Thursday, 10 October 2013

உதடு கறுப்பு மறைய!

உதடு கறுப்பு மறைய!



உதடுகள் கறுத்தும், வறண்டும் இருந்தால் கொத்துமல்லி இலை சாற்றினை இரவு படுக்கைக்கு போகும் முன் தடவிக்கொண்டு படுக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து பாருங்கள். உதடுகள் அழகாகும். 

உங்கள் உதடுகள் கருப்பு நிறமாக இருக்கிறதா... கவலை வேண்டாம். 

தேனும், எலுமிச்சை சாறும் கலந்து தடவி வந்தால் சில வாரங்களில் உதடுகள் ரோஸ் நிறமாக காட்சியளிக்கும். 

முகப்பருக்கள் நீங்க.

பருவகோலாரால் வந்த முகப்பருக்கள் மாற வேண்டுமா? பச்சை வேப்பிலைகளை 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் ஆற விடுங்கள். 

கசப்பாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. கண்ணை முடிக்கொண்டு குடித்து விடுங்கள். குடல் பூச்சியும் சாகும், முகப்பருவும் மறையும்.

கை மூட்டு பகுதி கருப்பாக மாறி தோல் தடித்து காணப்படுகிறதா? 

கவலையை விடுங்கள். எலும்மிச்சை பழ சாரையும், கடலை எண்ணெயையும் கலந்து தடவி வாருங்கள். கறுப்பு நிறம் மாறி தோல் மிருதுவாகி விடும். 

No comments:

Post a Comment