Saturday, 3 August 2013

கால சர்ப்ப தோஷ நிவர்த்தி

கால சர்ப்ப தோஷ நிவர்த்தி

பெருமை மிகு கொங்கு மண்டலம்  ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு-கோபி செல்லும் வழியில்  உள்ள, தங்க மேடு என்னும் இடத்தில், கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமான தம்பிக்கலை அய்யன் கோவில், பல ஆண்டுகளாக சகல சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக அருள் பாலித்து வருகிறது.
இங்கு வரும் அனைவருக்கும்  தம்பிக்கலை அய்யன், சகல சர்ப்ப தோஷங்களையும் நிவர்த்தி செய்து, சகல ஐஸ்வர்யங்களையும் பாகுபாடு இல்லாமல் வாரி வழங்கி வருகிறார்,
சுய ஜாதகத்தில் எவ்வித ராகு கேது , சர்ப்ப தோஷ நிலையால் பதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்ல பலன் தரும் ஒரே ஸ்தலம் இதுவே ஆகும்.
மேலும் திருமண தடை உள்ளவர்கள் ராகு கால நேரத்தில் இங்கு வந்து முறை படி சர்ப்பதோஷ நிவர்த்தி செய்து கொள்பவர்களுக்கு வெகு விரைவில் திருமண வாழ்க்கை அமைந்து விடுவது நிச்சயம் .  
இங்கு வரும் தோல் சம்பந்த பட்ட அனைத்து வியாதிகள் உள்ளவர்கள் அனைவரும்,  நிவர்த்தி பெறுவது மிகவும் அதிசியமான ஒரு விஷயம் .
மனநிலை பதிக்கப்பட்ட அனைவரும் இங்கு வந்து நல்லய்யனை (கோவிலுக்குள் உலா வரும் நாகசர்ப்பம்) தரிசனம் செய்பவர்களுக்கு விரைவில் குணம் அடைவது உறுதி .

தம்பிக்கலை அய்யன்கோவிலுக்கு வந்து அணைத்து நலன்களும் சகல வளங்களும் பெற்று இறை அருளின் கருணையினால் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment