Thursday, 8 August 2013

திருமணத்திற்கு உகந்த நாட்கள்

திருமணத்திற்கு உகந்த நாட்கள்




திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான காரியம் ஆகும். ஆண் பெண் இருவரும் இணைந்து தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைக்க திருமணமானது மங்களகரமான ஒரு சுப நாளில் செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் செய்ய உகந்த நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள் என உண்டு.

     பொதுவாக ரோகிணி, மிருக சீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மிகவும் உத்தமம். அசுவினி, புனர்பூசம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களிலும் திருமணம் செய்யலாம். துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி திதி நாளில் திருமணம் செய்யலாம். மேற்குரிய நட்சத்திரம், திதி இணைந்து, ஞாயிறு,  திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் திருமணம் சார்ந்த சுப காரியங்கள் செய்வது மிகவும் உத்தமம்.

     குறிப்பாக மேற்கூறிய நட்சத்திரம், திதி, கிழமை நாளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு கும்ப லக்ன நேரத்தில் முகூர்த்த லக்கினத்திற்கு 3,6,11ல் பாவிகள் இருப்பது நல்லது. 6,8ல் சுக்கிரன் புதன் இருந்தால் கெடுதி 2,3ல் சந்திரன் இருப்பதும், 7ல் யாரும் இல்லாமல் இருப்பது மிகவும் உத்தமம்.

     மேற்கூறிய விதிகள் பொதுவான விஷயம் என்றாலும் திருமணம் செய்து கொள்ளும் மண மக்களுக்கு மேற்குரியவை உகந்ததாக இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.

     குறிப்பாக திருமணம் நாள் ஆனது ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் உள்ள நட்சத்திர நாளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில நேரத்தில் ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் வராது. அதாவது ஒருவருக்கு தாரா பலன் வரும். ஒருவருக்கு தாரா பலன் வராது. இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு தாரா பலன் வருகிறதா என்று பார்த்த விட்டு இருவருக்கு ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்த நட்சத்திரமானது 7வது நட்சத்திரமாக இருக்க கூடாது. தாரா பலன் என்பது ஆண் பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் 2,4,6,8,9,11,13,14,17,18,20,22,24,26,27 நட்சத்திர நாளாகும். இது மட்டும் இன்றி, இருவருக்கும் சந்திராஷ்டம் நாளாக முகூர்த்த நாள் இருக்க கூடாது.

No comments:

Post a Comment