Thursday, 3 October 2013

மேசம் ராசி

மேசம் ராசி பொறுத்தவரை கேது உங்க ராசியின் தலையில் உட்கார்ந்து இருக்கார்.
.இதுதான் சிக்கலான விசயம்..
போதாததுக்கு கண்டக சனியும் நடக்குது...
கோபம்,டென்சன் எல்லாம் இப்பதான் அதிகம் வரும்
 அதே போல விரக்தியும் சலிப்பும்,அதிகம் உண்டாக்கும் முன்பு போல வேகம் இருக்காது..காரணம் ராசியில் இருக்கும் கேதுதான்...
7ல் சனி இருந்தா துணையுடன் மனத்தாங்கல் இருந்துக்கிட்டே இருக்கும்..
வாக்குவாதம் ஓயாது..
என்ன செய்றது பங்குனி வரை நிலைமை அப்படித்தான்..கூட்டாளி கண்டிப்பா நாமம் போடுவான் எச்சரிக்கை அவசியம்..
வாகனங்களில் செல்கையில் கவனமா இருங்க..
மருத்துவ செலவுக்கு குறைவே இல்லாத காலம்..
பெண்களிடம் எச்சரிக்கையா இருங்க...
அறிமுகம் இல்லாத ஒரு புதிய ஆண் /பெண் நட்பு கிடைக்கப்போகுது அதன்மூலம் சிக்கலும் வரப்போகுது..
ராசிக்கு அதிபதி செவ்வாய் வலு இல்லாம கடகத்தில் நீசமா செல்லாக்காசா இருக்கார் உங்க செல்வாக்குக்கு பங்கமான காலம்..
வீண் வீராப்பு,சவால் விட்டால் தலையில் முக்காடுதான்.
.பணம் தண்ணீராய் செலவழியும்..
முருகனை வழிபடவும்

No comments:

Post a Comment