Saturday 3 August 2013

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் !

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் !

ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும்,  லக்கினத்தில் அமர்ந்தால் 100  சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் .  கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார்.
இந்த  அமைப்பில் இரு  கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100  சதவிகித நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன :
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100  சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.
   ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் மிகவும் நன்மையே, இவர்களுக்கு எவ்வித தோஷமும்  ஏற்ப்பட மற்றும் செயல் பட வாய்ப்பு 100  சதவிகிதம் இல்லவே இல்லை . இது இவர்களது முன்னேற்றத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .

பல ஜோதிடர்கள் ராகு கேது லக்கினத்தில் மற்றும் களத்திர பாவங்களில் அமர்ந்து இருந்தால் போதும் அவை கெடுதல் மட்டுமே செய்யும் என்று தவறான கருத்தை மக்களிடயே புகுத்தி விடுகின்றனர் இதனால், இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள், படும் பாடு திண்டடம் ஆகிவிடுகிறது, இது மாதிரி நுனிப்புல் மேயும் ஜோதிடர்களிடம் , மாட்டிக்கொண்டு சில ஜாதகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் , 
குறிப்பாக 45  வயது ஆனாலும் திருமணம் ஆகாமல் தவிக்கிற தவிப்பு சொல்ல முடியாது, இதில் ஆண் பிள்ளையை பெற்றவர்கள்  அமைப்பு பரவாயில்லை , பெண் பிள்ளையை பெற்றவர்கள்   நிலை அந்தோ பரிதாபம் . 
என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு பெண்ணுக்கு வயது 38 அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை காரணம், எந்த ஜோதிடனோ ஒருவன் இந்த பெண்ணுக்கு கால சர்ப்ப தோஷம் மற்றும் களத்திர தோஷம் இதனால் திருமணம் 38 வயதுக்கு மேல் செய்ய்தால்தான் மாங்கல்யம் நிலைக்கும், அதற்க்கு முன் இந்த பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் நடந்தால் கணவன் விபத்தில் இறந்து விடுவான் என்று கூறியுள்ளான், இதை அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொல்லியிருந்தால் பரவாயில்லை , பெண்பார்க வந்த மணமகன் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறான் இது காட்டு தீபோல் ஊரெல்லாம் பரவி அந்த பெண்ணின் வாழ்க்கையே கெட்டு குட்டிசுவர் ஆகிவிட்டது.
உண்மையில் அந்த பெண்ணின் லக்கினம் கடகம், ராகு கேது லக்கினம் ஏழாம் வீடு முறையே மிகவும் சிறப்பாக அமர்ந்து இருந்தனர், ஜாதகத்தில் எவ்வித தோஷமும் இல்லை ,
சரி அப்படியிருக்க இந்த பெண்ணுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை, என்று பார்த்த பொழுது தான் ஜாதகத்தில் நான்காம் வீடு மற்றும் ஐந்தாம் வீடு ஆகியவை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது, நான்காம் வீடு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பெண்ணின்  தகப்பனாரே திருமண தாமதத்திற்கு காரணம் ஆகிவிடுவார்,  ஜாதகியின் தகப்பனார் வரன் பர்தறேன்றால் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை அதையும் இதையும் குறை சொல்லி, வரும் வரன்கள் அனைத்தையும் தட்டி கழித்து விடுவார், மேலும் ஐந்தாம் வீடு பாதிக்கப்பட்டால் ஜாதகி தனது பூர்விகத்தை விட்டு 100  கிலோ மீட்டர்  தள்ளி வந்து குடியிருந்திருந்தால் திருமணம் இளம் வயதில் மிகவும் சிறப்பாக நடந்திருக்கும் . என்பதை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.
சில மாதங்களுக்கு முன் அவர்கள் வெளியூர் சென்று விட்டனர், கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்று அந்த பெண்ணின் தாயார் கடிதம் மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். எல்லாம் இறை அருளின் கருணை .

No comments:

Post a Comment