Thursday 8 August 2013

நல்ல நேரம்.........

நேரம் நல்லா இருக்கோணும்




     நமது இந்திய மரபுப்படி நாம் எந்த ஒரு செயலை செய்வது என்றாலும் நாள் கிழமை நட்சத்திரம் திதி இவற்றை பார்த்தே முடிவு செய்கிறோம். எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் கண்டிப்பாக பார்க்கிறோம். இவற்றிற்கு இடையே கடவுளின் அருளும் நமக்கு வேண்டும் என எண்ணுகிறோம்.
கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய, சாந்த முகூர்த்தம் செய்ய, இது போன்ற பலவிதமானவைகளுக்கும் நாம் நாள் நட்சத்திரம் பார்ப்போம். இதிலும் யோகம் கரி நாளை பார்ப்போம். மரண யோகத்திலும் கரி நாளிலும் எதுவும் செய்வதில்லை என நமது முன்னோர் தீர்மானித்துள்ளனர்கள். அவை எந்த நட்சத்திரங்களில் கடை பிடிக்க வேண்டும் என காண்போம்.

அசுவினி ;  சுப நாள் பூ முடித்தல் கல்வியை ஆரம்பிக்க வீட்டை கட்ட ஆரம்பிக்க ஆரம்பிக்க சிறப்பு.
பரணி ; வைத்தியம் செய்யவும் நல்லது, சுபம் செய்ய ஏற்தல்ல.
கிருத்திகை ; அடுப்பு வாங்கவும், கட்டவும் தெய்வங்களை ஆரோதனை செய்யவும் நன்று.
ரோகிணி ; சுப முகூர்த்தம் பயணங்கள் புறப்பட கிரகப் பிரவேசம் புது மனை புகுதலுக்கு நன்று.
மிருகசீரிஷம் ;  எல்லாவற்றிற்கும் உகந்தது.
திருவாதிரை ; சூளைக்கு நெருப்பு இட மந்திரங்களை ஜெபிக்க தொடங்க நல்லது.
புனர் பூசம் ; உத்தியோகத்தில் சேரவும் பந்தக்கால் நடவும் கல்வியை தொடங்கவும் நல்லது.
பூசம் ; எல்லா விதமான சுப காரியமும் செய்ய ஏற்றது.
ஆயில்யம் ; கிணறு வெட்ட போர் போட,  கிரகங்களுக்கு பரிகாரம்  சாந்தி செய்யவும் நல்லது.
மகம் ; பூஜை செய்ய ஏற்றது.
பூரம் ; மத்திமமான நாள் சுபம் செய்ய ஏற்றதல்ல.
உத்திரம் ; சீமந்தம் விதை விதைக்க ஏற்ற நாள்.
அஸ்தம் ; சுப முகூர்த்தம் செய்ய ஏற்றது.
சித்திரை ; நல்ல காரியம் செய்ய சிறப்பு.
சுவாதி ; எல்லா வித சுப காரியத்திற்கும் ஏற்றது.
விசாகம் ; நீர் சம்மந்தமானவைகள் தொடங்க ஆறு வடைக்கும் சிறந்தது.
அனுஷம் ;  சுப காரியங்களுக்கு ஏற்றது.
 கேட்டை ; ஆபரணம் செய்ய ஏற்றது.
மூலம் ; சுப காரியங்கள் செய்ய மிதமான நாள்.
பூராடம் ; நிலம் சீர்திருத்த கரும்பு நடவும் ஏற்ற தினம்.
உத்திராடம் ; நல்ல காரியங்கள் செய்ய பாதி உகந்த நாள்.
திருவோணம் ; மஞ்சள் நீராட்ட, ருது சாந்தி வீடு கட்ட ஆரம்பிக்க உகந்தது. 
அவிட்டம் ; காது குத்த, பெயர் சூட்ட, தொழில் தொடங்க ஏற்றது.
சதயம் ; கணக்குகளை முடிக்கவும், சீமந்தம் செய்ய, பூ முடிக்க நல்ல நாள்.
பூரட்டாதி ; பிரச்சனை தீர பூஜை செய்யவும், கிணறு வெட்ட போர் போட.
உத்திரட்டாதி ; செடி கொடி மரம் வைக்க ஏற்றது.
ரேவதி ; எல்லா விதமான சுப காரியம் செய்யவும் ஏற்ற நாள்.

                                   நல்ல நாட்கள்

ஞாயிறு ; சித்திரை மற்றும் உத்திராடம் இவற்றில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும்.
திங்கள் ; கேட்டை மற்றும் சதயத்தில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும்.
செவ்வாய் ; அசுவினியில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும்.
புதன் ; பூரட்டாதி மற்றும் மிருக சீரிஷத்தில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும்.
வியாழன் ; பரணி, ஆயில்யம் இவற்றில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும்.
வெள்ளி ; திருவாதிரை மற்றும் ஹஸ்தம் இவற்றில் பிறந்தவருக்கு யோகம்.
சனி ; மகம் அனுஷம் இவற்றில் பிறந்தவர்க்கு யோகம் தரும்.
     
இதில் உங்கள் நட்சத்திரத்திற்கு யோகம் தரும் தினத்தில் கிரக வழிபாட்டுடன் செயல்களில் ஈடுபட்டால் வெற்றிகள் நிச்சியம். 

No comments:

Post a Comment