வம்.

ராகு கிரகமானது சூரியன் அல்லது சுக்ரன்
சேர்க்கை பெற்றால் இந்திரிய பலம் குறைவு.
திருமண பயம் உண்டு


மூன்றில் ராகு இருந்தாலும் அல்லது 
மூன்றாவது வீட்டு அதிபதி ராகு 
சாரம் பெற்றாலும் இளைய சகோதரன்/
சகோதரி பயன்படமாட்டார். 

செவ்வாய் மற்றும் ராகு மூன்று - ஆறு - பத்து - 
பதினொன்றில் இருந்தால் விளையாட்டில் 
பிரபலம் அடைவார். 

மூன்றில் ராகு  இருந்தால் வெற்றி வீரர் 
ஆனால் அனுபவ பாக்கியங்கள் குறைவு



No comments:

Post a Comment